May 31, 2018

உண்மையான முஸ்லிம் மாணவர்கள், பகடிவதை செய்யமாட்டார்கள்

இன்றைய காலகட்டத்தில் பேசுபொருளாகியுள்ள விடயம் பல்கலைக்கழகங்களில் நடக்கின்ற பகடிவதை. நிச்சயமாக பல்கலைக்கழகங்களில் ஒட்டுமொத்த மாணவர்களாலும் இந்த பகடிவதை மேற்கொள்ளப் படுவதில்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை.

பல்கலைக்கழகங்களில் ஒரு சிலர்தான் Ragging செய்கிறார்கள் ஏனையவர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்று இனவாத செயற்பாடுகளை கடந்து செல்வது போல நாம் கடந்து செல்ல முடியுமா என்றால், இல்லை என்பதே உண்மை. 

பொதுவாக பல்கலைக்கழகங்களில்இரண்டாம் ஆண்டு (2nd year) மாணவர்களே பகடிவதைகளில் ஈடுபடுவர். பகடிவதைகளினால் புரிந்துனர்வுகளை ஏற்படுத்த முடியும் என்பது முட்டாள்தனமான சிந்தனை.

புதிதாக வருகின்ற எல்லா மாணவர்களும் ஒரே மனநிலையில், ஒரே குடும்ப பின்னணியில் இருந்து வருவதில்லை. எத்தனையோ மாணவர்கள் எத்தனையோ வகையான கனவுகளுடனும் எதிர்பார்க்கையுடனுமே வருவார்கள். 

மரியாதை யாக வளர்ந்த எத்தனையோ பெண் பிள்ளைகள் பகடிவதை என்ற பெயரில் அவமானப் படுத்தப்படுவது, மாணவர்கள் மிருக வதை போல் தாக்கப்படுவது இதெல்லாம் இன்னும் எங்கோ ஒரு மூலையில்  நடந்து கொண்டுதான் இருக்கிறது. இரவு நேரங்களில் விடுதிகளில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று தங்களால் தாங்கமுடியாத செலவாகினும் எத்தனையோ மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு வெளியில்  தங்குகின்ற அவலமும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கின்றது.

பல்கலைக்கழகங்களில் நடக்கின்றன இந்த பகடிவதைகளை நிறுத்த முடியாதா? நிச்சயமாக நிறுத்த முடியும். நாங்கள் பகடிவதையை அனுபவித்தவர்கள் புதிதாக வருகின்ற மாணவர்களுக்கும் அதனை செய்வோம் என்ற குறுகிய சிந்தனைக்குள் ஆட்படாத ஒரு ஆண்டு மாணவர்கள் நினைத்தால் நிச்சயமாக அதனை நிறுத்த முடியும்.

ஒரு சிறிய உதாரணம். 
ஸ்ரீ ஜயவர்த்தனபுற பல்கலைக்கழகத்தில் முஸ்லிம் மாணவர்களை முஸ்லிம் மாணவர்கள் பகடிவதை செய்வதில்லை அத்துடன் பெரும்பான்மை மத மாணவர்களிடம் மாட்டிக் கொடுப்பதுமில்லை என்ற கலாச்சாரம் பின்பற்றப் படுகின்றது. இந்நடைமுறை ஒன்றும் 1980 களிலோ 1990 களிலோ உருவாக்கப்பட்டதல்ல. 2008/9 மாணவர்களால் தாங்கள் பகடிவதையை அனுபவித்தாலும் வருகின்ற புதிய மாணவர்களுக்கு அந்த வேதனையை கொடுப்பதில்லை என்ற அவர்களின் உயர்ந்த மணப்பாங்கின் மூலமே உருவாக்கப்பட்ட கலாச்சாரமாகும்.

பெரும்பான்மை சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் ஒரு ஆண்டு மாணவர்களால் Ragging Free கலாச்சாரத்தை உருவாக்க முடியுமானால் தமிழ் பேசும் மக்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் ஏன் அந்த கலாச்சாரத்தை அமுல்படுத்த முடியாது? 

இன்னும் இன்னும் அடுத்த மாணவர்களின் மனநிலையை அறியாது பகடிவதை என்ற பெயரில் நம்மை நாமே வதைத்துக் கொள்ள போகின்றோமா ?? பல்கலைக்கழக மாணவர்களே சற்று சிந்தியுங்கள். நமது எதிர்காலம் நம் கைகளில். படித்த சமூகம் என்பதை பெயரில் மாத்திரம் வைத்துக் கொண்டு முட்டாள்களாகவே நமது எதிர்காலத்தை எதிர் கொள்ள போகின்றோமா??

இரண்டாம் வருட (second year) மாணவர்களே!
பகடிவதை இல்லாத பல்கலைக்கழக வாழ்க்கையை எதிர்கால சந்ததியினருக்கு தாரை வார்க்க உறுதி கொள்வோம்.

Sameen Mohamed Saheeth
(University of Sri Jayawardenepura)

முஸ்லிம்களுக்கு எதிரான புலிகளின் இனச்சுத்திகரிப்பும், மாட்டிறைச்சி விவகாரமும்

-ருஷாங்கன்-

1990 ஒக்டோபர் 30

திடீரென யாழ்ப்பாண வீதிகளெல்லாம் மக்கள் கூட்டம். 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே - முஸ்லிம்களே வீதிகளை நிறைத்திருந்தனர். 

அவர்கள் ஊரைவிட்டுப் போகிறார்களாம் என்று சொல்லப்பட்டது. 

ஏன்........? 

முதல்நாள் இரவு யாழ்ப்பாணத்தில் அவர்கள் வாழும் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் உடனடியாக ஊரைவிட்டு வெளியேறுமாறு அவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததாம் என்று பிறகு அறியக்கிடைத்தது. 

கையில் ஒரு பையும், இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபா காசும் மட்டும் எடுத்துக்கொண்டு மிகுதி அனைத்தையும் விட்டுச்செல்லுமாறு அவர்களுக்குப் பணிக்கப்பட்டதாம். 

யாரும் எதுவும் கேட்கவில்லை. கேட்க நாதியற்றவர்களாக கூட்டம் கூட்டமாக எங்கள் கண்களுக்கு முன்னாலேயே அவர்கள் யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேறிச் சென்றுகொண்டிருந்தனர். 

அலுவலகங்களில் கூடப் பணியாற்றியவர்கள், கூடக் கற்பித்த ஆசிரியர்கள், மாணவர்கள், பெரும் வர்த்தக நிலையங்களின் சொந்தக்காரர்கள் என்று எல்லோருமே தம் கண்முன்னால் வெளியேறிச் சென்றுகொண்டிருப்பதை அனைவருமே மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அப்போது விரிவுரையாளராக இருந்த தமிழ்ப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் அவர்களும் இப்படியே வெளியேறியதாக பின்னர் அறியக்கிடைத்தது. 

மனிதவுரிமை பற்றி இப்போது வாய்பிழக்கும் யாழ் பல்கலைக்கழக சமூகம் அப்போது வாய்பொத்தி மௌனமாகவே இருந்தது. 

“அவர்கள்” செய்தால் சரியானதாகத்தான் இருக்கும் என்ற வரட்டு நியாயப்படுத்தல்கள் ஒருபுறம். 

“கடைக்குள்ள வாள்கள் இருந்ததாம். அவையிற்றை பெரும் திட்டம் இருந்ததாம்“ என்ற சப்புக்கொட்டல்கள் ஒருபுறம். 

நமக்கேன் வம்பு என்ற வழமையான யாழ்ப்பாணத்தாரின் செயலற்றதனம் ஒருபுறம் என்று, 

அந்த அநியாயத்தை அப்போது யாரும் தட்டிக்கேட்க முன்வரவில்லை. 

ஒரே நாளில் ஒன்றாக வாழ்ந்த ஒரு சமூகம் முற்றாக வெளியேறி அவர்கள் வாழிடங்களெல்லாம் சூனியம் கொண்டது. 

1995 ஒக்டோபர் 30

யாழ் மாவட்டத்தின் பல முனைகளிலிருந்தும் இலங்கை இராணுவத்தினரின் படை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.  

எல்லாப் பக்கங்களிலும் யுத்தம் - அழிவு - இடப்பெயர்வு அவலங்கள் தொடர்ந்தவண்ணம் இருந்தன. 

நாளுக்கு நாள் “இங்கை வந்திட்டாங்களாம், அங்கை வந்திட்டாங்களாம்“ என்று கதைகள் பரவிக்கொண்டிருந்தன. 

ஆனாலும், ”பெடியள் விடமாட்டாங்கள்” என்று சனங்கள் நிம்மதியாக காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தன. 

திடீரென ஒரு அறிவுப்பு. 

எல்லாரையும் வெளியேட்டாம். 

1990 ஒக்டோபரில் ஒரு சமூகத்துக்கு இந்தக் கட்டளையை இட்ட அதே தரப்பிலிருந்தே இந்த அறிவுப்பும் வந்தது. 

