Header Ads



எவரெஸ்ட் சிகரத்தை தொட்டு 2 ஆவது இலங்கையர் சாதனை


இலங்கையை சேர்ந்த ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்த இரண்டாவது இலங்கையராக பதிவாகியுள்ளார். 

நேபாள ​நேரத்தின் படி இன்று (22) காலை 5.55 மணியளவில்அவர் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனது இரண்டாவது முயற்சியிலேயே அவர் 8488 மீற்றர் உயரமான எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முற்பட்டு அதனை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் இன்று அந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். 

சிகரத்திற்கு ஏறுவதற்கு போதுமான ஒக்சிஜன் இல்லாமல் போனமையே அவரால் கடந்த 2016ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தை ஏற முடியாமல் போனமைக்கு காரணமாகும். 

கடந்த 2016ம் ஆண்டு ஜொஹான் பீரிஸுடன் எவரெஸ்ட் ஏறிய ஜயந்திகுரு உதும்பொல எவரஸ்ட் சிகரத்திற்கு ஏறிய முதலாவது இலங்கையர் என்ற சாதானையை நிலைநாட்டினார்.

1 comment:

  1. உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள் சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன் ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).
    (அல்குர்ஆன் : 16:15)
    www.tamililquran.com

    ReplyDelete

Powered by Blogger.