Header Ads



நாட்டில் கடும் மழை, பாதுகாப்பற்ற நிலையில் 15.000 குடும்பங்கள்

நாட்டில் நிலவும் கடும் மழையுடன் வானிலை காரணமாக 15 ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

நுவரெலியா, பதுளை, காலி,  ஹம்பாந்தோட்டை, பதுளை மற்றும் களுத்துறை 
மாவட்ட மக்களே இயற்கை அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், அதிக அவதானத்திற்குரிய பிரதேசங்களாக அடையாளாப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் ​நேற்று (17) இடம்பெற்றுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வருடத்திற்குள் 60 ஆயிரம் பேருக்கு, இயற்கை அனர்த்தத்தில் பாதிக்காத வகையில், சுமார் 12,000 பாதுகாப்பான வசிப்பிடங்களை அமைத்துக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, அவதான பகுதிகளில் வாழும் மக்களுக்கு 4 இலட்சம் ரூபாவை பாதுகாப்பான இடங்களை வாங்குவதற்கும், வீடுகளை நிர்மாணித்துகொள்ள 16 இலட்சம் ரூபாவை வழங்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.