வீதிகளெல்லாம் சனக்கடல். செம்மணி வெளி மக்கள் கூட்டத்தால் மூச்சுத் திணறியது. அடிமேல் அடி வைத்து யாழ்ப்பாணத்தை விட்டுச் சனங்கள் வெளியேறின. 

நாவற்குழி வந்ததும் பெரும்பாலானவர்கள் சாவகச்சேரி நோக்கியும், இன்னும் சிலர் தச்சன்தோப்பு, கோவிலாக்கண்டி, மறவன்புலோ நோக்கியும் சென்று அடைக்கலம் புகுந்தனர். 

என்னவென்று சொல்வது? ஐந்தே வருடத்தில் அதே ஒக்டோபர், அதே 30ம் திகதி தமக்கும் இதே கதி வரும் என்று 1990ம் ஆண்டு யார்தான் நினைத்திருப்பர். 

நடந்த அநியாயத்துடன் நேரடியாகச் சம்பந்தப்படாவிட்டாலும், கண்முன்னே அநியாயம் நடந்தேறப் பார்த்துக்கொண்டிருந்த பாவத்துக்கும் அனுபவிக்கவேண்டி வரும் என்று இயற்கை பாடம் எடுத்தது, 

அந்தப் பாடத்தை நாமெல்லாம் சரியாகப் புரிந்துகொண்டோமா? 

இப்போ மீண்டும் ஒரு குரல் ஒலிக்கிறது. 
மாட்டிறைச்சிக் கடை விவகாரத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட சமூகம் வேண்டுமானால் இங்கிருந்து வெளியேறிச் செல்லட்டும் என்று ஆணவத்துடன் ஒரு குரல், அன்று யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மறுவன்புலோவிலிருந்து சாவகச்சேரி வரை ஒலிக்கிறது. 

இம்முறை ஆயுதங்கள் இல்லை. ஆயுதங்கள் ஏந்திய எந்தத் தரப்புக்களும் இதைச் சொல்லவில்லை. மதத்தின்பேரால் இப்படி ஒரு கட்டளை. 

மாட்டிறைச்சியை ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும்தான் சாப்பிடுகிறதா? மற்றவர்கள் சாப்பிடுவதே இல்லையா என்பதுபற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் இப்படி ஒரு அறிவிப்பு. 

அப்படியே ஒரு மதத்தின் மரபைப் பேண, பாரம்பரியத்தைக் காக்க விரும்புகிறோம் என்றால் அதற்கு ஆக்கபூர்வமான வழிகளே கிடையாதா? 

காந்தளகம் என்ற பெயரில் தமிழ் மக்களிடையே அறிவுபூர்வமான சிந்தனையை வளர்க்கும் எத்தனையோ நூல்களை வெளியிட்டவருக்கு இந்தப் பிரச்சினையை அறிவுபூர்வமாக அணுகத்தெரியாதா? 

பசுவதை கூடாது என்று போதித்த இதே மதம்தான் அன்பே சிவம் என்றும் போதித்திருப்பது தெரியாதவர்களா இவர்கள்? 

“வினை விதைத்தவன் வினை அறுப்பான்”

“முற்பகல் செய்யி்ல் பிற்பகல் விளையும்”

”தீதும் நன்றும் பிறர்தர வாரா”

1,50,000 பசுக்களைக் கொல்ல தீர்மானம்

மைக்ரோபிளாஸ்மா போவிஸ் எனப்படும் பாக்டீரியாத் தொற்றுநோயைத் தடுக்கும் விதமாக 1,50,000 பசுக்களைக் கொல்ல நியூசிலாந்து தீர்மானித்துள்ளது.

உலகிலேயே அதிக அளவில் பால் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் நியூசிலாந்து முதலாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பசுக்களில் நிமோனியா உள்ளிட்ட நோய்களை உருவாக்கும் ‘மைக்ரோபிளாஸ்மா போவிஸ்’ எனப்படும் பாக்டீரியா கடந்த ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கண்டறியப்பட்டது.

இந்த பாக்டீரியாவில் உணவு பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இருந்த போதிலும் நியூசிலாந்தின் முக்கிய பொருளாதாரத் தொழிலான பால் வளம் மற்றும் கால்நடை உற்பத்தியை இது பாதிக்கும்.

இதனால் பாக்டீரியாத் தொற்று கண்டறியப்பட்ட பண்ணைகளில் உள்ள பசுக்களையும் ஆரோக்கியமாக உள்ள சில பசுக்களையும் அழிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.

இது மிகவும் கடினமான முடிவு, ஆனால் இதனை செய்யாவிட்டால் நியூசிலாந்து நாட்டின் கால்நடை வளம் அழிந்து விடும். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டில் உள்ள 20000 பால் பண்ணைகள் மற்றும் மாட்டிறைச்சி நிலையங்களைக் காக்க முடியாமற்போய்விடும் என நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறியுள்ளார்.

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லை, உடனடியாக தேர்தலை நடத்துங்கள் - மகிந்த

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லையென்பது தற்பொழுது தெளிவாக விளங்குவதாகவும், பொதுத் தேர்தல் ஒன்றை நடாத்தி தகுதியான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே இதற்கான ஒரே வழி எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு, விஜேராமவில் உள்ள தனது இல்லத்தில் இன்று (31) மாலை இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதியின் நேற்றைய உரையில் அரசாங்கத்தின் நிலைமை தெளிவாக விளங்குகின்றது. பிரதமர் ஒரு பக்கமும், ஜனாதிபதி இன்னுமொரு பக்கமும் உள்ள நிலையில் நாட்டைக் கொண்டு செல்ல முடியாது. இதுபோன்ற நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. இதனால் தேர்தல் ஒன்றை நடாத்தி பொருத்தமானவர்களிடம் அரசாங்கத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

பொருத்தமில்லாத குழுவுடன் சேர்ந்ததன், விளைவை ஜனாதிபதி அனுபவிக்கிறார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்பொழுது செய்ய வேண்டியுள்ள மிகச் சிறந்த நடவடிக்கை,  தேர்தல் ஒன்றை நடாத்தி எமக்கு பொருத்தமான ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான உரிமையைப் பெற்றுத் தருவதாகும் என அல்லே குணவங்ச தேரர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (30)ஆற்றிய உரை குறித்து தேரர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது கிராமத்து கவிதை வரிகளின் சுவையை உணர்ந்த ஒருவர் எனவும், தாமரை இலையில் சோறு சாப்பிட முடியுமான ஒருவர் எனவும், குளத்தில் குளிக்கக் கூடிய ஒருவர் எனவும், காவியுடையின் வாசம் அறிந்தவர் எனவும் தேரர் வர்ணித்தார்.

இப்படியான ஒருவர் போய், முட்கரண்டியால் பாற்சோறு  சாப்பிடுகின்ற, “இஸ்ட்ரோ”வைப் பயன்படுத்தி இளநீர் குடிக்கின்ற, கிராமத்துக் கவிதைகளுக்குப் பதிலாக மைக்கல் ஜெக்ஸனின் பாடல்களைக் கேட்கின்ற பொருத்தமில்லாத குழுவுடன் சேர்ந்ததன் விளைவுதான் ஜனாதிபதியின் நேற்றைய உரைக்கான காரணம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார். 

dc

மகிந்தவின் இப்தாரில் முஸ்லிம் அரசியல்வாதிகள், இஸ்லாமிய நாட்டுத் தூதுவர்கள் பங்கேற்பு (படங்கள்)


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு இன்று அவரது விஜயராம இல்லத்தில் நடைபெற்றது.

வருடாந்தம் நடைபெறும் இந்த இப்தார் நிகழ்வில் இம்முறை அமைச்சர் ரவூப் ஹக்கீம், இராஜாங்க அமைச்சர்களான பௌஸி, ஹிஸ்புல்லாஹ், மற்றும் அதாவுல்லாஹ், பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி ஆகியோர் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
அதேவேளை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, துருக்கி, ஈரான், பலஸ்தீன் உள்ளிட்ட பல முஸ்லிம் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்களும், முஸ்லிம் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முஸ்லிம் மக்கள் இன்றைய தினம் இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
கிறிஸ்த்தவ சகோதரர், முஸ்லிம்களிடம் நியாயத்தை எதிர்பார்க்கிறார்..

''அஸ்லாமு அலைக்கும்! 

எல்லாபுகழும் அல்லாஹா ஒருவனுக்கே!''

லோரன்ஸ் என்னும் நான் நோர்வே நாட்டில் வாழும் கிறிஸ்தவ சமயத்தை சார்ந்தவன். 

எனது பூர்வீகம் இலங்கை, மன்னார் மாவட்டம். நான் இஸ்லாம் பாடசாலையில் கல்வி கற்றவன் எனவே எனக்கு இஸ்லாம் மதத்தின் மீதும், இஸ்லாம் மக்கள் மீதும் பெரும் மதிப்பு வைத்துள்ளேன். 

