Header Ads



முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நடவடிக்கை எடுக்கட்டும் பார்க்கலாம் - சிவாஜிலிங்கம்

வடமாகாண சபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்க விடுவதும், தலைகீழாக பறக்க விடுவதும் எங்களுடைய பிரச்சினை அதனை நாங்கள் பார்த்துக் கொள்வோம். அதற்காக நடவடிக்கை எடுக்க முடிந்தால் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார எடுக்கட்டும் பார்க்கலாம் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தன்று வடமாகாண சபையின் கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டமை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறிய கருத்து தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

வடமாகாணசபையின் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுவதும், தலைகீழாக பறக்கவிடுவதும் எங்களுடைய பிரச்சினை. அதனை நாங்கள் பார்த்து கொள்வோம். அதேபோல் மாகாண பாடசாலைகளில் கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறும் கேட்டோம்.

அதுவும் எங்களின் பிரச்சினை அது தெரியாமல் கருத்து கூறும் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடம் நான் கேட்கிறேன் முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உங்களுடைய இந்த வெற்று திமிரு தனம் தான் உங்களை முகவரியில்லாமல் அழித்தது

    ReplyDelete
  2. Hello சிவாஜி சார், போரில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்துவது நமது உரிமை போல, அதில்கேள்விகள்/சந்தேகங்கள் கேட்பது அவர்களின் உரிமை. அதனால், இப்படி தெரு சண்டியர் மாதிரி பதில் கொடுப்பது அநாகரியம், அசிங்கம்.

    நல்ல வேளை நீங்கள் தப்பித்தீர்கள். முஸ்லிம் தலைவர் ஒருவர் இப்படி ஒரு சண்டிதனமாக அறிக்கையை விட்டிருந்தால் இந்நேரம் ஒரு ஊரயே கொழுத்தியிருப்பார்கள்.



    ReplyDelete

Powered by Blogger.