May 08, 2018

40 பள்ளிவாசல்களை பாதுகாத்த ஆனந்தவின் இடமாற்றத்திற்கு, முஸ்லிம்கள் கண்டனம்

2018 மார்ச் 05 ஆம் திகதி கண்டி, தெல்தெனியவில் இருந்து கிரமமாக பரவிய இன வெறுப்புத் தாக்குதல்களை அடுத்து முஸ்லிம்கள் சிறு எண்ணிக்கையில் வாழும் ஊர்கள் அச்சத்தில் உறைந்தன. இச்சந்தர்ப்பத்தில் கண்டியை அண்டிய நாவலப்பிட்டிய பிரதேசம் எவ்வித சிறு அசம்பாவிதங்களும் இடம்பெறாது பாதுகாக்கப்பட்ட பின்னணியே இச்சம்பவம். 

நாவலப்பிட்டிய (மகிந்த அணி) கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் கண்டியில் தாக்குதல்கள் ஆரம்பித்த மறுதினமே நாவலப்பிட்டிய முஸ்லிம் தரப்பிலுள்ள மதத் தலைவர்கள், அமைப்புக்கள், குழுக்கள் என்பவற்றுடன், பௌத்த மத தலைவர்கள், வணிக அமைப்புக்கள், சங்கங்களையும் அழைத்து ஒரு வினைத்திறனான கூட்டத்தை நடாத்தினார்.

இதுவரை பாதுகாக்கப்பட்ட மத ரீதியான மதிப்புகளை பாதுகாப்பதுடன், நூறு வீதம் இனவாத செயற்பாடுகளில் இருந்து நாவலப்பிட்டிய பகுதியை பாதுகாக்கும் உத்தரவாதமும் அதன்போது எட்டப்பட்டது.

நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மதிப்பிற்குரிய R.D. ஆனந்த ராஜபக்ஷ அவர்களின் கட்டுப்பட்டு பிரதேசத்தில் 48 விகாரைகள், 40 பள்ளிவாயல்கள் உள்ளன. இதில் ஏராளமான மதஸ்தளங்களுக்கு விஜயத்தை ஆரம்பித்தார் அவர். முஸ்லிம்களை உறுதியாகவும், அச்சமின்றியும் வாழ தான் சட்ட ரீதியாக உதவ இருக்கும் உத்தரவாதத்தையும் வழங்கியதுடன் ஒற்றுமையுடனும், இன நல்லிணக்கத்துடனும் வாழுமாறு பணித்தார்.

பெரும்பாலும் சிங்களவர்கள் வாழும் பிரதேசமொன்றில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருப்பதாக தகவல் கிடைத்த நேரம் நள்ளிரவு 1.40 மணி. ஐந்தே நிமிடத்தில் தனது பொலிஸ் பரிவாரங்களுடன் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து  மக்களை உற்சாகப்படுத்தி, பீதியினின்றும் பாதுகாத்தார் அவர். பின்னர், பிரதேச சபை அரசியல்வாதிகள், அதிகாரிகள், குழுக்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டதுடன் உறுதியான பாதுகாப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். சட்டவிரோத சம்பவங்களின்போது தனது செயற்பாடு குறித்தும் தெளிவாகக் கூறினார். பேச்சுவார்த்தைமூலம் எதையும் தீர்க்கலாம் என்பதை அவர் ஆழமாக நம்புகின்றார்.

இந்த அர்ப்பணிப்புமிகு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு நாவலப்பிடியவில் உள்ள 15 பள்ளிவாயல்களின் தலைமைகளை உள்ளடக்கிய தலைமை நிலையமான நாவலப்பிட்டி மத்திய சபை உள்ளிட்ட அமைப்புக்கள் அவரை சந்தித்து முஸ்லிம் சமூகத்தின் சார்பான நன்றிகளை தெரிவித்து நாட்டின் சட்ட ஒழுங்கைப் பேணவும், சமய நல்லிணக்க வேலைதிட்டங்களுக்கு அவரோடு கைகோர்த்து செயற்பட எந்த நேரத்திலும் தயாராக இருக்கிறோம் என்பதனையும் உறுதியளித்தனர். அத்தோடு நன்றி கூறி எழுத்து வடிவிலும் அறிக்கையொன்றினை முன்வைத்தனர்.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த 5 வகையான அடிப்படையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறியுள்ளார்.

1,மனிதநேயம்: அனைவரும் மனிதர்களே என்ற எண்ணத்தை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைத்தல்.
2. மொழி: மொழி சார்ந்த பரீட்சயத்தை சமூகத்தில் ஏற்படுத்தல்
3. வரலாறு: வரலாற்றை கற்றல்
4. அனைத்து மதங்கள் சம்பந்தமான அடிப்படை அறிவு: இதனை மதஸ்தலங்கள் மூலம் ஊக்குவித்தல், அதற்கான பரிசுகளை வழங்கல்
5. பாடசாலைகளை ஒன்றுபடுத்தல்: சகல இனத்தவரும் ஒரே பாடசாலையில் கற்றல் எனும் கரு.

இப்படி இருந்தும், இவரால் பொறுப்பான போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசியல் சுயலாபத்துக்காக மட்டரகமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடமாற்றம் செய்வதற்கான எழுத்துமூல நடவடிக்கைகளும் நகர்வுகளும் கூட மேற்கொள்ளப்படுகின்றது. இதனை பிரதேச முஸ்லிம்கள் வன்மையாகக் கண்டிக்கின்றனர். இது சம்பந்தமான உண்மைகளை வெளிக்கொண்டு வர அப்பிரதேச முஸ்லிம்கள் சார்பில் நம்பத்தகுந்த ஒருவர் எம்மிடம் முறைப்பட்டார்.

இலஞ்ச, ஊழல் தொடர்பற்ற, மது, மாது விவகாரங்களில் ஈடுபடாத ஆனந்த ராஜபக்ஷ போன்ற நேர்மையான பொறுப்பதிகாரிகள் இருக்கும் இதே நாட்டில்தான் சட்டவிரோத செயல்களுக்கு துணைபோகும் பொறுப்பற்றவர்களும் கடமைபுரிகின்றனர். நேர்மையான அதிகாரிகளை பாராட்டுவதும், ஊக்குவிப்பதும், பாதுகாப்பதும் நாட்டினதும், சமூகங்களினதும் கடமை!

Mr. R.D. Ananda Rajapaksha
Chief inspector of police
Officer in-charge, Nawalapitiya

8 கருத்துரைகள்:

Dear Mr Ananda Rajapaksa, your living in our heart.

Great people like Mr Ananda Rajapkse lives in minds people who underwent numerous difficulties mental agony .
Our society political leaders our ulemas should recognise their efforts to bring normal situation . We should not forget their contribution during this period where most of our brothers as small group living among them

Salute for your for your respectful Service as a One Srilankan.

Let Muslims and Buddhists collectively make appeals to DIG, President and PM to allow him to serve the area for many more years.

Let Muslims and Buddhists collectively make appeals to DIG, President and PM to allow him to serve the area for many more years.

Big salute to Mr Ananda rajapaksha.
There are so many such people in sinhala and tamil communities.

Big salute to Mr Ananda rajapaksha.
There are so many such people in sinhala and tamil communities. So we muslims should getogether and try to develop good relationship with those communities.

Post a Comment