எனக்கு தெகிவலையில் வீடு ஒன்று உள்ளது. அதனை நான் ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு வாடகைக்குவிட்டேன். பல இந்துக்கள். சிங்களவர்கள், கிறிஸ்தவர்கள் என்னிடம் வாடகைக்கு கேட்ட பொழுது, முஸ்லிம் மக்கள் அல்லாஹவுக்கு அடிபணிந்தவர்கள் என்ற ஒரே காரனத்தால் ஒரு முஸ்லிம் மகனுக்கு  குறைந்த விலைக்கு வாடகைக்கு கொடுத்தேன். பின்னர் வீட்டை விற்க முடிவு செய்தேன்.  

அதனை அவரே வாங்குவதாக சொல்லி பல மாதங்கள் வங்கிகள் சென்று முயற்ச்சி செய்தார். நானும் அவருக்காக நான்கு மாதம் எனது வேலையை விட்டு, இலங்கையில் தங்கி இருந்தேன். இரண்டு வருடங்களாகைவிட்டது. இப்பொழுது எனது டாக்டர் மகளுக்கு கல்யாணம் கொழும்பில் சரிவந்துள்ளது. சீதனமாக அந்தவீட்டை கேட்கின்றார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். 

கல்யாணம் செய்யவேண்டும், எனது வீட்டை திருப்பி தரவேண்டும் என்று கேட்டதற்கு தரமுடியாது என அடம்பிடிக்கின்றான். வாடகை இரண்டு வருடமாக தரவில்லை. 2014 ஜீலை மாதத்தில் இருந்து 2016 ஜீலை வரை வாடகை ஒப்பந்தம் இருந்தது, 2016 ஒடோபர் மாத இறுதியில் வீட்டை காலி பண்ணுவதாக அவன் மனைவி, புரோக்கர் எல்லாம் சேர்ந்து கையொப்பம் இட்டார்கள் நானும் நோர்வே வந்துவிட்டேன். இன்னமும் எழும்பவில்லை, வாடைகை இன்னமும் இல்லை. 

பத்து இலட்சம் வங்கியில் போட்டதாக சொல்கின்றான் வாடகை பணம் போக மிகுதி பணத்தை கொடுக்கின்றேன். அவரை வீட்டைவிட்டு எழும்ப சொல்லுங்கள் ஆப்பொழுதுதாச் எனது மகளின் நிக்கா (கல்யாணத்திற்கு ) தேதி குறிக்கலாம். இதனால் எனது மகளின் கல்யாண அலுவல்கள் பின்போடபட்டுக்கொண்டு வருகின்றது. 

நீதிமன்றம் சென்றால் உடனடியாக எழுப்பமுடியும் ஆனால் காலதாமதமாகும். எனக்கு எனது மகளின் கல்யாணம் முக்கியம்.. தயவு செய்து அந்த முஸ்லிம் ஆளிடம் கதைத்து எனது வீட்டை விட்டு எழுப்ப முடியுமா? நான் தெஹிவலை பொலிஸில் முறைப்பாடு செய்தேன் அவனோ பொலிஸிற்கே லஞ்சம் கொடுத்துள்ளான். அதனால் பொலிஸ் பாராமுகமாக இருக்கின்றார்கள். 

இந்த உதவியை நான் உங்களிடம் பணிவாக கேட்கின்றேன். 

நான் நோர்வே லண்டன் போன்ற நாடுகளில் மீடியாவில் பணிபுரிகின்றேன். இலங்கை முஸ்லிம் மக்களின் நேர்மை பற்றி நான் எழுதமுடியும். ஒரு நபருக்காக இஸ்லாம் மதத்திற்கு அவதூறு விளைவிக்க எனக்கு விருப்பம் இல்லை. இஸ்லாம் மதத்தின் மீது உங்களுக்கு பற்று இருந்தால். அலாஹவின் பெயரில் எனக்கு நியாம் பெற்று தரவேண்டும் என்று அன்போடு கேட்கின்றேன். 

லோரன்ஸ்

பிற்குறிப்பு - 

குறித்த வீட்டில் தற்போது இருப்பவரின் பெயர், தொலைபேசி இலக்கம் ஆகிய எமக்கு கிடைத்தன. தேவைப்படுமிடத்து அவற்றை பிரசுரிக்க நாம் தயார்.

அதேவேளை குறித்த கிறிஸ்த்தவ சகோதரருடைய மனவேதனையும் எமக்கு புரிகிறது.

எனவே குறித்த கிறிஸ்த்தவ சகோதரருடைய வீட்டிலிருந்து அந்த முஸ்லிம் சகோதரர் வெளியேறுவதே நீதியானது...

முஸ்லிம் பெயர்களில் FAKE ID திறந்துள்ள தமிழர்கள்

-Mohamed Zaharan-

இவர்கள் இவர்களது நோக்கத்தில் குறியாகத்தான் இருக்கிறார்கள்.

முஸ்லிம் பெயர்களில் fakeid க்களை உருவாக்கி, தமிழர்களது பதிவுகளிலும், சிங்களவர்களது பதிவுகளிலும் அவர்களை சீண்டும் வண்ணம் comment செய்து, பின் அவற்றை screenshot செய்து தமிழ் சிங்களவர்கள் மத்தியில் பகிர்ந்து, "இதோ பாருங்கள் சோனிகளின் இனவெறி" முஸ்லிம்கள் மீது பலிபோட்டு நடுநிலையாக சிந்திக்கக் கூடியவர்களை கூட முஸ்லிங்களுக்கு எதிராக திருப்புவது.

இது இந்தியாவில் சிவசேனா Rss போன்ற பாசிச இயக்கங்கள் குண்டு வைத்து, கோயில்கள் மீது மாமிசம் வீசிவிட்டு முஸ்லிம்கள் மீது பலிபோட்டு இனக்கலவரத்தை உருவாக்கும் செயலின் பிரதியேயாகும்.

இன்னும் சில காலங்களில் அவ்வாறான சம்பவங்கள் கூட இடம்பெறலாம். அதற்கு மட்டக்களப்பில் அண்மையில் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டும், வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்ட ISIS பதாகையும் உதாரணமாகும்.

இவற்றை முடிந்தளவு உங்கள் தமிழ் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள். சட்டநடவடிக்கை மேற்கொள்ளக்கூடிய தரத்தில் இருப்பவர்கள் அதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள்.

ஒரு மாதத்திற்கு, பேஸ்புக் தடை

நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய போலியான பயனர்களை அடையாளம் காண்பதற்காக பப்புவா நியூ கினி பேஸ்புக் சமூகதளத்திற்கு ஒரு மாத தடை விதிக்கவுள்ளது.

பயனர்கள் பதிவிடும் தவறான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் அடையாளம் காணப்படும் என்று அந்நாட்டு தொலைத்தொடர்பு அமைச்சர் சாம் பசில் குறிப்பிட்டுள்ளார். தமது நாடு மாற்றாக ஒரு சமூகதளத்தை உருவாக்குவது குறித்தும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

“முடக்கம் செய்யப்படும் இந்த இடைவெளியில் போலிக் கணக்கு வைத்திருப்போர், ஆபாச பதிவுகளை வெளியிடுவோர், பொய் செய்திகள் மற்றும் வதந்திகள் பரப்புவோர் ஆகியோரைக் கண்டுபிடிக்கவும், அப்பதிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் பயனர்களின் தரவுகள் பெறப்பட்ட கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா சர்ச்சையை அடுத்து பேஸ்புக் மீது அழுத்தங்கள் அதிகரித்திருப்பதோடு அதன் போலி செய்திகளை தடுப்பதற்கான முயற்சிகள் பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பப்புவா நியூகினியில் 10 வீதமானவர்கள் மாத்திரமே இணையதள வசதிகளை பெற்றிருந்தபோதும், இணைய சேவைகளில் அந்த நாடு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. 

ஐ.தே.க.யின் இன்றைய மத்திய கூட்டத்தில் என்ன நடந்தது..?

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

கட்சியின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது மத்திய செயற்குழு கூட்டம் இதுவாகும்.

விஜயவர்தன குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய கட்சியில் ஏற்படுத்தப்பட வேண்டிய சீரமைப்பு தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் கட்சியின் அடிமட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு, பிரதமர் ரணிவிக்ரமசிங்க, கட்சியின் பொதுசெயலாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகியோருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதேநேரம் மீனவர்களுக்கு வழங்கப்படவுள்ள நிவாரணங்கள் குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

"கூறிகூறி அழுத்து போய்விட்டது, நான் இனி வாய்திறக்க போவதில்லை"

கட்சியின் மறுசீரமைப்பு குறித்து நான் இனிமேல் வாய்திறக்கப் போவதில்லை. எனக்கும் கூறி கூறி அழுத்து போய் விட்டது என இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அரசாங்கத்தை பற்றி என்ன பேசினார் என்பது எனக்கு தெரியாது. இருந்தாலும் 100 வேலைத்திட்டம் சம்பந்தமாக பேசிய விடயத்தை நானும் ஏற்கின்றேன். அது உண்மையில் பிரயோசனமில்லாத வேலைத்திட்டமாகும். இந்த திட்டத்தை கொண்டு வராமல் இருந்திருக்கலாம். 

