May 01, 2018

அபாயா விடயத்தில் இனவாதம் கக்கும், வடக்கு கல்வியமைச்சர்

திருகோணமலை ஹபாயா சர்ச்சை  ஒரு திட்டமிட்ட அரசியல் பின்புலம் கொண்டது என வடக்கு மாகாண கல்வி  அமைச்சர் சர்வேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்றுள்ள அபாயா விடயத்தை பார்க்கும் போது காலாகாலமாக அங்கு மூவின ஆசியர்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நடைமுறைக்கு முரணாக புதிதாக வந்துள்ள ஆசிரியை அபாயா அணிந்து வந்துள்ளதுடன் புதிதாக வந்தவர் பழையவர்களையும் அபாயாவுக்கு மாற்றியுள்ளார்.இச்செயற்பாட்டுக்கு பின்புலத்தில்  திட்டமிட்ட அரசியல் தூண்டுதல் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

அவர்கள் தங்கள் சுதந்திரத்தை எங்கு பயன்படுத்த வேண்டுமோ அங்குதான் பயன்படுத்த வேண்டும்.எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. பாடசாலை மரபுகளை பாரம்பரியங்களை யாராகிலும் கடைபிடித்தே ஆகவேண்டும்.

இந்து பாடசாலைகளில் கடைபிடிக்கப்படும் மென்போக்கு அல்லது தாராள போக்கை பயன்படுத்தி அரசியல் பின்புலத்தோடு இவ்வாறான அநாகரிகமான அரசியல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.

5 கருத்துரைகள்:

போடா புண்ணாக்கு...,

உண்மையை சொன்னால் இனவாதம் என்கிறார்கள்.

கொழும்பில் உள்ள அணைந்து பெரிய பாடசால்களிலும் ஆபாயா தடைசெய்யபட்டுள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும்?. அங்கு தான் உங்கள் மினிஸ்டர்களின் பிள்ளைகளும் படிக்கிறார்கள்.

ஏன் ஆபாயா போராட்டங்களை இந்த பணக்கார பாடசாலைகளுக்கு எதிராக வைக்காமல், பின் தங்கிய பிரதேசத்தில் உள்ள ஒரு தமிழ் பெண்கள் பாடசாலையை தெரிவு செய்தீர்கள்?

ஈசியாக வெருட்டி பணியவைக்கலாம் என்று தானே?

இது கோழைதனம். It’s Unfair. You must be honest and brave, or close the chapter.


வட மாகாண கல்வி அமைச்சரின் அறிவின் ஆழம் என்னே !!! அவர் அபாயா பயன்படுத்துவது எப்போது என்று அளிக்கின்ற விளக்கம்? ஆகா என்னே அறிவு! , கல்வி அமைச்சராய் இருந்து கொண்டே, பாடசாலை சீருடை பற்றிய கல்வி அமைச்சின் சட்டங்க்களை அறியாமல் அறிக்கை விடுவது நகைப்புக்கிடமாய் இருக்கின்றது. அரசாங்கப் பாடசாலையில் மரபுகள் தான் முதன்மையானவை என்றால், முஸ்லிம் பாடசாலையில் கற்பிக்கும் இந்து ஆசிரியைகள் நெற்றிப் பொட்டு களைந்து அபாயாவுக்கு மாறத் தயாரா?. இப்படியே சென்றால் சமுகம் எங்கே செல்லும், நாடு எங்கு செல்லும் என்ற சாதாரண குடிமகனின் அறிவு கூட வடமாகாண கல்வி அமைச்சருக்கு இல்லாதிருப்பது அவர் புள்ளி இல்லாத கல்வியில் விற்பன்னரோ என்று எண்ணத் தோன்றுகிறது. "மென்போக்கும் தாராளபோக்கும் இந்து பாடசாலைகளில்" என்று அநாகரிகமாய் ஒரு முத்தாய்ப்பு வைத்தீர்களே? உங்கள் அறியாமையையும், இனவாதத்தையும் என்னவென்றுரைப்பது. ஆத்திரத்தோடு பார்க்காதே நிரபராதியும் குற்றாவாளியாய்த் தெரிவான், அனுதாபத்தோடு பார்க்காதே குற்றாவாளி கூட நிரபராதியாய்த் தெரிவான். நீதி சொல்வதாயின் நடுநிலைமையிலிருந்து நோக்கு இல்லையேல் வாயை மூடிக் கொண்டிருப்பது சாலச்சிறந்தது.

Can you pass resolution in NPC regarding violence of muslim in east??
If you can't no point publishing statements

கனம் அந்தோனீமார்களே!
நீங்கள் வணங்கும் அன்னை மரியாள் அவர்கள் அணிந்திருக்கும் ஆடையைத்தான் முஸ்லிம்கள் அணிகிறார்கள் என்பதை ஏன் உன் இருண்ட உள்ளம் ஏற்றுக்கொள்ளக்கூடாது?

Post a Comment