Header Ads



மஹாடீர் மொஹமத், வரலாற்று சிறப்புமிக்க வெற்றி - 92 வயதில் பிரதமர் ஆகிறார்

மலேசியாவில் நடந்த பொது தேர்தலில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் மஹாடீர் மொஹமத் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளார்.

92 வயதாகும் அவர், 60 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த பேரீஸான் நேஷ்னல் கூட்டணியை அண்மையில் நடந்த தேர்தலில் தோற்கடித்தார்.

ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம்சுமத்தப்பட்ட தனது அரசியல்மா ணவரும், மலேசிய பிரதமருமான நஜிப் ரசாக்கை எதிர்த்து இந்த தேர்தலில் போட்டியிட தனது அரசியல் ஓய்வை விலக்கி கொண்டு மஹாடீர் முகமத் தேர்தல் களமிறங்கினார்.

மஹாடீர் மொஹமதின் எதிர்க்கட்சி கூட்டணி 115 இடங்களை வென்றுள்ளதாக அந்நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மலேசியாவில் ஆட்சியமைக்க 112 இடங்கள் தேவையாகும்.

தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மஹாடீர் மொஹமத், ''நாங்கள் பழிவாங்க நினைக்கவில்லை; நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விரும்புகிறோம்'' என்று கூறினார்.

வியாழக்கிழமையன்று தனது பதவியேற்பு நடக்கும் என்று மஹாடீர் மொஹமத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உலகில் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களில் மிக வயது மூத்தவர் என்ற பெருமையை இந்த தேர்தல் வெற்றியின் மூலம் மஹாடீர் மொஹமத் பெறுகிறார்.

முன்னதாக, மலேசியா சுதந்திரமடைந்தது முதல் நடந்த தேர்தல்களில் இத்தேர்தல் ஒரு நெருக்கமான போட்டியாக இருக்கும் என கருதப்பட்டது.

2 comments:

  1. May God Give you good Health...

    ReplyDelete
  2. ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு போக்குவரத்து வசதிகள் எந்தளவு மேம்பட வேண்டும் என்று மஹிந்த காலத்தில் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு பாடம் எடுத்துவிட்டுப் போனார்.

    இப்போது, ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைக் களைய சட்டம் ஒழுங்கை எவ்வாறு நிலைநாட்ட வேண்டும் என்பதனை அவரிடம் போய்ப் படிக்க வேண்டிய நிலையில் இலங்கைத் தலைவர்கள் இருக்கின்றனர்.

    ReplyDelete

Powered by Blogger.