அதனை தவிர ஜனாதிபதியின் கேள்விக்கு நான் பதிலளிக்க போவதில்லை. ஜனாதிபதியின் கருத்துகள் சம்பந்தமாக செயற்குழு கூட்டத்தில் ஆராயப்படவில்லை.

அத்துடன் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாக நான் இனிமேல் வாய்திறக்கப் போவதில்லை. எனக்கும் கூறி கூறி அழுத்து போய் விட்டது என்றார்.

(எம்.எம்.மின்ஹாஜ்)

பாதாள உலக குழுவை கைது செய்யாமைக்கு சட்டஒழுங்கு அமைச்சும், காவற்துறை திணைக்களமுமே பொறுப்பு

பாதாள உலக குழு குற்றவாளிகளை கைது செய்யமுடியாமைக்கான பொறுப்புக்களை சட்ட ஒழுங்குகள் அமைச்சு மற்றும் காவற்துறை திணைக்களம் என்பனவே ஏற்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தின் இன்று -31- இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தாம், காவற்துறை மா அதிபருக்கு வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பாதாள உலக குழுவினரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.

அதற்கான பொறுப்புக்களை ஏற்கும், சட்ட, ஒழுங்குகள் அமைச்சு மற்றும் காவற்துறை திணைக்களம், அதில் அரசியல் ரீதியிலான தலையீடுகள் இருக்குமாயின் அது குறித்து தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கிழக்கு கடலில் எண்ணெய்வள ஆய்வு - அமெரிக்க நிறுவனத்துடன் சிறிலங்கா உடன்பாடு

சிறிலங்காவின் கிழக்கு கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடு செய்துள்ளது.

உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான, Schlumberger என்ற அமெரிக்காவின் எண்ணெய் வயல் சேவைகள் நிறுவனத்தின்  துணை நிறுவனமான  Eastern Echo DMCC நிறுவனத்துடன் இது தொடர்பான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று கொழும்பில் நடந்த நிகழ்வில் இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு எண்ணெய் வளம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு, தரவுகளை திரட்டும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

கிழக்கு கடற்பகுதியில் தெரிவு செய்யப்பட்ட சில இடங்களில், இரு பரிமாண மற்றும் முப்பரிமாண ஆய்வுகளை மேற்கொண்டு தரவுகளைத் திரட்டுவதற்கு அமெரிக்க நிறுவனம் 50 மில்லியன் டொலர்களை செலவிடும்.

சிறிலங்கா ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு கிழக்கு கடலில் எண்ணெய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு Total  என்ற பிரெஞ்சு நிறுவனத்துடன் உடன்பாடு செய்திருந்தது.

எனினும், இந்த ஆய்வுகள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரமழான் பிறை குறித்து, ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள அறிக்கை

இன்று சர்வதேச ரீதியில் காணப்படும் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் முறைகளில் வெற்றுக் கண்களால் பிறை பார்க்கும் முறையே குர்ஆனினதும் ஹதீஸினதும் வழிகாட்டலுக்கு மிகவும் நெருங்கிய முறையாகும். இதனையே பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் முன்மொழிந்துள்ளனர்.
அத்துடன் பிறை மாதத்தை ஆரம்பிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபாடு காணப்படலாம். ஓரிடத்தில் கண்ட பிறையை முழு முஸ்லிம் சமூகமும் செயற்படுத்தியது என்பதை கடந்த 1400 வருட காலங்களில் காண்பதற்கில்லை. மாறாக, சஹாபாக்களின் செயற்பாடுகள் அவர்கள் ஆங்காங்கே கண்ட பிறையின் அடிப்படையிலேயே செயற்பட்டுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றன. அதை முஸ்லிம் ஷரீபில் வரக்கூடிய சம்பவம் மிகவும் தெளிவு படுத்துகின்றது.  

குரைப் ரஹிமஹுல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சிரியாவில் இருந்த வேளை, உம்முல் ஃபழ்ல் ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் தன்னை சிரியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். சிரியாவுக்குப் போய் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டேன். நான் சிரியாவில் இருந்த வேளையில் ரமழான் பிறை எனக்குத் தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் தலைப்பிறையைக் கண்டேன். அம்மாதத்தின் இறுதியில் நான் மீண்டும் மதீனா வந்தேன். என்னிடம் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் எனது பயணம் குறித்து விசாரித்தார்கள். பின்னர், பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். 'நீங்கள் எப்போது பிறை கண்டீர்கள்?' என்று (என்னிடம்) கேட்டார்கள். 'வெள்ளிக் கிழமை இரவு பிறையைப் பார்த்தோம்' என்று சொன்னேன். அப்போது 'நீங்களே பிறையைக் கண்டீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கு 'ஆம் நானும் கண்டேன், மக்களும் கண்டனர், மக்களும் நோன்பிருந்தனர், முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் நோன்பிருந்தார்கள்;' என்றேன். அப்போது அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் 'நாங்களோ சனிக்கிழமை இரவே பிறையைக் கண்டோம். எனவே மாதத்தை முப்பது நாட்களாக பூர்த்தியாக்கும் வரை தொடர்ந்து நோன்பிருப்போம். (தலைப்) பிறையை நாம் கண்டாலே தவிர' என்றார்கள். 'முஆவியா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறையைக் கண்டதும், நோன்பிருந்ததும் உங்களுக்குப் போதுமானதாகாதா?' என்று கேட்டேன். 'இல்லை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  இப்படித்தான் எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள்' என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் ஸஹீஹ் முஸ்லிம் ஷரீபில் (1087) வருவது போல் திர்மிதி (693), அபூ தாவூத் (2332), நஸாயீ (2111), முஸ்னத் அஹ்மத் (2789) போன்ற கிரந்தங்களிலும் இடம்பெறுகின்றது. 
மேற்குறித்த கிரந்தங்களில் இந்த ஹதீஸைப் பதிவு செய்யும் போது 'ஒரு நாட்டில் காணப்படும் பிறை அந்த நாட்டவர்களுக்கே' என்ற கருத்திலே தலைப்பிட்டுள்ளார்கள். மேலும் ஹிஜ்ரி 210 முதல் ஹிஜ்ரி 279 காலப்பகுதிக்குள் வாழ்ந்த இமாம் திர்மிதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு 'மார்க்க அறிஞர்களிடத்தில் இந்த ஹதீஸின் பிரகாரமே செயல் காணப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வருடம் ரமழான் மாதத்தின் தலைப் பிறையைத் தீர்மானிப்பதற்கான ஒன்றுகூடல் வழமைபோல் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அதன் பிறைக் குழுத் தலைவர் அஷ்-ஷைக் ஜே. அப்துல் ஹமீத் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் 2018.05.16 ஆம் திகதி புதன்கிழமை மாலை வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. அவ்வொன்றுகூடலில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிருவாகிகள், அதன் பிறைக்குழு உறுப்பினர்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவத் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ.எம். ரிழ்வி, உப தலைவர்களில் ஒருவரான அஷ்-ஷைக் ஏ.எல்.எம். ரிழா, உதவிச் செயலாளர்களில் ஒருவரான     அஷ்-ஷைக் எம்.எஸ்.எம். தாஸீம், ஃபத்வா குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் மற்றும் உறுப்பினர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் மேமன் ஹனபிப் பள்ளிவாசல் நிருவாகிகள் கலந்து கொண்டனர். 

இக்குழு நாடெங்கிலும் உள்ள தமது உப பிறைக் குழு உறுப்பினர்களைத் தொடர்பு கொண்டதோடு கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, அம்பாரை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம் ஆகிய மாவட்டங்களினதும்  காத்தான்குடி, அகுரணை, கண்டி, மாவனல்லை போன்ற முப்பத்தி ஐந்திற்கும் மேற்பட்ட பிரதேசங்களின் பிரதிநிதிகளை தொடர்பு கொண்டனர். அன்றைய தினம் வெற்றுக் கண்களுக்கு பிறை இலகுவாக தென்படும் வாய்ப்பு இருப்பதாக வானியல் கணிப்பீடு காணப்பட்டபோதிலும் மஃரிபை அண்டிய நேரத்தில் கால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தினால் நாட்டில் பல பாகங்களும் மழையும் மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டன. நாட்டில் எவ்விடத்திலிருந்தும் பிறை தென்பட்டதற்கான தகவல் கிடைக்கப் பெறவில்லை. அனைவரும் பிறை தென்படவில்லை என்றே அறிவித்தனர். ஆகவே, அங்கு கூடியிருந்த உலமாக்கள் உள்ளிட்ட குழுவினர் பிறையைப் பார்த்து நோன்பு பிடியுங்கள்! பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! அம்மாதம் (மேக மூட்டத்தால்) உங்களுக்கு மறைக்கப்பட்டால், ஷஃபானின் எண்ணிக்கையை முப்பதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்! (ஸஹீஹுல் புகாரி 1909) என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கூற்றுக்கிணங்கவும் ஜம்இய்யாவின் தலைப்பிறையைத் தீர்மானிப்பது தொடர்பிலான தீர்மானத்தின் அடிப்படையிலும் ஷஃபான் மாதத்தை பூரணப்படுத்தி 18.05.2018 வெள்ளிக்கிழமை ரமழான் மாதத்தை ஆரம்பிப்பதாக ஏகமனதாக முடிவு செய்தனர்.

