May 31, 2018

கிறிஸ்த்தவ சகோதரர், முஸ்லிம்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கிறார்..

''அஸ்லாமு அலைக்கும்! 

எல்லாபுகழும் அல்லாஹா ஒருவனுக்கே!''

லோரன்ஸ் என்னும் நான் நோர்வே நாட்டில் வாழும் கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவன். 

எனது பூர்வீகம் இலங்கை, மன்னார் மாவட்டம். நான் இஸ்லாம் பாடசாலையில் கல்வி கற்றவன் எனவே எனக்கு இஸ்லாம் மதத்தின் மீதும், இஸ்லாம் மக்கள் மீதும் பெரும் மதிப்பு வைத்துள்ளேன். 

எனக்கு தெகிவலையில் வீடு ஒன்று உள்ளது. அதனை நான் ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு வாடகைக்குவிட்டேன். பல இந்துக்கள். சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள் என்னிடம் வாடகைக்கு கேட்ட பொழுது, முஸ்லிம் மக்கள் அல்லாஹவுக்கு அடிபணிந்தவர்கள் என்ற ஒரே காரனத்தால் ஒரு முஸ்லிம் மகனுக்கு  குறைந்த விலைக்கு வாடகைக்கு கொடுத்தேன். பின்னர் வீட்டை விற்க முடிவு செய்தேன்.  

அதனை அவரே வாங்குவதாக சொல்லி பல மாதங்கள் வங்கிகள் சென்று முயற்ச்சி செய்தார். நானும் அவருக்காக நான்கு மாதம் எனது வேலையை விட்டு, இலங்கையில் தங்கி இருந்தேன். இரண்டு வருடங்களாகைவிட்டது. இப்பொழுது எனது டாக்டர் மகளுக்கு கல்யாணம் கொழும்பில் சரிவந்துள்ளது. சீதனமாக அந்தவீட்டை கேட்கின்றார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். 

கல்யாணம் செய்யவேண்டும், எனது வீட்டை திருப்பி தரவேண்டும் என்று கேட்டதற்கு தரமுடியாது என அடம்பிடிக்கின்றான். வாடகை இரண்டு வருடமாக தரவில்லை. 2014 ஜீலை மாதத்தில் இருந்து 2016 ஜீலை வரை வாடகை ஒப்பந்தம் இருந்தது, 2016 ஒடோபர் மாத இறுதியில் வீட்டை காலி பண்ணுவதாக அவன் மனைவி, புரோக்கர் எல்லாம் சேர்ந்து கையொப்பம் இட்டார்கள் நானும் நோர்வே வந்துவிட்டேன். இன்னமும் எழும்பவில்லை, வாடைகை இன்னமும் இல்லை. 

பத்து இலட்சம் வங்கியில் போட்டதாக சொல்கின்றான் வாடகை பணம் போக மிகுதி பணத்தை கொடுக்கின்றேன். அவரை வீட்டைவிட்டு எழும்ப சொல்லுங்கள் ஆப்பொழுதுதாச் எனது மகளின் நிக்கா (கல்யாணத்திற்கு ) தேதி குறிக்கலாம். இதனால் எனது மகளின் கல்யாண அலுவல்கள் பின்போடபட்டுக்கொண்டு வருகின்றது. 

நீதிமன்றம் சென்றால் உடனடியாக எழுப்பமுடியும் ஆனால் காலதாமதமாகும். எனக்கு எனது மகளின் கல்யாணம் முக்கியம்.. தயவு செய்து அந்த முஸ்லிம் ஆளிடம் கதைத்து எனது வீட்டை விட்டு எழுப்ப முடியுமா? நான் தெஹிவலை பொலிஸில் முறைப்பாடு செய்தேன் அவனோ பொலிஸிற்கே லஞ்சம் கொடுத்துள்ளான். அதனால் பொலிஸ் பாராமுகமாக இருக்கின்றார்கள். 

இந்த உதவியை நான் உங்களிடம் பணிவாக கேட்கின்றேன். 

நான் நோர்வே லண்டன் போன்ற நாடுகளில் மீடியாவில் பணிபுரிகின்றேன். இலங்கை முஸ்லிம் மக்களின் நேர்மை பற்றி நான் எழுதமுடியும். ஒரு நபருக்காக இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவிக்க எனக்கு விருப்பம் இல்லை. இஸ்லாம் மதத்தின் மீது உங்களுக்கு பற்று இருந்தால். அலாஹவின் பெயரில் எனக்கு நியாம் பெற்று தரவேண்டும் என்று அன்போடு கேட்கின்றேன். 

