May 11, 2018

முஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்

முஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது  சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ­டத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் பாதிஹ் கலா­பீ­டத்தின் பணிப்­பா­ள­ரு­மான கலா­நிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தெரி­வித்தார்.

உடு­நு­வர மீவ­ல­தெ­னிய மஸ்­ஜிதுல் ஹுதா ஜும்ஆ பள்­ளி­வா­சலில் நடை­பெற்ற பைதுல்மால் நிதி­யத்தின் அங்­கு­ரார்ப்­பண வைப­வத்தில் விசேட பேச்­சா­ளராகக் கலந்து கொண்டு அவர் உரை­யாற்­றினார். பள்­ளி­வாசல் தலைவர் ஓ.எல்.ஏ. ஆதம்­லெப்பை தலை­மையில் நடை­பெற்ற இவ்­வை­ப­வத்தில் வணி­கத்­துறை பயிற்­சி­யா­ளரும் ஆலோ­ச­க­ரு­மான எம். பஹ்மி பாரூக் மற்றும் அக்­கு­றணை பைதுல்மால் நிதி­யத்தின் தலைவர் ஈ.எஸ்.எச்.எம். இஸ்­ஸதீன்  ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.இங்கு கலா­நிதி எச்.எல்.எம். ஹாரிஸ் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், 

முஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் அதி­க­ரித்து வரு­கின்­றன. எமது சமூ­கத்தில் அதி­க­மானோர் நாற்­பது வய­திற்குள் மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது. கடந்த வருடம் ஜாமிஆ நளீ­மிய்­யா­வுக்கு நேர்­முகப் பரீட்­சைக்கு வந்த மாண­வர்­களில் 30 சத­வீ­த­மா­னோரின் தந்­தை­யர்கள் நாற்­பது வய­திற்குள் மர­ணித்­த­வர்கள் என்­பது அதிர்ச்­சிக்­கு­ரி­ய­தாகும். இது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும்.

சமூ­கத்தின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு பைத்­துல்மால் நிதியம் அவ­சியம். இது சமூக மாற்­றத்­திற்­கான ஓர் அடிப்­ப­டை­யாகும். சமூ­கத்தைப் பற்றி சிந்­தித்து திட்­ட­மிட்டு செயற்­படும் நிறு­வ­னங்­களால் மட்டுமே சமூகப் பிரச்­சி­னை­களைத் தீர்க்­கவும் சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் முடியும். சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்கு சமூ­கத்தில் ஒரு சாரார்  சமூகப் பிரச்­சி­னைகளை ஆராய்ந்து திட்­ட­மிட்டு செயற்­ப­டுதல் அவ­சியம்.
சமூகப் பாது­காப்பு அல்­லது சமூக உத்­த­ர­வாதம் என்­பது சமூ­கத்தின் அடிப்­படைப் பணி­யாகும். இது பற்றி அல்­குர்­ஆனும் ஹதீஸும் அதி­க­ளவில் பேசி­யுள்­ளன. சமூகப் பாது­காப்பு அல்­லது சமூக உத்­த­ர­வா­தத்தை உறு­திப்­ப­டுத்­து­வது சமூகக் கடமை மட்­டு­மல்ல சமூகப் பொறுப்­பு­மாகும். சமூ­கத்தில் தனி­ம­னி­தர்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணாது இறை­சிந்­தனை , தக்வா  பூர­ணப்­ப­டுத்­தப்­பட மாட்­டாது.

“ஈமான் கொண்­ட­வர்­களே,  நீங்கள் சுஜூத் செய்­யுங்கள், நன்­மை­யான காரி­யங்­களில் ஈடு­ப­டுங்கள், நீங்கள் வெற்றி பெறு­வீர்கள்” என்று அல்­குர்ஆன் குறிப்­பி­டு­கின்­றது.  சமூகப் பணி­களில் ஈடு­படும் வாய்ப்பு கிடைக்­கின்­ற­வர்கள்  அல்­லாஹ்­த­ஆ­லா­வினால் தெரிவு செய்­யப்­பட்ட மனி­தர்கள் ஆவர். சமூகப் பணி­களில் ஈடு­ப­டு­வது என்­பது அல்­லாஹ்­த­ஆலா அரு­ளிய அரு­ளாகும்.

