Header Ads



கண்டி கலவரத்திற்கு ஒத்துழைத்தவர்களுக்கு, நடவடிக்கை எடுக்கப்படும்

கண்டி இனக்கலவரத்திற்கு எந்தவகையிலும் ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உள்நாட்டலுவல்கள்  அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

கண்டி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று(13) நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது. சிலர் கூறலாம் தாம் எந்தக் குற்றமும் செய்யவில்லை, பாதையில் இருந்த போது கைது செய்யப்பட்டதாக. அறிந்து கொள்ளுங்கள். குற்றச் செயல்கள் இடம்பெறும் இடங்களில் கூட்டங்களாக சேர வேண்டாம். அவ்வாறான வேளைகளில் வீடுகளிலிருந்து வெளியேற வேண்டாம். சம்பவ இடங்களில் கூட்டம் கூடுவதும் அசம்பாவிதங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவே அமையும்.

பிணை வழங்காது கைது செய்யப்பட்டாலேயே இந்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க அரசாங்கத்தினால் முடியும். எதிர்காலத்திலும், இனவாத சம்பவங்களுடன் யாராவது தொடர்புபட்டால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

-Dc-

1 comment:

  1. இதைத்தான் காலம் காலமாக சொல்லிக்கொண்டு இருக்கின்றீர்கள் மக்களுக்கும் கேட்டுக் கேட்டு பழகிப்போய்ட்டு 83 தமிழ் கலவரம் முதல் 2018 முஸ்லிம் கண்டி திகனவரை நடந்த இனவாதச்செயல் செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் இல்லை நிதியும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.