Header Ads



இலங்கை முழுவதும், உயிரை பறிக்கும் ஆபத்தான வைரஸ் - 8 சிறுவர்கள் மரணம்

இலங்கை முழுவதும் உயிரை பறிக்கும் ஆபத்தான வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுளள்தாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

தற்போது தென் மாகாணத்தில் பரவி வரும் வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவுவதற்கு முன்னர், உடன் நடவடிக்கை எடுக்க என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் மாத்திரம் இதுவரையில் 8 சிறுவர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நோய்க்கான சிகிச்சை நடவடிக்கைக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வைத்திய செயலாளர் கன்சித்த சமரரத்ன தெரிவித்துள்ளார்.

முழுமையாக முயற்சித்தால் இரண்டு வாரங்களுக்கு இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கராப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்திய செயலாளர் கன்சித்த சமரரத்ன இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

No comments

Powered by Blogger.