முஸ்லிம் சமூ­கத்தில் ஒருவர் பாதிக்­கப்­பட்டால் அவரின் துன்­பங்­களில் மற்­றைய முஸ்லிம் பங்­கு­கொள்வான். இதற்கு அடிப்­ப­டை­யாக பைத்­துல்மால் நிதியம் அமை­கின்­றது. உலகில் ஒரு முஸ்லிம் மற்­றைய முஸ்­லி­முக்கு பிர­யோ­ச­ன­முள்­ள­வ­னாக வாழ்­வது அவ­சியம். இப்­பண்பு முஸ்­லிமின் அடிப்­படைப் பண்­பாகும். நாம் மற்­ற­வர்­க­ளுக்கு உதவும்போது அல்­லாஹ்­த­ஆ­லாவின் உதவி எமக்குக் கிடைக்­கின்­றது. 

சமூ­கத்தை பைத்­துல்மால் நிதியம் மூலம் பரா­ம­ரிக்க முடியும் என்­பதால் பைதுல்மால் நிதி­யத்தில் சமூகம் கவனம் செலுத்த  வேண்டும். ஒரு முஃமின் சமூகப் பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்­தாமல் அவன் முஃமி­னாக இருக்க முடி­யாது என்று ஸூரத்துல் மாஊன் இயம்­பு­கின்­றது. அல்­லாஹ்வின் மீது நம்­பிக்கை கொண்­டவன் சமூக விட­யங்­களில் கவனம் செலுத்­துவான். ஒரு முஸ்லிம் நல்ல காரி­யங்­களில் தன்னால் செலவு செய்ய முடி­யாத சந்­தர்ப்­பத்தில் மற்ற மனி­தனை செலவு செய்யத்  தூண்­டு­வது அவ­சியம். அல்­லாஹ்வை நம்­பு­பவன் சமூகப் பிரச்­சி­னை­களில் கவனம் செலுத்­துவான்.

சமூகப் பணி­களில் ஈடு­படும் வாய்ப்பு அல்­லாஹ்­த­ஆ­லா­வினால் தெரிவு செய்­யப்­பட்ட நல்ல மனி­தர்­க­ளூடாக நடக்கும். அல்லாஹ் மனி­தர்­க­ளுக்கு செல்­வத்தை கொடுப்­பதன் நோக்கம் செல்வம் அல்­லாஹ்வின் அடி­யார்­களின் நல­னுக்கு செலவு செய்­யப்­பட வேண்டும் என்­ப­தனா­லாகும். சமூ­கத்­திற்கு பயன்­ப­டுத்­தப்­படும் செல்வம் தொடரும். இச்­செல்வம் பயன்­ப­டுத்­தப்­ப­டாத போது அவற்றை அல்­லாஹ்­த­ஆலா எம்­மி­ட­மி­ருந்து எடுத்து மற்­ற­வர்­க­ளிடம் ஒப்­ப­டைப்பான். எமது  செல்வம் எமது திற­மை­களால் பெற்றுக் கொள்­ளப்­பட்­ட­தல்ல. இச்­செல்வம் அல்­லாஹ்­வினால் தரப்­பட்­ட­தாகும் என்­பதை மனதிற்கொள்ள வேண்டும்.
சமூ­கத்தில் வாழும் பல­வீன மனி­தர்கள் தான் சமூத்­திற்கு ரிஸ்க் கிடைக்க கார­ண­மா­ன­வர்­க­ளாவர் என்­பது இஸ்­லா­மிய கண்­ணோட்­ட­மாகும். இதில் ஏழைகள், வித­வைகள், அனா­தைகள், வயோ­தி­பர்கள், நோயா­ளிகள், விசேட தேவையுடையோர் உள்­ள­டங்­குவர். எமக்கு அல்­லாஹ்­த­ஆ­லாவின் உத­விகள் கிடைக்க சமூ­கத்­தி­லுள்ள பல­வீ­ன­மா­ன­வர்­க­ள் அடிப்­ப­டை­யாக உள்­ளனர். பைதுல்மால் நிதி அடிப்­ப­டையில் பல­வீ­ன­மா­ன­வர்­க­ளுக்­கான நிதி­யாகும். இம்­ம­னி­தர்கள் புறக்­கணிக்கப்­படும் போது அல்­லாஹ்­த­ஆ­லாவின் உதவி எவ்­வாறு கிடைக்கும் என்­பது பற்றி சிந்­திக்க வேண்டும். எனவே,  பல­வீ­ன­மான மனி­தர்கள் பற்றி அதீத கவனம் செலுத்­துவோம்.

