Header Ads



ரணிலுக்கு எதிரான பிரேணை தோல்வியடைய, மங்களவே காரணம் - தயாசிறி

அமைச்சர் மங்கள சமரவீரவின் தலையீடு காரணமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்ததாக முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சிக்குள் இருந்த பிரச்சினையான நிலைமையில் அந்த கட்சியை சேர்ந்த 28 நாடாளுமன்ற உறுப்பினர்களை இலகுவாக நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு சார்பான நிலைப்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தது.

வெற்றி நெருங்கி வரும் வேளையில், அமைச்சர் மங்கள சமரவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 8 அமைச்சர்களளுடன் தனது வீட்டில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தி அவர்களை நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்த அமைச்சர்களின் முடிவால் 28 பேர் தமது தீர்மானத்தை மாற்றிக்கொண்டனர். அவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியே ஆட்சி நடத்தும்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை சேர்ந்த 8 முக்கிய அமைச்சர்களின் இந்த தீர்மானம் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சியின் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுதியில் பிரதமரை பாதுகாக்கும் வகையில் வாக்களித்தனர்.

அனைத்தும் எண்ணிப்பார்க்காத முடியாதபடி முடிவுக்கு வந்தது. எனினும் நான் உட்பட 16 பேரும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும் என்று அறிந்தே ஆதரவாக வாக்களித்தோம்.

ஐக்கிய தேசியக்கட்சியும் பிரதமரும் மேலும் வலுவடைந்ததே இறுதியில் நடந்து முடிந்தது எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.