தலைப்பிறையைத் தீர்மானிப்பது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஐந்து அடிப்படைகளைக் கொண்ட தீர்மானம் 

பிறை தொடர்பாக ஷரீஆக் கண்ணோட்டத்தில் ஆழமானதோர் ஆய்வை மேற்கொள்வதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒரு விஷேட நிபுணத்துவக் குழுவை நியமித்தது. குறித்த குழு பல மாதங்கள் பிறை தொடர்பான சட்டப் பிரச்சினைகளை ஆய்வு செய்து ஒரு விரிவான அறிக்கையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமைப் பீடத்திடம் சமர்ப்பித்தது. இதனையடுத்து கடந்த 2006.09.06 இல் பிறை தொடர்பான இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விஷேட அமர்வு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இவ்வமவர்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பிலும், கொழும்பு பெரிய பள்ளிவாயல் சார்பிலும் முக்கியமான ஆலிம்கள் கலந்து கொண்டனர். அங்கு பின்வரும் ஐந்து அடிப்படைகள் தீர்மானங்களாக முடிவு செய்யப்பட்டன. 

உள்நாட்டில் பிறை தென்படுவதை அடிப்படையாகக் கொண்டே இஸ்லாமிய மாதம் தொடர்பான அனைத்து முடிவுகளும் பெறப்படும்.

பிறை பார்த்தலின் போது வெற்றுக் கண்ணால் பார்த்தல் அடிப்படையாகக் கொள்ளப்படும்.
ஒரு நாளின் பிறை வெற்றுக் கண்ணுக்குப் புலப்படுவது சாத்தியமற்றது என நம்பகமான முஸ்லிம் வானியல் அறிஞர்கள் உறுதி செய்யுமிடத்து வானியல் அவதானத்தின் அடிப்படையிலான அந்நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளப்படுவதோடு அவ்வடிப்படையில் அன்றைய தினம் பிறை காண முடியாத நாளாகக் கொள்ளப்படும்.

வானியல் துறையில் புலமைப் பெற்ற ஒரு முஸ்லிம் அறிஞர் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக் குழுவிற்குத் துணையாகச் செயற்படும்.

பிறை வெற்றுக் கண்களுக்குத் தென்படுவது அசாத்தியமானது என முடிவு செய்யப்பட்ட நாளில் ஒருவரோ அல்லது பலரோ பிறை கண்டதாகக் கருதினால் அவரோ அல்லது அவர்களோ தலைமைத்துவத்துக்குக் கட்டுப்படல் என்ற வகையிலும், முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து செல்லல் என்ற வகையிலும் குறித்த நாளில் நோன்பு நோற்பதற்கு அல்லது பெருநாள் கொண்டாடுவதற்கு பிறரைத்தூண்டவோ, பிரகடனப்படுத்தவோ கூடாது. தனிப்பட்ட முறையில் அவரோ அல்லது அவர்களோ தான் அல்லது தாம் கண்டதாகக் கருதும் பிறையின் அடிப்படையில் செயற்படும் அனுமதியைப் பெறுவர்.

மேற்கூறிய இந்த அடிப்படைகளை வைத்தே நமது நாட்டில் தலைப்பிறையைத் தீர்மானித்து அறிவிக்கும் பொறுப்பு வாய்ந்த அமைப்புகளான கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன மாதாந்தம் தலைப் பிறையைத் தீர்மானித்து அறிவித்து வருகிறன. அவ்வாறே 2014 ஆம் ஆண்டிலிருந்து, தலைப் பிறை பார்த்தலில் ஏற்படும் தவறுகளையும் குறைகளையும் முடியுமான அளவு குறைத்தல், முரண்பாடுகளையும் குழப்பங்களையும் இல்லாமலாக்குதல் என்ற நோக்கில் பிறை தென்படும் வாய்ப்பு அதிகம் காணப்படும் பகுதிகளை இனங்கண்டு அப்பகுதிகளில் நாற்பதுக்கும் மேற்பட்ட குழுக்களை இவ்வமைப்பு நியமித்து பிறை பார்த்தலில் ஈடுபட்டதன் விளைவாக முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தவிர்த்து செயற்பட்டு வருவதை தற்போது நாம் காணக்கூடியதாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்! 

முஸ்லிம் சமூகம் ஒரே பிறையைப் பின்பற்றுவதன் மூலமே முழு உலகத்திலும் ஒரே நாளில் நோன்பு நோற்று, பெருநாள் கொண்டாடி தமது ஒற்றுமையை வெளிப்படுத்த முடியும் என்ற ஒரு கருத்து பரவலாகப் பேசப்படுவதுண்டு. உண்மையில் இக்கருத்து அடிப்படையற்ற ஒரு கருத்தாகக் காணப்படுவதுடன் அறிவு பூர்வமற்ற சாத்தியமற்ற ஒன்றாகவும் இருக்கிறது. காரணம், உலகத்தில் ஒரே நேரத்தில் இரவு, பகல் என்ற இரு நிலமைகள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். ஒரே வேளையில் பகுதிக்குப் பகுதி நேரம் வித்தியாசம் காணப்படும். அத்துடன் 24 மணித்தியாலத்தில் உலகளவில் இரண்டு நாட்கள் நடைமுறையில் இருக்கும். இவையெல்லாம் அறிவியல் சார்ந்த பொதுவான விடயங்களாகும். எனவே சாத்தியமற்ற ஒன்றை ஒற்றுமையை வெளிப்படுத்தல் என்ற பெயரில் சாத்தியப்படுத்த முயற்சிப்பது பொருத்தமான ஒன்றல்ல. 

'அழுவதே விதியென்றால்'


-வ.ஜ.ச.ஜெயபாலன்-

1990 ஆம் வருடம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் புலிகளினால் இனசுத்திகரிப்பு செய்யப்பட்டதை அடுத்து அதன் 5 ஆவது வருடத்தில் கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன் அழுதழுது வாசித்த கவிதையை இங்கு மீள்பிரசும் செய்கிறோம்

பாதகத்துக்கு
வருடங்கள் ஐந்தாச்சு.
தவறு, வருத்தம், திருத்துவோம் என்றபடி
தலைவர்கள் வாக்களித்து
வருடங்கள் இரண்டாச்சு.
என்ன தமிழர்களே எல்லோரும் நித்திரையா?


எல்லாம் அபகரித்து
நட்பில்லாச் சூரியனின் கீழே
உப்புக் களர்வழியே
ஓடென்று விரட்டி விட்ட
குற்றம் ஏதும் அறியா இக்
குணக் குன்று மானிடங்கள்
ஐந்து வருடங்கள்
கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றார்.


இன்னும் தமிழர் எல்லோரும் நித்திரையா?
இதுதானா தலைவர்களின் வாக்குறுதி  முத்திரையா?
ஆறாம் வருடமும் இவர்கள்
அழுவதே விதியென்றால்


அழியட்டும் இந் நாடு
அழியட்டும் எனது இனம்
அழியட்டும் என் கவிதை
அழியட்டும் எனது தமிழ்

இலங்கை வரலாற்றில், முஸ்லிம் அரசன்

-A.J.M.Nilaam-

பண்­டைய சிங்­கள வர­லாற்று நூல்­களில் மகா­வம்சம், ராஜா­வ­லிய, கிரா சந்­தே­சய, குரு­நாகல் விஸ்­த­ரய, தீப­வம்சம், பன்­சிய பனஸ் ஜாதக பொத்த, சமத்­தயா சாதிகா, செல­லி­ஹினி சந்­தே­சிய, பரவி சந்­தே­சய, விசுத்­தி­மக்க சச­தா­வத்த, குத்­தி­ல­கா­விய, தம்­பியா அட்­டுவா ஹட்­டப்­ப­தய, தர்ம பீதி­காவ எனும் நூல்கள் பிர­சித்­த­மா­ன­வை­யாகும். இவற்றில் மகா­வம்­சமும், குரு­நா­கல விஸ்­த­ர­ய­வுமே இலங்­கையில் ஒரு முஸ்லிம் மன்னன் ஆட்­சி­பு­ரிந்­தது பற்றி தெளி­வான விப­ரங்­களைக் குறிப்­பி­டு­கின்­றன. இவ­ரது தலை­ந­கரம் “எது­கல்­புர” என அன்று அழைக்­கப்­பட்ட தற்­போ­தைய குரு­நா­க­லை­யாகும்.

