Header Ads



முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­ 2 அரசியல்வாதிகளின் விளக்கமறியல் நீடிப்பு

கடந்த மார்ச் மாதம் கண்டி, தெல்­தெ­னிய, திகன பிர­தே­சங்­களில் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­களில் ஈடு­பட்­ட­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் இருந்­து­வரும் குண்­ட­சாலை பிர­தேச சபையின் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­முன உறுப்­பினர் இருவர் உள்­ளிட்ட 28 சந்­தேக நபர்­க­ளையும் எதிர்­வரும் 14 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க தெல்­தெ­னிய மஜிஸ்ட்ரேட் என்.எம்.பரீக்தீன் உத்­த­ர­விட்­டுள்ளார்.

மேற்­படி சந்­தேக நபர்கள் 28 பேரும் கடந்த 2 ஆம் திகதி தெல்­தெ­னிய நீதி மன்­றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­ட­போதே நீதிவான் மேற்­படி விளக்­க­ம­றியல் நீடிப்பு உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார்.

இந்­நி­லையில் சமந்த பெரேரா என்ற குண்­ட­சாலை பிர­தேச சபை உறுப்­பி­ன­ருக்­காக மன்றில் ஆஜ­ரான அவ­ரது சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சரத் பிரே­ம­கு­மார, தமது தரப்பைச் சேர்ந்­தவர் இம்­மாதம் 9 ஆம் திகதி குண்­ட­சாலை பிர­தேச சபை அமர்வில் கலந்­து­கொள்ள வேண்­டி­யுள்­ளதால் அதற்­கான அனு­ம­தியை வழங்­கு­மாறு நீதி­வா­னிடம் கேட்­டுக்­கொண்டார்.

சந்­தே­க­ந­பரின் சட்­டத்­த­ர­ணியின் வேண்­டு­கோளை ஏற்­றுக்­கொண்ட நீதிவான் குறித்த பிர­தேச சபை உறுப்பினரை சிறைச்சாலை மேலதிகாரியின் கண்காணிப்பில் மேற்படி பிரதேச சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு உத்தரவிட்டார்.

ஏ.எல்.எம்.சத்தார்

No comments

Powered by Blogger.