Header Ads



வருடத்திற்கு 10.000 ஆசிரியைகள் கர்ப்பமடைவு - நாளை எளிமையான ஆடை அங்குரார்பண நிகழ்வு

பாடசாலைகளில் பணியாற்றும் கர்ப்பிணி ஆசிரியர்களுக்கு எளிமையான ஆடை ஒன்றை அணிந்து செல்வதற்கான புதிய நடைமுறை ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் கல்வித் திணைக்களத்தில் இது தொடர்பான அங்குரார்பண நிகழ்வு நாளை (24) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வைத்தியர்களின் அறிவுரைகளுக்கு அமைய, பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியைகளுக்கு உடலுக்கு மிகவும் எளிமையான ஆடை ஒன்றை தமது கர்ப்ப காலத்தில் அணியும் சந்தர்ப்பம் இந்த புதிய திட்டத்தினால் வழங்கப்படுகிறது. 

இலங்கையில் 236,000 ஆசிரியகள் கடமையாற்றுவதாகவும் அதில் 172,000 பேர் ஆசிரியைகள் எனவும் இவர்களில் சுமார் 10,000 பேர் வருடம் ஒன்றிற்கு கர்பம் தரிப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அதன்படி, பாடசாலைகளில் கடமையாற்றும் கர்ப்பிணி ஆசிரியைகளுக்கு நாளை முதல் இந்த எளிமையான ஆடையை அணிய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. Good Move...

    Do not make it a must but leave it to the choice these mothers.

    Still some of them are happy with their cultural dress, which already serve the purpose and the need of pregnant mothers like HABAYA, which is lose, light , flexible for body and protect the mothers from Mosquito bites too.

    ReplyDelete

Powered by Blogger.