Header Ads



என் மீது குற்றம் சுமத்துவோர் ராஜதுரோகிகள் - கோத்தபாய

ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் கடத்திச் சென்று தாக்கப்பட்டமை, பிரகீத் எக்னேலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, வெலிகடை கைதிகள் படுகொலை உட்பட குற்றச் செயல்கள் சம்பந்தமாக தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாகவும் இவை குறித்து பேசும் மற்றும் விசாரிக்கும் அனைவரும் “ராஜதுரோகிகள்” என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பொய்யான, தவறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது பெரிய தவறு எனவும் இவற்றுக்கு எப்போதாவது அவர்களுக்கு தண்டனை கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எனது தொலைபேசி அழைப்புகளின் பின்னாலும் தொடர்கின்றனர். இது மிகவும் ஆச்சரியமான விசாரணை. பொலிஸாருக்கு பயிற்சி வழங்கியது யார் என்று தெரியவில்லை.

இவர்கள் எனக்கு கீழும் பணியாற்றியவர்கள் என்பது கவலைக்குரியது. பொய்யான கதைகளை புனைந்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர். இவர்கள் ராஜதுரோகிகள். இந்த விடயத்தில் சில அரச சட்டத்தரணிகள் மிகவும் அசிங்கமாக நடந்துக்கொள்கின்றனர். அந்த அளவுக்கு இவர்கள் கீழ் மட்டத்தில் விழுந்துள்ளனர்.

சட்டமா அதிபர் திணைக்களம் மீது எப்படி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இவற்றுக்காக என்றாவது இவர்களுக்கு தண்டனை கிடைக்கும். கீத் நொயார் வழக்கில் தொலைபேசி அழைப்பொன்றை அடிப்படையாக கொண்டே என் மீது குற்றம் சுமத்தப்படுகிறது.

சம்பவம் குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டால், அது தொடர்பில் செயற்படாமல் என்ன செய்ய முடியும். நான் சென்று விசாரணை நடத்த வேண்டுமா? கீத் நொயரை காப்பாற்றியது தான் என சபாநாயகர் தற்போது கூறுகிறார்” எனவும் கோத்தபாய ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.