Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை - 100 பேர் வாக்குமூலம், 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடு

கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பில் சுமார் 100 பேர்  தங்கள் வாக்குமூலங்களை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேரடியாக பதிவு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள தீபிக உடகம, கண்டி  வன்முறைச்சம்பவங்கள் குறித்த சி.சி.டிவி வீடியோ பதிவுகளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு கோரியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"எங்களிற்கு 151 பேர் எழுத்துமூலம் முறைப்பாடுகளை சமர்ப்பித்துள்ளனர். அவர்களில் 100 பேரிடம் நேரில் பார்த்த சம்பவங்கள் குறித்த வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளோம்.

கண்டி வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டவர்களும் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

அனைத்து தகவல்களையும், தரவுகளையும் ஆராய்ந்த பின்னர் நாங்கள் அறிக்கையொன்றை தயாரிப்போம். எங்கள் அறிக்கையில் பரிந்துரைகளும் காணப்படும்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்போம்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இந்த வன்முறைகள் ஏன் இடம்பெற்றன?, யார் இதனை தூண்டினார்கள்?, அரச அதிகாரிகளும் இதில் ஈடுபட்டனரா? என்ற கோணத்தில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது." எனவும் அவர் தெரிவித்துள்ளார்

1 comment:

  1. Yes, your report will go into the Dust bin. How many reports you preapred previously. What was the action taken by them.You are wasting your time and energy.....

    ReplyDelete

Powered by Blogger.