லோரன்ஸ்

பிற்குறிப்பு - 

குறித்த வீட்டில் தற்போது இருப்பவரின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய எமக்கு கிடைத்தன. தேவைப்படுமிடத்து அவற்றை பிரசுரிக்க நாம் தயார்.

அதேவேளை குறித்த கிறிஸ்த்தவ சகோதரருடைய மனவேதனையும் எமக்கு புரிகிறது.

எனவே குறித்த கிறிஸ்த்தவ சகோதரருடைய வீட்டிலிருந்து அந்த முஸ்லிம் சகோதரர் வெளியேறுவதே நீதியானது...

14 கருத்துரைகள்:

Publish that Muslim man's details . No need to hide .

Lawrence is a wonderful human.
I wish I could get rid of that thorn in our religion....

எருக்கலம் பிட்டி மு. ம.வி.?

இன்னொருவனின் உழைப்பையும் சொத்தையும் அபகரிப்பதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்க போவதில்லை இந்த நபருக்கு கண்டிப்பாக நியாயம் கிடைக்க வேண்டும். விடயத்தை கொஞ்சம் ஆராய்ந்து அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் குறித்த முஸ்லிம் நபரின் பெயர் தொலைபேசி இலக்கங்களை ஜப்னா இணையம் கண்டிப்பாக பிரசூரிக்க வேண்டும்

தெஹிவளை பள்ளிவாசல் நிர்வாகம் இதில் தலையிட்டு சரியான நீதியை இந்த விடயத்தில் நிலைநாட்டுவார்கள் என்று நம்புகிறோம். Jaffna Muslim இந்த விடயத்தை தீர விசாரித்து இப்பிரச்சினை சுமுகமாக தீர்த்துக் கொள்வதட்கு அதனால் முடிந்த முயட்சியை மேட்கொள்ளும் என்று நம்புகிறோம்.

விடயத்தை சரியாக ஆராய்ந்து பாதிக்க பட்டவருக்கு நீதி பெற்றுக்கொடுக்க வேண்டும்,

அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவன் தான் உண்மையான முஸ்லிம், இது விடயத்தில் ஜப்னா முஸ்லிம் தெகிவளைப் பள்ளி நிருவாகத்துடன் தொடர்பு கொண்டு உண்மை நிலை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதே தருமம்.

I think Mr. Lawrence should get the help of a politician on this matter to evict the cheat. At the same time, get Dehiwela Muslim masjid trustees help to resolve this.

THE MUSLIM CONCERNED SHOULD HAND BACK THE HOUSE WHICH DOES NOT BELONG TO HIM BEFORE THE FASTING SEASON IS OVER, AND ASK FORGIVENESS FROM ALLAH SUHANUA WA'TAALA.

This is an act of Hypocrisy, please investigate the matter and take some severe action against him.

It's outright haram. Jaffna Muslim is responsible to do the balance part of its duty to check on the legitimacy of the above claim and elevate to the necessary levels. Also, if the claim is legitimate its a crime to hide the identity of the Muslim fellow by any chance. Acts of few like these taints a bad image on the community itself.. Mr. Lorance has a conscience to write like this, however, how many others will act the same..

JAFFNA MUSLIM CAN HANDLE THIS ISSUE & ALSO BR.LAWRENCE HAVE TO INFORM TO DEHIWELA GRAND MOSQUE TOO.

இது உண்மையெனில், இவருக்கு உதவிசெய்ய முன்வந்த JM மும், இதனை ஆதரித்து comments எழுதிய முஸ்லிம் நண்பர்களும் பராட்டபடவேண்டியவர்கள். Well done.

முறைப்பாட்டாளரின் கருத்து மட்டுமே இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது,இரு தரப்பினருக்குமிடையில் இருந்த ஒப்பந்தம் என்ன,இதற்கான நிபந்தனைகள் என்ன.நிபந்தனைகள் யாரால் மீறப்பட்டுள்ளது?இதற்கான பரிகாரம் போன்றவை ஆராயப்படவேண்டும்.இங்கு உமர் (ரழி) அல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒற்றைக்கண்ணுடன் வந்து தன கண்ணை கெடுத்துவிட்டான் என்ற ஒரு சம்பவத்தை நினைத்துப்பாருங்கள்,பின்னால் வருபவன் சில வேளை இரு கண்களும் இல்லாமல் வரலாம், சகோதரர் லோரன்ஸ் குறிப்பிடுவது உண்மையென நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவரிடம் இருந்து குறித்த நபரின் வீடும்,அவர் குறித்த காலத்திற்கு செலுத்த வேண்டிய வாடகையையும் எம்மவர்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

Post a Comment