இங்கு அத்­தா­கல (யானைக் கற்­பாறை), இப்­பா­கல (ஆமைக் கற்­பாறை), குரு­மி­ன­கல (வண்­டு­கற்­பாறை), கிம்­பு­லா­கல (முதலைக் கற்­பாறை), எலு­வா­கல ( வெள்­ளாட்டுக் கற்­பாறை), ஆந்­தா­கல (விலாங்கு மீன் கற்­பாறை), லுனு­கெட்­ட­கல (உப்­புக்­கட்டி கற்­பாறை), கோனி­கல (கோனிப்பைக் கற்­பாறை) என 8 கற்­பா­றைகள் இருக்­கின்­றன. இவற்றில் யானைக் கற்­பா­றையே பெரிது என்­பதால் குரு­நா­க­லையின் பழைய பெயர் எது­கல்­புர என்றே  அமைந்­தி­ருந்­தது. ஆந்­தா­கல ஒரு பக்கம் இப்­பா­க­லவும் குரு­மினி கலவும் மறு­பக்கம் மேட்டு நிலப்­ப­ரப்­பாக பமு­னு­கெ­தர நடுவில் குரு­நா­க­ல­வெவ ஏரி ஆகி­யவை காணப்­பட்­டன. தண்ணீர் வச­தியை வழங்­கிய அந்த ஏரி சதுப்பு நிறப் படி­க­ளோடும். நீரா­டு­து­றை­க­ளோடும் கவர்ச்­சி­யாகக் காணப்­பட்­டது என்­கி­றார்கள்.
அங்கு ஆட்­சி­பு­ரிந்த முஸ்லிம் அரசன் யார் எனப்­பார்ப்போம். 1273 ஆம் ஆண்டு முதல் 1284 ஆம் ஆண்டு வரை 11 ஆண்­டு­காலம் வன்­னியின் குரு­நில மன்­னர்­களைத் தோற்­க­டித்து தம்­ப­தெ­னி­யாவைத் தலை­ந­க­ராக்கி முதலாம் புவ­னே­க­பாகு ஆட்சி புரிந்த போதுதான், வன்னிக் குறு­நில மன்­னர்­களின் சார்­பாக மதுரை மன்னன் குல­சே­கர பாண்­டி­யனின் படை தம்­ப­தெ­னி­யாவை ஆக்­கி­ர­மித்­தது.  உடனே யாப்­ப­ஹு­வைக்குத் தனது தலை­ந­கரை மாற்­றிய முதலாம் புவ­னே­க­பாகு யெம­னு­டனும் எகிப்­து­டனும் தொடர்பு கொண்டான்.

அப்­போது யெமன் நாட்டு அர­ச­ராக 1299 ஆம் ஆண்டு முதல் 1295 ஆம் ஆண்டு வரை சுல்தான் யூசுப் இப்­னு­உமர் ஏடனைத் தலை­ந­க­ராக்கி ஆட்­சி­பு­ரிந்து வந்தார். முதலாம் புவ­னே­க­பா­குவின் தூதுக்­குழு அவரைக் காணச்­சென்­றது.

யெமன் நாட்டு சரித்­திரக் குறிப்­பேடு முதலாம் புவ­னே­க­பா­குவை அபூ­நெக்­க­பா­லெ­பாபாஹ் என்­கி­றது. இது புவ­னே­க­பாகு யாப்­ப­க­ஹுவ எனும் சிங்­களச் சொற்­களின் அரபுத் திரி­பாகும். அப்­போது எகிப்­துக்கும் கூட ஒரு தூதுக்­குழு சென்றே இருந்­தது. அந்த பதி­விலும் அபூ­நெக்­க­பா­லெ­பாபாஹ் என்றே இருக்­கி­றது. அல்ஹாஜ் அபூ­உத்­மானின் தலை­மை­யி­லான குழு இலங்கைக் கப்­பலில் எகிப்­துக்­குப்போய் ஹோமோஸ் எனும் துறை­மு­கத்தில் இறங்கி எகிப்தில் 10 நாட்கள் தங்­கி­ய­தாக எகிப்­தியப் பதி­வுகள் குறிப்­பி­டு­கின்­றன.

வர­லாற்­றா­சி­ரியர் எச்.டப்­ளியூ.கொட்­ரிங்டன் இது பற்றி குறிப்­பி­டு­கையில், இலங்கை அரசின் தூதுவர் மாளி­கைக்கு வந்து ஒரு கடி­தத்தைக் கொடுத்து எங்கள் மன்­னனே கைப்­பட எழு­தி­யது இது என்றார். அந்த கடிதம் தங்கப் பெட்­டியில் வைக்­கப்­பட்டு தூஸ் போன்ற ஒரு பொருளால் சுருட்­டப்­பட்­டி­ருந்­தது. தென்னை மரப்­பட்­டை­யி­லி­ருந்து தயா­ரிக்­கப்­பட்­டதே தூஸ் என்­கி­றார்கள்.
அப்­போது அந்த கடி­தத்தை வாசிக்க யாருமே எகிப்­திய அர­ச­னுக்குக் கிடைக்­க­வில்லை. எனவே அதன் உள்­ள­டக்­கத்தை வாசிக்­கும்­படி இலங்கைத் தூது­வ­ரி­டமே அவர் கேட்டுக் கொண்டார். அதனால் எகிப்தில் அர­ச­னுக்கு வாசிக்கும் சிரமம் குறைந்­தது.

* இலங்­கையே எகிப்து எகிப்தே இலங்கை. எனது தூதுவர் இலங்­கைக்குத் திரும்­பு­கையில் அவ­ரோடு ஒரு எகிப்­தியத் தூதரும் அனுப்­பப்­பட வேண்டும் என்றே விரும்­பு­கின்றேன்.

* என்­னிடம் பிர­மிக்க வைக்கும் அதிக அளவு முத்­துக்­களும் பல­ரக மாணிக்­கங்­களும் உள்­ளன.

* கப்­பல்­களும் யானை­களும் மஸ்லின் துணி­களும் ஏனைய பொருட்­களும் உள்­ளன.

நேர்­மை­யான வியா­பா­ரி­களால் என்­னி­ட­மி­ருந்து பசும் மரமும் கறு­வா­வும உங்­க­ளி­டம்­கொண்டு வரப்­படும் (வண்ணப் பொருட்கள் செய்­யப்­ப­யன்­படும் பிரேசில் மரமே பசும் மர­மாகும்).

* எல்லா வகை வியா­பாரப் பொருட்­களும் எம்­மிடம் உண்டு.

* எமது நாட்டில் வளரும் ஒரு வகை மரத்தால் ஈட்­டி­களைத் தயா­ரிக்­கலாம்.

* வரு­டாந்தம் 20 கப்­பல்­களை நீங்கள் என்­னிடம் கேட்­டாலும் தருவேன்.

* உங்கள் நாட்டு வியா­பா­ரிகள் எனது அர­சோடு விரும்­பி­ய­வாறு வர்த்­தகம் புரி­யலாம்.

* யெமன் நாட்டு அரச தூதுவர் யெம­னுக்­காக என்­னோடு தொடர்பு கொள்ள வந்த போதும் நான் உங்கள் மீது வைத்­தி­ருக்கும் அபி­மானம் கார­ண­மாக அவரைத் திருப்­பி­ய­னுப்பி விட்டேன்.

* என்­னிடம் 27 மாளி­கைகள் உள்­ளன. அவற்றின் பொக்­கி­ஷங்கள் பல­வகை மாணிக்­கங்­க­ளாலும் நிரம்­பி­யுள்­ளன.

* எனது அதி­கா­ரத்­துக்­குட்­பட்டே முத்­துக்­கு­ளிப்பும் இருக்­கி­றது. இதனால் கிடைக்கும் எல்லா முத்­துக்­களும் எனக்கே சொந்தம். என்­றெல்லாம் அக்­க­டி­தத்தில் இருந்­தன என்­கிறார். அதைக் கேட்ட எகிப்­திய சுல்தான், அபூ உத்­மா­னுக்கு கௌரவமளித்­த­தோடு முதலாம் புவ­னே­க­பா­கு­வுக்­கென ஒரு கடி­தத்­தையும் கைய­ளித்தார்.
எகிப்தின் வலிமை கார­ண­மா­கத்தான் முதலாம் புவ­னே­க­பாகு யெமனை மதிப்­பி­றக்கம் செய்து எழு­தி­யி­ருக்க வேண்டும். இவ்­வாறு அரபு நாடு­க­ளோடு முதலாம் புவ­னே­க­பாகு தொடர்பு கொள்­வதைக் கேள்­விப்­பட்­டதும் மதுரை மன்னன் குல­சே­கர பாண்­டியன் உடனே பெரும் படையை இலங்­கைக்கு அனுப்பி வைத்தார். காரணம், டில்­லியில் அலா­வுத்தீன் கில்­ஜியின் ஆட்சி இருக்­கையில் இலங்­கையில் முஸ்லிம் நாடு­களின் தலை­யீடு இருப்­பது ஆபத்து என அவர் கரு­தி­ய­தே­யாகும். யாழ்ப்­பாண சங்­கிலி மன்­னனின் படை அதற்கு உத­வி­ய­ளித்து யாப்­ப­ஹு­வவைக் கைப்­பற்றச் செய்து புனித தந்­தத்தை மது­ரைக்கு எடுத்­துப்போய்  குல­சே­கர பாண்­டி­ய­னுக்குக் கைய­ளிக்கச் செய்­தது. அப்­போது புனி­த ­தந்­தத்தை வைத்­தி­ருப்­போனே அரசன் என சிங்­கள மக்கள் நம்­பி­யதால் 1284 ஆம் ஆண்டு முதல் 1302 ஆம் ஆண்டு வரை 18 வருட காலம் இலங்­கையை மதுரை பாண்­டிய நாடே ஆட்சி புரிந்­தி­ருக்­கி­றது.

