Header Ads



10 பேர், அரசிலிருந்து வெளியேறுவார்களா..?

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி ஏற்கனவே அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேர் அணியுடன் இணைந்துக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையில், 16 பேர் அணியின் ஊடகத்துடன் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினரின் தலையீட்டில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த 10 பேர் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களாக 16 பேர் அணியுடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது காணப்படும் அரசியல் சூழ்நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருப்பதால் அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவக் கூடும் எனவும் இதனை கவனத்தில் கொண்டு அவர்கள் இந்த நகர்வை மேற்கொண்டு வருவதாக பேசப்படுகிறது.

இவர்களின் இந்த தீர்மானத்துடன் தேசிய அரசாங்கம் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பதுடன் மீதமுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணையக் கூடும் என நம்பிக்கையான அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.