Header Ads



அடுத்த ஜனாதிபதி தேர்தலில், ஒரே அணியாக களமிறங்கும் பேச்சு ஆரம்பம்

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலும் ஓரே முன்னணியில் களமிறங்குவதற்கு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் இன்று -09- இடம்பெற்ற அச்சு மற்றும் இலத்திரனயியல் ஊடகவியலாளர்களுடான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஒரே அணியாக களமிறங்க தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் இணக்கத்தினை தெரிவித்துள்ளன.

எனினும் சிலரின் முரண்பட்ட கருத்துக்களினால் இரண்டாவது கட்ட பேச்சு வாரத்தைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

ஒரே முன்னணியின் கீழ் களமிறங்குதவற்கான முதலாம் கட்ட பேச்சு வார்த்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்றது.

இந்நிலையில், இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை நாளைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கு இடையில் இடம்பெறவுள்ளது.

நடைமுறையில் காணப்படுகின்ற தேசிய அரசாங்கத்தினை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை நீடிப்பதற்கான முயற்சிகளின் ஒன்றாகவே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

அது மாத்திரமின்றி நாட்டில் குடும்ப ஆட்சியினை இல்லாது ஒழிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.