ஆக, தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து இலங்­கையைத் தற்­காத்துக் கொள்­ளவே அப்­போது சிங்­கள மன்னன் முஸ்­லிம்­க­ளுக்கு வரி செலுத்­தவும் செல்­வங்­களை வழங்­கவும் முன்­வந்­தி­ருப்­பது இதி­லி­ருந்து தெளி­வா­கி­றது. அதுபோல் முஸ்­லிம்­க­ளுக்கும் அஞ்­சியே தமி­ழர்கள் இலங்­கையைக் கைப்­பற்­றி­யதும் தெரி­கி­றது. அப்­போது டில்­லியின் சுல்தான் அலா­வுத்தீன் கில்­ஜியின் தள­ப­தி­யான மாலிக்­கபூர் பாண்­டிய நாட்­டுக்குப் படை­யெ­டுத்து வரப்­போ­வதைக் கேள்­விப்­பட்ட குல­சே­கர பாண்­டி­ய­னுக்குத் தனது நாட்டின் சுய­பா­து­காப்­புக்­காக இலங்­கை­யி­லி­ருந்த தனது படையை மீளப்­பெ­று­வதைத் தவிர வேறு வழி­யி­ருக்­க­வில்லை.
எனினும் குல­சே­கர பாண்­டியன் நிபந்­த­னைகள் விதித்தான். இந்­நி­லை­யைத்தான் மூன்றாம் பராக்­கி­ர­ம­பாகு சாத­க­மாகப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு குல­சே­கர பாண்­டி­ய­னுக்குக் கீழ்ப்­ப­டி­வ­தா­கவும் வரி செலுத்­து­வ­தா­கவும் அவ­ரோடு போர் செய்­வ­தில்லை எனவும் சத்­தியம் செய்து தந்­தத்தைக் கையேற்று இறை­மையை மீட்டான். எனினும் அந்த இறைமை முழு­மை­யா­ன­தாக அமை­ய­வில்லை. 8 ஆண்­டுகள் நீடித்த அந்த பொம்மை அரசை சிங்­கள மக்கள் வெறுத்­தனர்.

மூன்றாம் பராக்­கி­ர­ம­பா­குவால் குல­சே­கர பாண்­டி­யனின் விருப்பை மீறி நடக்க முடி­யா­தி­ருந்­ததும் வரி செலுத்­தப்­பட்­டதும் அதற்குக் கார­ணங்­க­ளாக அமைந்­தன. இந்­நி­லை­யி­லேயே இரண்டாம் புவ­னே­க­பாகு அந்த அடி­மைத்­துவ அரசைக் கைப்­பற்­றினான். இவ­னது அரசு 1310 ஆம் ஆண்டு முதல் 1325 ஆம் ஆண்டு வரை 15 வரு­டங்கள் தொடர்ந்­தது. 1325 ஆம் ஆண்டு முதல்1328 ஆம் ஆண்டு வரை மூன்று வரு­ட­காலம் இவ­ரது மகன் வஸ்­து­ஹிமி ராஜ­கலே பண்­டார ஆட்­சி­பு­ரிந்­தி­ருக்­கிறார்.

அப்­போது மாலிக்­கபூர் குல­சே­கர பாண்­டி­யனைத் தோற்­க­டித்­தி­ருந்­த­தா­லேயே மூன்றாம் பராக்­கி­ரம பாகுவை இரண்டாம் புவ­னே­க­பா­குவால் எளி­தாகத் தோற்­க­டிக்க முடிந்­தது. இன்றேல் குல­சே­கர பாண்­டி­ய­னுக்குக் கட்­டுப்­பட்டு இலங்­கை­ தொ­டர்ந்தும் இருந்­தி­ருக்கும் எனலாம். ஆக, மூன்றாம் பராக்­கி­ர­ம­பா­கு­வி­ட­மி­ருந்து அடி­மைத்­துவ இலங்கை அர­சாட்­சியை மீட்ட இரண்டாம் புவ­னே­க­பா­குவின் மகனே வஸ்­து­ஹிமி ராஜ­கு­மார எனும் மன்­ன­னாவார். 
குரு­நா­கல விஸ்­த­ரய இவரைப் பற்றிக் குறிப்­பி­டு­கையில், இரண்டாம் புவ­னே­க­பா­கு­வுக்கும் அஸ்­வத்தும் கிரா­மத்தில் பிறந்த அழ­கிய சோனகப் பெண்­ணுக்கும் பிறந்த மகனே இவர் என்­கி­றது. எனினும் இவரை ஒரு முஸ்லிம் என அது குறிப்­பி­ட­வில்லை. தாய் சோனகப் பெண் என மட்­டுமே கூறு­கி­றது.

சிங்­கள மக்­களின் முதன்மை வர­லாற்று நூலான மகா­வம்­சமே வஸ்­து­ஹிமி என இவரைக் குறிப்­பிட்டு இஸ்­லாத்தை தழு­வி­யவர் எனவும் கூறு­கி­றது. உண்­மை­யையும் நிகழ்­வு­க­ளையும் மறுப்­பதைக் கண்டு நான் சீற்­ற­மு­று­கிறேன். உண்மை உள்­ள­ப­டியே மகத்­தா­னது. வாசி­யுங்கள், அதி­ச­யப்­ப­டுங்கள் என வர­லாற்­றா­சி­ரியர் கிப்பன் கூறு­கிறார். அந்த வகையில் குரு­நா­கல விஸ்­த­ர­யவும் மகா­வம்­சமும் காய்தல் – உவத்­த­லின்றி உள்­ளதை உள்­ள­ப­டியே வெளி­யிட்­டி­ருந்­தி­ருக்­கின்­றன. அதனால் தான் பிற்­கால சிங்­கள சரித்­திர எழுத்­தா­ளர்கள் பலர் இதை மறைக்க முயற்சி எடு­ப­டாமற் போயிற்று.

அப்­போது குல­சே­கர பாண்­டியன் இலங்­கையைக் கைப்­பற்றக் காரணம் முதலாம் புவ­னே­க­பாகு யெம­னோடும். எகிப்­தோடும் தொடர்பு கொள்ள முயன்­ற­தே­யாகும். குல­சே­க­ரனின் ஆக்­கி­ர­மிப்­புக்கு முன் முதலாம் புவ­னே­க­பாகு யெம­னுக்கு ஒரு தூதுக்­கு­ழுவை அனுப்பி உத­வி­கோ­ரி­யி­ருந்தார்.

இன்றேல் இலங்­கையில் ஒரு முஸ்லிம் மன்னன் ஆட்­சி­பு­ரிந்­தி­ருக்­கிறார் எனும் உண்மை மறைந்தே போயி­ருக்கும். இரண்டாம் புவ­னே­க­பாகு முஸ்­லி­மாகி அப்­பெண்ணை இரண்டாம் தார­மாக மணந்­த­தற்கு சரித்­தி­ரத்தில் எந்த குறிப்­புக்­களும் இல்லை. அப்­ப­டி­யானால் அந்­தப்­புர நாய­கி­யாக அப்­பெண்ணை வைத்­தி­ருந்­தாரா? என்­ப­தற்­கான தக­வலும் இல்லை.
முஸ்­லி­மல்­லாத ஆணை முஸ்லிம் பெண் மண­மு­டிப்­ப­தையோ முஸ்லிம் பெண் அந்­தப்­புர நாய­கி­யாக இருப்­ப­தையோ முஸ்­லிம்கள் அனு­ம­திப்­ப­தில்லை. அந்த வகையில் இரண்டாம் புவ­னே­க­பாகு முஸ்­லி­மா­கியே அப்­பெண்ணை மண­மு­டித்­தி­ருக்­கலாம் என யூகிக்­க­மு­டி­கி­றது. அவ­ரது மூத்த மனைவி சிங்­களப் பெண். அவர் தங்கப் பல்­லக்கில் போய்­வ­ரு­வதால் ரன்­தோலி எனவும், இளைய மனை­வி­யான முஸ்லிம் பெண் இரும்புப் பல்­லக்கில் போய்­வ­ரு­வதால் யக்­க­ட­தோலி எனவும் அழைக்­கப்­பட்டனர். முஸ்லிம் மனை­வியின் பெயர் ஆலியா எனவும் கூட ஒரு குறிப்பு உள்­ளது.

