Header Ads



குற்றவாளியானார் ஞானசார - ஜூன் 14 தண்டனை அறிவிக்கப்படும் - நீதிமன்றம் அறிவிப்பு

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவுக்கு ஹோமாகம நீதிமன்றத்தில் வைத்து மிரட்டியதாகக் கூறும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியென  தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று -24- ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் உதேஷ் ரணதுங்க இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

இதற்கமைய இன்று (24) தேரரின் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளவும், எதிர்வரும் ஜூன் 14ம் திகதி அவரை அடையாளப்படுத்தல் மற்றும் தண்டனை வழங்குவதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, அவரது மனைவியான சந்தியா எக்னெலிகொடவினை அச்சுறுத்தியதாக ஞானசாரருக்கு எதிராக ஹோமாகம பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. ஒரே நாளில் மூன்று வழக்குகளுக்கு பிடியாணை இருந்தவரை ஒரே நாளில் அல்ல ஒரே சில மணித்தியாலங்களில் விடுதலை பெற முடியுமாயின் தூ... இது என்ன தீர்ப்பு.... தீர்ப்பு எப்போதே எழுதியாச்சு இலங்கை சட்டம் ONLY பாமர மக்களுக்கும் இரண்டாம் தர சிறுபான்மை இனத்தவருக்கும் தான் சட்டம் தன கடமையேய் ஒழுங்காய் செய்யும்.

    ReplyDelete

Powered by Blogger.