மனி­தர்­களில் சிறந்­தவன் மனி­தர்­க­ளுக்குப் பிர­யோ­ச­ன­மா­னவன்  என்­பது நபி­மொ­ழி­யாகும். ஒரு முஸ்­லிமின் துன்­பங்­களை நீக்கும்போது அல்­லாஹ்­த­ஆலா அவனின் துன்­பங்­களை இம்­மை­யிலும் மறு­மை­யிலும் நீக்­குவான். முஸ்லிம் சமூ­கத்தில் ஒரு­வ­ருக்கு ஏற்­படும் துன்பத்தில் மற்­றைய முஸ்லிம் பங்­கெ­டுப்பான். ஒரு முஸ்­லிமின் உடலில் ஒரு அங்­கத்தில் ஏற்­படும் பாதிப்பு ஏனைய அங்­கங்­களைப் பாதிக்கும். எமது நாளாந்த கரு­மங்­களை சத­கா­வுடன் ஆரம்­பிக்கும் பழக்­கத்தை ஏற்­ப­டுத்திக் கொள்­வது அவ­சியம். ஒரு முஸ்­லிமின் அடிப்­படை பண்­பு­களில் ஒன்று மற்­ற­வர்­க­ளுக்குப் பிர­யோ­ச­ன­மா­ன­வ­னாக வாழ்­வது என்ற அடிப்­ப­டையில் பைதுல்மால் நிதி­யத்தின் செயற்­பா­டுகள் சிறந்­த­தொரு முன்­மா­தி­ரி­யாகும்.

இந்­நாட்டு முஸ்­லிம்கள் பல்­லி­னங்கள் மத்­தியில் வாழ்­வதால்  சக­வாழ்வு என்ற விடயம் முக்­கி­யத்­துவம் பெறு­கின்­றது. எனவே எமது வாழ்­வி­யலில் சக­வாழ்வை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு பைதுல்மால் நிதி­யத்தைப் பயன்­ப­டுத்த முடியும்.

எனது கலா­நிதி ஆய்­வுக்­காக நாட்டில் பல விகா­ரை­க­ளுக்கு சென்று பௌத்த தேரர்­களை சந்­தித்தேன். இதில் நான் கண்ட அனு­பவம் பௌத்­தர்­களில் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் முஸ்­லிம்கள் சுய­ந­ல­வா­திகள் என்ற மனப்­பாங்கைக் கொண்­டுள்­ளனர். இம்­ம­னப்­பாங்கை மாற்­றி­ய­மைக்க வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. நாம் பெரும்­பான்மை சமூ­கத்தின் தேவை­களை நிறை­வேற்றி அவர்­களின் உள்­ளங்­களைக் கவர வேண்டும். இதன் மூலம் சக­வாழ்வை சாத்­தி­யப்­ப­டுத்­தலாம். முஸ்லிம் சமூகம் குறு­கிய வட்­டத்­திற்குள் வாழ முடி­யாது. இவ்­வட்­டத்­திற்குள் இருந்து வெளியே­று­வ­தற்கு பைதுல்­மாலைப் பயன்­ப­டுத்­துவோம்.
இந்­நாட்­டிற்கு வந்த அபுல் ஹஸன் அல் நக்வி என்ற அறிஞர், “இந்­நாட்டில் தஃவா­வுக்­கான வாயில்கள் மூடப்­பட்­டாலும் அஹ்­லாக்­கு­டைய வாயில்கள் திறந்து விடப்­பட்­டுள்­ளன” என்று கூறினார். எமது நடத்­தைகள் , பண்­புகள் மூலம்  இஸ்லாம் தொடர்­பான பிழை­யான புரி­தல்­களை மாற்­றி­ய­மைக்க முடியும். எனவே, பைதுல்மால் வேலைத்­திட்­டத்தில் முஸ்­லி­மல்­லா­தோரும் கவனம் செலுத்­த வேண்டும்.

