Header Ads



புனித இஸ்லாத்துக்குள் நுழைந்த, தேவையுடைவர்களை அடையாளம் கண்டு உதவி


புனித இஸ்லாத்துக்குள் நுழைந்த தேவையுடைவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கான உதவி வழங்கும் விழா தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக  இம்மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்றது.  

எந்த முகவர்களும்  இல்லாமல், எந்த அமைப்புகளின் பங்களிப்பும் இல்லாமல் தமது  அங்கத்தவர்களின் சொந்த பணத்தின் மூலமாக வெற்றிகரமாக இந்த முயற்சியை jaffna 76 புத்தளம்  தில்லையடி சதாமியா புரத்தில்  நிகழ்த்தியது.

இந்த நிகழ்வில் இஸ்லாத்தில் இணைந்த
தேவையுடைய   குடும்பங்களுக்காக முதல் பத்து நோன்புகளை நோற்க கூடிய வகையிலான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் உள்ளடக்கிய உதவிகள்  விநியோகிக்கப்பட்டன .

90 குடும்பங்களுக்கு இவ்வாறு வழங்கப்பட்ட உலர் உணவு பொதிகளை jaffna 76 அமைப்பின் அங்கத்தவர்கள் திறம்பட செய்திருந்தனர் .இந்த நிகழ்ச்சியை jaffna 76 அமைப்பின் உறுப்பினர் மௌலவி அப்துல் மலிக் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார் .

இந்த நிகழ்வில் jaffna 76 அங்கத்தவர்களான லஹீர் ,சுனைஸ் ,ரூமினாஸ் ,ரிஷ்வான் , ரிஸ்ணி ,ரியாஸ்  ,ரஜப் மற்றும் பல அங்கத்தவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர் .

jaffna 76 அமைப்பின் இதுபோன்ற சமூக வளர்ச்சி முயற்சிகள் , பணிகள் தொடந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


1 comment:

Powered by Blogger.