Header Ads



இஸ்லாத்துக்கு பாதிப்பில்லாத முறையில், மிரு­கங்களை அறுத்தல் பற்றி கலந்துரையாடல்


மிரு­கங்கள் அறுக்­கப்­படும் போது இரத்தம் வெளி­யேறி மர­ணிப்­ப­தற்கு நேரம் எடுப்­பதால் மிரு­கங்கள் உட­ன­டி­யாக நினை­வி­ழப்­ப­தற்கு  ஏற்­ற­வ­கையில் அவற்றை  அறுப்­ப­தற்கு பொருத்­த­மான முறை­யொன்­றினை கையாளும் வகையில் மிரு­க­பலி சட்­டத்தில் திருத்­தங்­களைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு கிரா­மிய பொரு­ளா­தார அமைச்சு திட்­ட­மிட்­டுள்­ளது.

இது தொடர்பில் கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்சின் மிரு­க­வள அபி­வி­ருத்தி மேல­திகச் செய­லாளர் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்சர் பைசர் முஸ்­த­பா­வுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் நிலைப்­பாட்­டினை கிரா­மிய பொரு­ளா­தார அலு­வல்கள் அமைச்­சுக்கு அறி­விப்­ப­தற்கு அமைச்சர் பைசர் முஸ்­தபா நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்ளார்.

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்­றுக்­காலை மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி அமைச்­சரின் தலை­மையில் நடை­பெற்­றது. இக்­க­லந்­து­ரை­யா­டலில் மாகாண சபைகள் மற்றும்  உள்­ளூ­ராட்சி அமைச்சின் செய­லாளர் கமல் பத்­ம­சிறி, அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் ஹலால் குழுவின் பணிப்­பாளர் மௌலவி இர்­பானின் தலை­மையில் மௌலவி அர்கம், மௌலவி அப்துல் ரஹ்மான், மௌலவி ரிசான் காசிம், சட்­டத்­த­ரணி அசீம், வை.எம்.எம். ஏ.யின் தேசிய பொதுச்­செ­ய­லாளர் ஆகியோர் கலந்­து­கொண்­டனர்.

மிருகம் அறுப்­பது தொடர்­பி­லான சட்­டத்­தி­ருத்­தங்கள் எவ்­வாறு அமைய வேண்டும் என்­பதை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை ஆராய்ந்து அறிக்கை யொன்­றினைச் சமர்ப்­பிப்­பது எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

சர்­வ­தேச நாடு­களில், மிரு­கங்கள் இரத்தம் வெளி­யேறி இறப்­ப­தற்கு நேரம் எடுப்­பதால் உட­ன­டி­யாக நினை­வி­ழப்­ப­தற்கு ஏற்­ற­வ­கை­யிலே பலி­யி­டப்­ப­டு­கின்­றன. அவ்­வா­றான பொறி­மு­றையை இலங்­கையில் அமுல்­ப­டுத்­தவே கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு ஆலோசித்து வருகிறது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை இஸ்லாத்துக்கு பாதிப்பில்லாத முறையொன்று தொடர்பில் ஆலோசித்து தனது அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளது.

-Vidivelli

4 comments:

  1. இதுலே என்ன மாற்றம் தேவை கலத்துல கூர்மையான கத்தியை வைத்து பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று சொல்லி அறுத்தால் அல்லாஹ் தலா அந்த மிருகத்தின் வலிப்பு கஷ்டமெல்லாம் இல்லாமல் செய்யப்படும் இதில் எந்தவிதமான மாற்று கதையேயில்லை,மேல கூறப்பட்ட விடயம் ஈமான் உள்ளவர் நிச்சியமாக நம்பியே ஆகுவர்.

    ReplyDelete
  2. புல் புல்லி சொல்லுவது அல்லாவை நம்பியவர்களிற்கு சரிவரலாம் மற்றவர்களையும் கருத்தில் கொண்டு கருத்துச் சொல்ல முயற்சி செய்ய வேண்டும்.

    ReplyDelete
  3. BULLBULLI அவர்முகளே நாம் முஸ்லீமாக மட்டுமின்றி சமூகமாகவும் வாழ முயற்சிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. இஸ்லாம் மனித வாழ்வின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லும் மார்க்கம் என்ற அடிப்படையில் உணவுக்காக அறுக்கப்படும் மிருகங்கள் பற்றியும் அது விட்டு வைக்கவில்லை.

    "(தானாகச்) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாததின் பெயர் அதன் மீது கூறப்பட்ட (அறுக்கப்பட்ட)தும், கழுத்து நெறித்துச் செத்ததும், அடிபட்டுச் செத்ததும், கீழே விழுந்து செத்ததும், கொம்பால் முட்டப் பட்டுச் செத்ததும், (கரடி, புலி போன்ற) விலங்குகள் கடித்(துச் செத்)தவையும் உங்கள் மீது ஹராமாக்கப் பட்டிருக்கின்றன; (அனுமதிக்கப்பட்டவற்றில்) எதை நீங்கள் (உயிரோடு பார்த்து, முறைப்படி) அறுத்தீர்களோ அதைத் தவிர; (அதை உண்ணலாம். அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும்; அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன) - இவையாவும் (பெரும்) பாவங்களாகும்; இன்றைய தினம் காஃபிர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பதை)ப் பற்றிய நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; எனவே நீங்கள் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சி நடப்பீர்களாக; இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்; ஆனால் உங்களில் எவரேனும் பாவம் செய்யும் நாட்டமின்றி, பசிக் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது). ஏனெனில் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், கருணை மிக்கோனாகவும் இருக்கின்றான்."
    (அல்குர்ஆன் : 5:3)
    www.tamililquran.com

    மிருகங்களை அறுக்கும்போது ஒன்று மற்றொன்றைப் பார்க்காதவாறும் அவற்றை ஆசுவாசுப்படுத்தி, எளிய முறையில், கூர்மையான கத்தியால், விரைவாக, கழுத்தைச் சுற்றியுள்ள நரம்புகளை அறுத்து ரத்தம் விரைவாக வெளியேறச் செய்ய வேண்டும்.  இரத்தம் வெளிவெறி அது இறந்த பின்பே தலையைத் துண்டிக்க வேண்டும். முடிந்த அளவுக்கு அதன் வலியைக் குறைக்க முயல வேண்டும்.  இவை நபிகளார் வழிமுறை.

    ஹலால்=அனுமதிக்கப்பட்டது
    ஹராம்=தடுக்கப்பட்டது

    ReplyDelete

Powered by Blogger.