Header Ads



வீதியில் கண்டெடுத்த 10 லட்சம் ரூபாய் கடிகாரத்தை, பொலிசிடம் ஒப்படைத்த இலங்கையர் - இத்தாலியில் சம்பவம்


ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையர் ஒருவரின் செயற்பாடு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இத்தாலியில் விலை மதிப்புள்ள பொருள் ஒன்றை கண்டெடுத்த இலங்கை இளைஞன், அதன் அந்நாட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் இருந்து இத்தாலி சென்று அங்கு பணி செய்யும் பிரபாத் பின்சர என்ற இளைஞரே இந்த செயலை செய்துள்ளார்.

குறித்த இளைஞனின் செயற்பாடு குறித்து இத்தாலிய பொலிஸார் மற்றும் ஊடகங்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ரோம் நகரில் தொழிலுக்காக செல்லும் போது வீதியில் இருந்து 5000 யூரோ பெறுமதியான ரோலெக்ஸ் என்ற கைக்கடிகாரம் ஒன்றை மீட்டுள்ளார். இந்த கடிகாரத்தின் பெறுமதி இலங்கை பணத்தில் சுமார் 10 லட்சம் ரூபாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இத்தாலியில் தொழிலுக்காக செல்லும் இலங்கையர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அதிகம் விமர்சிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞரின் செயற்பாடு இலங்கைக்கு பெருமை பெற்றுக்கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டியுள்ளன.

1 comment:

Powered by Blogger.