இஸ்லாம், மற்­ற­வர்­களில் தங்கி வாழ்­வதை விரும்­பு­வ­தில்லை. எமது தேவை­க­ளுக்கு மற்­ற­வர்­களை எதிர்­பார்ப்­பதை விரும்­பு­வ­தில்லை. இஸ்லாம்  உழைப்பை ஊக்­கு­விக்­கின்­றது. நாம் கையேந்­து­ப­வர்­க­ளாக அன்றி கொடுப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும். செல்வம் மற்றும் வச­தி­வாய்ப்­புகள்  இருந்தால் மட்டும் செலவு செய்­வது என்­ப­தல்ல. செல்வம் மற்றும் வச­தி­வாய்ப்­புகள்  இல்­லாத வேளை­க­ளிலும் மற்­ற­வர்­க­ளுக்கு செலவு செய்தால் வசதி வாய்ப்­புக்கள் வரும் போது செலவு செய்­வ­தற்­கான எண்ணம் ஏற்­படும்.  

பைதுல்மால் சதகா மூலம் நாம் பயன்­பெ­று­வது எப்­படி என்­பது பற்றி சிந்­திக்கக் கூடாது. சமூ­கத்தில் பல­வீ­ன­மானவர்­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கும் பரா­ம­ரிப்­ப­தற்கும் பல­மா­ன­வர்­களை வளர்த்து விடு­வ­தற்கும் பைதுல்மால் நிதியத்தைப் பயன்­ப­டுத்த முடியும். இந்­நாட்டு முஸ்­லிம்கள் வெளி­நாட்டு நன்­கொ­டை­களை எதிர்­பார்ப்­பது மிக மோச­மான பண்­பாகும் என்று எண்­ணு­கின்றேன்.  எமது சமூ­கத்­தி­லுள்ள செல்­வந்­தர்­களின் நிதி எமது தேவை­களை நிறை­வேற்றிக்கொள்ளப் போது­மா­ன­வை­யாகும்.

எமது சமூகம் செல்­வந்­தர்கள் மூலம் சமூகத் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­ள­வில்லை என்­ப­வ­தற்கு சிறந்த உதா­ரணம் சமூ­கத்­திற்­கு­ரிய ஊட­க­மொன்று இது­வரை உரு­வாக்கிக் கொள்­ளா­மை­யாகும். எமக்கு மத்­தியில் நளீம் ஹாஜியார் போன்ற எத்தனையோ நளீம் ஹாஜியார்கள் உள்ளனர். ஆனால் நளீம் ஹாஜியாரிடம் காணப்பட்ட மனம் இவர்களிடம் இல்லை என்பது கவலைக்குரியததாகும்.

சமூகத்தின் வயிற்றுப்பசிக்கு மட்டும் பைதுல்மால் உதவாது சமூகத்தின் சகல தேவைகளையும் நிறைவு செய்வதில் பங்காற்ற வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நோய்களில் ஒன்று போதைப்பொருள் பாவனையாகும். இப்போதைப்பொருள் பாவனையிலிருந்து இளைஞர்களை மீட்டெடுப்பதற்கு பைதுல்மாலைப் பயன்படுத்துவது அவசியம். பெரும்பான்மை சமூகத்திற்குள் வாழும் முஸ்லிம்கள் முன்னேறுவதற்குரிய ஒரே ஆயுதம் கல்வி மட்டுமதாகும். எமது பொருளாதாரங்கள் அழிக்கப்படும் போது கல்வியால் மட்டுமே எழுச்சியடைய முடியும். 

சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை செல்வந்தர்களால் மட்டும் பெற்றுக்கொடுக்க முடியாது. எனவே, சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் உட்பட சகலரும் பங்களிப்பு செய்ய வேண்டும் என்றார்.  விடிவெள்ளி

0 கருத்துரைகள்:

Post a Comment