Header Ads



இலங்கையில் இருந்து, இந்தியா செல்லும் அனகொண்டாக்கள்

இலங்கையின் தேசிய மிருகக்காட்சி சாலையிலிருந்து இந்தியாவின் மைசூர் சமராஜேந்திர விலங்கியல் பூங்காவிற்கு இரண்டு ஆண் மற்றும் பெண் பச்சை அனகொண்டாக்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இந்திய பூங்கா அதிகார மைத்தின் அனுமதியுடன், விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் அடிப்படையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

குறித்த ஊர்வனவற்றின் சுகாதார நிலைமைகள் நல்லமுறையில் உள்ளதாகவும், அவைகள் விலங்கியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் உள்ளதாகவும் பூங்காவின் இயக்குநர் சி. ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

குறித்த இரண்டு அனகொண்டாக்களும், 6 முதல் 8 அடி நீளமும், 15 கிலோ எடை கொண்டதாகவும் உள்ளது.

இதேநேரம், மைசூர் விலங்கியல் பூங்காவிலிருந்து நான்கு அரியவகை மான்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக பூங்காவின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
ஆறு ஆண்டுகளின் பின்னர் இந்த விலங்குப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.

No comments

Powered by Blogger.