Header Ads



ஆஷிபாவின் வழக்கு, வேறு நீதிமன்றத்திற்கு மாற்றம்

காஷ்மீரின் கத்வா பகுதியில் 8 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ஒரு நீதிமன்றத்துக்கு மாற்றி இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.


இறந்த சிறுமி நாடோடி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்.

தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கும் குற்றம் சுமத்தப்பட்ட எட்டு பேரும் இந்துக்கள்.

உள்ளூர் சமூகம் வகுப்பு ரீதியாக பிளவுபட்டிருப்பதால் ஜம்மு காஷ்மீரில் விசாரணை நடைபெற்றால் அது நியாயமாக இருக்காது என்று இறந்த சிறுமியின் குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.

மாநிலத்தை ஆளும் பாஜக உள்ளூர் தலைவர்கள் சிலர் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பங்கேற்றனர். இதனால் பாஜக மீது விமர்சனங்கள் எழுந்தன. இறந்த சிறுமியின் குடும்பத்தின் சார்பில் வாதிடும் பெண் வழக்குரைஞர், தாம் இந்த வழக்கில் ஆஜராவதால் தம்மை வன்புணர்வு செய்து கொல்லப்போவதாக மிரட்டல்கள் வந்ததாகத் தெரிவித்தார்.

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கும், சாட்சிகள் மற்றும் வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.