Header Ads



முஸ்லிம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள, அதிரடித் தீர்மானம்

பாடசாலைகளின் ஒழுக்க விழுமியங்களை சீரழிக்கும் வகையில் மாணவர்களுக்கு அநாகரிகமாக சிகை அலங்காரம் செய்யும் சிகையலங்கார நிலையங்களின் அனுமதி உடனடியாக இரத்து செய்யப்படும் என காத்தான்குடி நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அறிவித்துள்ளார்.

காத்தான்குடி நகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள், ஊழியர்களுடனான கலந்துரையாடல் நகர முதல்வர் தலைமையில் நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை முதல்வர், சிகையலங்கார நிலைய உரிமையாளர்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி யூ.எல். நஸுர்தீன், காத்தான்குடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

7 comments:

  1. இது ஒரு நல்ல விடயம் இல்ல. அவங்க அவங்கட தொழில செய்றாங்க. நம்ம கேக்குற மாதிரி முடிய வெட்டுவாங்க. பெருமாபாலன முடி வெட்டும் சகோதரர்கள் அந்நிய மதத்தை சேர்ந்தவங்க. அவங்களுக்கு ரூல்ஸ் போடுறத விட்டுட்டு நம்ம மார்கத்துல எப்பெடி செல்லி இருக்கோ அப்படி நாமதான் கேட்டு முடிய வெட்டனும்.

    ReplyDelete
  2. இந்த விடயம் ஒரு சர்ச்சைக்குரிய விடயமாக மாறுவதட்கு நிறைய சந்தர்ப்பங்கள் உண்டு. இந்த முடிவு சிகை அலங்கார தொழிலாளர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கலாம். இது விடயமாக சிகை அலங்கார தொழிலாளர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாமே ஒழிய, அவர்களது தொழில் செய்யும் உரிமையை தடை செய்வது என்பது அவர்களது தொழில் செய்யும் உரிமையை மறுப்பதாக கருதப்படலாம். பாடசாலையும், மாணவர்களும், பெற்றோரும் பார்த்துக்கொள்ளும் விடயமாக இருப்பதுவே சிறந்தது. இது சம்பந்தமாக சட்டவல்லுனர்களின் ஆலோசனை பெறப்படுவதும் சிறந்ததாக அமையும் என எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  3. முன்மாதிரி அரசியல்!

    ReplyDelete
  4. இப்னு உமர்(ரலி) வழியாக ஸாலிம் அறிவிக்கும் நபிமொழி:

    'உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள் தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள்.

    தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப் படுவார்.

    ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப் படுவான்.

    ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்.

    ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.'

    'ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான்'
     
    ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 11. ஹதீஸ் எண் 893
    www.tamililquran.com/hathees

    ReplyDelete
  5. இது மாணவர்களுக்கு அறிவுடுத்தப்பட வேண்டிய விடயம் London ல் சில பாடசாலைகளில் சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளார்கள் அதற்குள் சிகைஅலங்காரங்களும் அடங்கும்

    ReplyDelete
  6. யஹூதிகளின் கலாச்சாரம் இஸ்லாத்தில் நுளைய வளிவகுப்பவர்களை தலையை வெட்டியேனும் குறைக்கவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.