Header Ads



35 பேரின் உயிர்களை காப்பாற்றிவிட்டு, மரணத்தை தழுவிய சாரதி

35 பயணிகளின் உயிர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்த பேருந்து சாரதி தொடர்பான தகவல்  தெரியவந்துள்ளது.

நேற்று அநுராதபுரத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அதி சொகுசு பேருந்தின் சாரதிக்கு மஹவெல – கவுடுபெலெல்ல பிரதேசத்தில் வைத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் சாரதி பேருந்தை மண் மேடொன்றில் செலுத்தி நிறுத்தி ஏற்படவிருந்த பாரிய விபத்தை தவிர்த்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும் சாரதிக்கு பேருந்தை கட்டுபடுத்த முடியாமல் போயிருந்தால் 35 பயணிகளுடன் அந்த பேருந்து பாரிய பள்ளம் ஒன்றில் வீழ்ந்திருக்க வாய்ப்பிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாரடைப்பு ஏற்பட்ட சாரதியை மருத்துவனையில் அனுமதிக்க பயணிகள் நடவடிக்கை எடுத்திருந்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் - சாலியபுர பிரதேசத்தை சேர்ந்த சாரதியே இவ்வாறு பலரின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்துள்ளார்.

1 comment:

  1. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.
    (அல்குர்ஆன் : 5:32)

    ReplyDelete

Powered by Blogger.