Header Ads



கொதித்தாறிய நீரை அருந்துங்கள்

வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு மத்தியில் தொற்றுநோய்களைத் தடுக்க பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

வயிற்றோற்றம் முதலான நோய்களைத் தவிர்ப்பதற்காக கொதித்தாறிய நீரைப் அருந்துமாறு தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.

அத்துடன், சீரற்ற வானிலை காரணமாக சுவாசம் சார்ந்த நோய்கள் மற்றும் எலிக் காய்ச்சல் என்பன பரவும் அபாயம் தொடர்பிலும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வெள்ளநீர் உட்புகுவதனால் கிணறுகள் அசுத்தமடைந்துள்ளன.

எனவே, சுத்தமான குடிநீரையோ அல்லது கொதித்தாறிய நீரையோ பருக வேண்டும்.

ஏனெனில், நீரின் மூலம் நோய்கள் பரவும் நிலைமையே அதிகளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காய்ச்சல் தடிமன் உள்ளிட்ட நோய் நிலைமைகள் ஏற்படுமாயின் உடனடியானக மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தொற்றுநோய் ஒழிப்பு பிரிவின் விசேட வைத்தியர் பபா பலிஹவதன தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.