Header Ads



2 தமிழர்கள் ஒரு தீவை, முஸ்லிம் பிரதியமைச்சருக்கு விற்றுவிட்டதாக குமுறல்


மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட ஊரியான்கட்டு சேத்துக்குடா தீவு பகுதியை அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு தமிழர்கள் விற்றுள்ளனர்.

மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்திற்கே தனி அழகு சேர்க்கும் குறித்த தீவு பகுதி பரம்பரை பரம்பரையாக இரு தமிழர் குடும்பத்திற்கு உரித்துடையாதாக காணப்படுகின்றது.

இந்நிலையில், அண்மையில் குறித்த தீவுப்பகுதியினை மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முஸ்லிம் பிரதியமைச்சருக்கு அமைச்சருக்கு விற்றுள்ளனர்.

குறித்த இரண்டு தமிழ் குடும்பத்தின் சந்ததி வழி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளால் இவ்வாறு இந்த தீவு விற்கப்பட்டுள்ளது.

சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதி இவ்வாறு முஸ்லிம் பிரதி அமைச்சருக்கு விற்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவல் அறிந்த பிரதேச மக்கள் வாகரை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

அத்துடன், இவ்வாறு குறித்த தீவு விற்கப்பட்டுள்ளமை தொடர்பில் அப்பகுதி மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன் கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர்.

4 comments:

  1. விற்றதுக்கு ஏண்டாம்பி விசனம் தெரிவிக்கியள்
    விற்பதும் வாங்குவதும் இயல்புதானே

    ReplyDelete
  2. இனவெறியின் உச்சமா?

    ReplyDelete
  3. இப்படி முஸ்லிம்கள் முறைப்படி கொள்வனவு செய்யும் நிலங்களையே தமிழ் பயங்கரவாதம் அபகரிப்பதாக தன்னுடைய துவேசத்தை வெளிக்காட்டுகிறது

    ReplyDelete
  4. மிக்க நன்றி. போராட்டங்கள் மூலம் நிலங்களின் முக்கியத்துவத்தை இளைய தமிழ் தலைமுறைக்கு உரத்து கூற வேண்டும். நிலம் வேண்டவோ விற்கவோ யாருக்கும் உரிமை உண்டு. அதில் எதாவது கோளாறுகள் நடைபெற்றிருந்தால் சட்ட நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்க வேண்டும். ஆதாரங்கள் அற்று தெருவிட்கு இறங்குவது முட்டாள்தனம்.

    ReplyDelete

Powered by Blogger.