Header Ads



3 பிள்ளைகளின் வாழ்கைச்செலவை ஏற்ற, பொலிஸ்மா அதிபர்

தனது மனைவி இறந்த செய்தியறிந்து, தற்கொலைச் செய்துக்கொண்ட கொக​ரெல்ல பொலிஸ் நிலையத்தின், பொலிஸ் கான்ஸ்டபலின் 3 பிள்ளைகளின் வாழ்க்கை மற்றும் கல்வி செலவுகளுக்காக, மாதாந்தம் 30 ‌‌ஆயிரம் ரூபாவை வழங்க  பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர முன்வந்துள்ளார்.

குறித்த மூன்று பிள்ளைகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு 18 வயதாகும்வரையில், அந்த பணத்தை அவர்களின் பாட்டி வங்கியிலிருந்து எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

48 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபல் கே.பி.விமலரட்ன மனைவியுடன் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானார்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற இந்த விபத்தினால் அவரது மனைவியின் உடலுறுப்புக்கள் செயலிழந்திருந்த நிலையில் மரணமடைந்திருந்தார்.

இந்நிலையில் தனது மனைவி இறந்த செய்தியறிந்து, கே.பி. விமலரட்ன கடந்த 25 ஆம் திகதி தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. என்னமோ இவருடைய சொந்த பணத்தை கொடுக்குற மாதிரியென்னா கதை இருக்காது ,அவர் கொடுக்க தேவையில்லை அரசாங்கத்தின் திறைசேரி மூலம் கொடுத்தால் போதும்.

    ReplyDelete

Powered by Blogger.