Header Ads



முஸ்லிம்களுடன் இணங்கி போனாலே வடக்குகிழக்கு இணைப்பு சாத்தியம் என நான் கூறினால், அந்த உறவை வேண்டாம் என்கிறார்கள்

வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சில கிழக்கு தமிழ் மக்கள் கோர ஆரம்பித்துள்ளார்கள். வெகு விரைவில் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ‘ தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்’ எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண முதலமைச்சர் யார்? என கேட்டார்கள். நான் அதற்கு திருப்பி ஒரு கேள்வி கேட்டேன். கிழக்கு மாகாண சபை செயலிழந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வைக்க அழுத்தம் கொடுப்பீர்களா ? கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் ? என ஏன் ஒரு ஊடகம் கேள்வி எழுப்பவில்லை ? உங்களுக்கு கிழக்கு மாகாணம் தேவையில்லையா ? வடகிழக்கு இணைப்பு தேவையற்றது என இவர் கூறினார் என கோடிட்டு காட்டி கொண்டு இருப்பது தான் உங்கள் வேலையா ? என கேட்டேன்.

அதற்கு அவர்கள் இந்த பதிலை மறுநாள் ஊடகத்தில் எழுதி இருக்க தானே வேண்டும், நாங்கள் இப்படி கேட்டோம். அவர் இப்படி கூறினார் என ஒரு ஊடகமும் அதனை பிரசுரிக்க வில்லை

கிழக்கு மாகாணத்தில் இவர்களுக்கு உள்ள கரிசனை இல்லை. ஆனால் வடகிழக்கு இணைப்பு வேண்டும். இன்றைக்கு முஸ்லீம் மக்கள் தான் வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என்கிறார்கள். தற்போது கணிசமான தமிழ் மக்களும் வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டாம் என சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். வெகு சீக்கிரம் பெரும்பான்மையான கிழக்கு தமிழ் மக்களும் வடகிழக்கு இணைப்பு வேண்டாம் என கோருவார்கள்.

கோசத்திற்கு மட்டுமே வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டும். இணைக்க விருப்பமான நாங்கள் அதற்கான சாத்தியங்களை நோக்கி நகரும் போது , தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுடன் இணங்கி போனாலே வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் என நான் கூறினால் அந்த உறவை வேண்டாம் என்கிறார்கள்.

இப்போதைக்கு சத்தியம் இல்லை என்று கூறினேன். அதில் இப்போதைக்கு என்பதனை விட்டு விட்டு சாத்தியம் இல்லை என போட்டார்கள். இப்பவும் சொல்லுறேன். அந்த உறவு மேம்பட வேண்டும். மேம்பட்டால் தான் அது சாத்தியமாகும். என தெரிவித்தார்.

9 comments:

  1. வடக்கு கிழக்கு தமிழரின் மரபு வழி மாநிலம். இணைக்க முடியாதென கூற சிவன் அல்ல எமனே வந்தாலும் இணைத்தே தீருவோம். மீறி தலையிட உனக்கு மட்டுமல்ல எவனுக்கும் உரிமை கிடையாது வந்தேறி முஸ்லிம்கள் உட்பட. கிழக்கில் அதிக வாக்குகள் பெரும் கருணாவே பழையவற்றை மறந்து வட கிழக்கிட்கு ஆதரவு கரம் நீட்டுவேன் என உறுதிபட தெரிவித்துள்ளார். இப்பொழுது தான் திருகோணமலை உட்பட அணைத்து மாவட்டங்களிலும் வாழும் தமிழ் மக்களும் இணைப்ப்பின் அவசியத்தை புரிந்து கொண்டு வருகின்றார்கள்.

    ReplyDelete
  2. North East merger is only a mirage.

    Very soon Tamils will boycott North East merger nonsense and forget.

    Mr Sumanthiran, you know the reality.

    Congratulations - Mr Sumanthiran.

    ReplyDelete
  3. வடக்கு கிழக்கு இணைவு ஒரு போதும் நடைபெறாது,முடிந்தால் போராடி பாருங்க

    ReplyDelete
  4. Anusath, hahaha..Sivan..and devil...

    ReplyDelete
  5. ​ஏய் சந்திரபால், நீங்க மட்டும் வானத்திலிருந்தா விழுந்திங்க. நீங்களும் வந்தேறு குடிகள்தான்.

    ReplyDelete
  6. @Yakoob MMM
    நீங்கள் இலங்கை வரலாறு தெரியாதவரா? இயக்கர் நாகர் என்றால் யாரென தெரியுமா? போய் படித்துவிட்டு வாருங்கள். தேவைப்பட்டால் சொல்லுங்கள் ஆதாரங்களை தாரோம் நீங்கள் படித்து மகிழ.

    ReplyDelete
  7. அப்போ பௌத்தர்கள் நாட்டில் பெரும்பான்மையாகும்வரை நாகர்கள் நாகப்பாம்பா ஆட்டினர்?

    ReplyDelete
  8. உலகில் முதல் கால் பதித்த மனிதர் ஆதம் நபி, அவர் ஒரு முஸ்லிம். அதற்கு பிறகுதான் மற்றதெல்லாம்.
    டார்வினின் பரிணாமம் என்பது கொள்கையே தவிர விதியல்ல (கொள்கை மாறலாம் விதி ஒரு போதும் மாறாது).
    ஐயறிவு படைத்த நாகா பாம்பு, ஆறறிவு படைத்த மனிதனுக்கு எப்படி கடவுளாக முடியும்.
    ஹிந்து வேதங்களான ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் ராமா-ராவணன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதா?
    கண்டவன் எழுதிய காவியமெல்லாம் பின்பற்றுவது மடமையின் உச்சமடா?
    ஹிந்து என்ற சொல்லே அல்-ஹிந்த் என்ற அரபு அல்லது பாரசீகச்சொல் என்பது தெரியுமாடா? சந்திரபாலடா!

    ReplyDelete
  9. @Imran
    நம்பிக்கை துரோகங்களுக்கு உள்ளானார்கள். அன்று முஸ்லீம் என ஒரு இனம் இருந்திருக்கவில்லை இலங்கையில். முஸ்லீம் எனும் இனம் உருவாக வித்திட்டவர்கள் நாகர். இறுதியில் துரோகங்களாலும் சதிகளாலும் வீழ்த்த பட்டார்கள். அதுதான் அவர்களின் வழித்தோன்றல்களான நாங்கள் எதையும் விடுகொடுப்பதட்கு தயாரில்லை. இப்பொழுதுகூட 3% இருந்த முஸ்லிம்கள் எவ்வாறு வெறும் 40 வருடங்களில் 10% ஆனார்களோ அதேபோலத்தான் அவர்களும் விருத்தியடைந்தார்கள். அதட்கு பலிக்கடாவானது தமிழர் தான். இனி புலியாக பாய்ந்தால் தான் விடிவு என நம்பி உள்ளோம்.

    ReplyDelete

Powered by Blogger.