முஸ்லிம் மனை­விக்கு தன் மூலம் பிறந்த மக­னுக்கே அர­சு­ரிமை வாரிசை வழங்க இரண்டாம் புவ­னே­க­பாகு ஏன் நினைத்தார். இதுவும் கூட அவர் ஒரு முஸ்­லிமே என்­ப­தற்கு அடை­யா­ள­மாக இருக்­கி­றது. அப்­போது இந்­தியா முஸ்லிம் ஆட்­சியின் கீழ் இருந்­ததால் இரண்டாம் புவ­னே­க­பா­குவின் செய்கை இலங்­கை­யையும் முஸ்லிம் நாடாக்­கி­விடும் என சிங்­கள மக்கள் அஞ்­சினர். இதனால் அரச வாரி­சு­ரி­மையை சிங்­கள மனை­வியின் மக­னுக்கே பெற்­றுக்­கொ­டுக்க நாட்டு மக்கள் அணி ­தி­ரண்­டனர். இதனால் மூத்த மனை­வியின் குடும்­பத்­தினர் இரண்டாம் புவ­னே­க­பா­கு­வையும் முஸ்லிம் மனைவி உட்­பட அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையும் கொலை செய்­தனர். எனினும் முடிக்­கு­ரிய பிள்ளை ஒரு சலவைப் பெண்ணால் கடத்­தப்­பட்டு பேரு­வ­ளையில் வளர்க்­கப்­பட்­டது.
வீர­கல்­புர தேவி பெற்ற மகன் சலவைப் பெண்ணால் அரண்­ம­னை­யி­லி­ருந்து இர­க­சி­ய­மாக எடுத்துச் செல்­லப்­பட்­ட­தா­கவும் அப்­போது 67 அந்­தப்­புர அழ­கி­க­ளோடு தற்­கொலை செய்து கொண்­ட­தா­கவும் வர­லாற்­றா­சி­ரியர் யூஸ்டஸ் விஜே­துங்க குறிப்­பி­டு­கிறார் அல்­லவா? இது இரண்டாம் புவ­னே­க­பா­குவை இழி­வு­ப­டுத்தும் தக­வ­லாகும். இவ­ருக்கு அந்த முஸ்லிம் பெண்ணின் பெயர் தெரி­ய­வில்லை. அதனால் தான் யக்­கட தோலிய, மெத­கெட்­டிய குமாரி எனும் பெயர்­களைப் போல் வீரகல் புர­தேவி என்­கிறார். ஆக மகனின் முஸ்லிம் பெயரும் இல்லை. தந்­தையின் முஸ்லிம் பெயரை மட்டும் கூறவா போகி­றார்கள்?

ஆட்­சியை 1325 ஆம் ஆண்டு நான்காம் பராக்­கி­ர­ம­பாகு இரண்டாம் புவ­னே­க­பா­கு­வி­ட­மி­ருந்து கைப்­பற்­றி­ய­போது வத்­ஹிமி ராஜா­வுக்கு 10 வயது. அவர் பேரு­வ­ளையில் 5 வரு­டங்கள் வாழ்ந்து பின் குரு­நா­க­லைக்குப் படை­யோடு வந்து நான்காம் பராக்­கி­ர­ம­பா­கு­வி­ட­மி­ருந்து ஆட்­சியைக் கைப்­பற்­றி­ய­போது 15 வயது. அவர் படு­கொலை செய்­யப்­பட்­ட­போது 18 வயது. ஆக மூன்று வருட கால ஆட்சி புரிந்த வஸ்­து­ஹி­மி­ரா­ஜ­கலே பண்­டார ஒரு முஸ்லிம் அர­ச­ராவார். இவ­ரது இயற்­பெயர் குராஷான் செய்யித் இஸ்­மாயீல் என்­ப­தாகும். இவர் வசமே புனித தந்­தமும் இருந்­தி­ருக்­கி­றது.

இவரைப் பற்றி  மகா­வம்சம் குறிப்­பி­டு­கையில் வஸ்­து­ஹிமி அறஞ்­செய்து நன்மை பெற முயன்ற அர­ச­னாவார். இவர் இஸ்­லாத்தை தழு­வி­ய­வ­ராக இருப்­பினும் தினந் தோறும் 1000 பிக்­கு­க­ளுக்கு தானம் வழங்­கு­வதை கட­மை­யாகக் கொண்­டி­ருந்தார். வருடா வருடம் மதச் சடங்­கையும் தனது முடி­சூட்டு விழா­வையும்  அரச கௌர­வப்­படி கொண்­டாடி ஆர­வா­ர­மா­கவும் வெற்­றி­வீ­ர­னா­கவும் ஊர­றியச் செய்தார் என்­கி­றது.
வர­லாற்­றா­சி­ரியர் ஜீ.சீ.மென்டிஸ் “இலங்­கையின் ஆரம்­ப­கால வர­லாறு” எனும் தனது நூலில் 1325 ஆம் ஆண்டு வரை இரண்டாம் புவ­னே­க­பாகு  குரு­நா­க­லையில் இருந்து ஆட்சி புரிந்தார் என கூறி­யி­ருப்­பது  தவ­றாகும். இலங்­கையில் 9 ஆம் ஆண்டு வர­லாற்று பாட நூலில் நான்காம் பராக்­கி­ர­ம­பாகு 1325 ஆம் ஆண்டு வரை அங்­கி­ருந்து ஆட்சி புரிந்­தி­ருந்­த­தாக குறிப்­பிட்­டுள்­ளதே சரி­யான தர­வாகும். எனினும் 1325 ஆம் ஆண்­டுக்குப் பின் குழப்பம் ஏற்­பட்­டது  என முடித்­தி­ருப்­பது தவ­றாகும்.

மன்னர் குராஷான் செய்யித் இஸ்­மாயீல்  நான்காம் பராக்­கி­ர­ம­பா­குவை தோற்­க­டித்து ஆட்­சியைக் கைப்­பற்­றி­யதும் 1328 ஆம் ஆண்டு வஸ்­து­ஹி­மி­ரா­ஜ­க­லே­பண்­டார எனும் குராஷான் செய்யித் இஸ்­மாயீல் படு­கொலை செய்­யப்­பட்­டதும் அதன் பின் ஆட்­சியின் தலை­ந­கரம் கம்­ப­ளைக்கு மாற்­றப்­பட்­ட­துமே அதில் குழப்பம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஆக ஒரே சொல்லில் ஒரு வர­லாறே மறைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது அல்­லவா-?

குராஷான் செய்­யிது இஸ்­மாயீல் கலே பண்­டார வஸ்­து­ஹி­மி­ராஜ படு­கொலை செய்­யப்­பட்ட விதம் பற்றி குரு­நா­கல விஸ்­த­ரய பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கி­றது. வஸ்­து­ஹிமி அர­ச­வையின்  வெறுப்­புக்கு உள்­ளா­கி­யதால் அவரைக் கொல்ல அவர்கள் சதியை தந்­தி­ர­மாகச் செய்­தனர். அதன்­படி எத்­தா­கல உச்­சியில் பிரீத் ஏற்­பாடு செய்­யப்­பட்டு  அதில் விசேட மண்­ட­பத்­தையும் கட்டி மன்­ன­னுக்கு ஆச­னமும் வைக்­கப்­பட்­டது. பிரித் வைபவம் உச்­ச­நிலை அடை­கையில் சதி­கார நம்­பிக்கை துரோ­கிகள் ஆச­னத்தின் கால்­களை அகற்­றி­யதால் மன்னன் பள்­ளத்தில் வீழ்ந்து பரி­தா­ப­மாக இறந்தார் என்­கி­றது. அது பற்றி சரித்­தி­ரா­சி­ரியர் யூஸ்டஸ் விஜே­துங்க குறிப்­பி­டு­கையில், வஸ்­து­ஹி­மியை ஒழிக்க எதிர்­கா­லத்தைப் பற்றி சிந்­திக்­காது அவர்கள் ஒரு தந்­திர திட்­டத்தை வகுத்­தனர். மன்­ன­னுக்கு எதி­ரான விரோத அலை காரி­யத்தை முடித்துக் கொள்­ளட்டும் என விட்டு விட்­டனர். அதன்­படி முழு இரவும் பிரித் வைபவம் எத்­தா­க­லயில் ஏற்­பாடு செய்­யப்­பட்டு மன்­ன­னுக்­காக அழ­கிய மண்­டபம் கட்­டப்­பட்­டது. நடு இரவில் தொட­ராகப் பிரித் ராகம், கேட்­போரை ஒரு­வர்பின் ஒரு­வ­ராக உறங்க வைத்­த­போதும் சதி­கா­ரர்கள் உறங்­க­வில்லை. திடீரென ஏதோ முறியும் சத்­தத்­தோடு மனித அவலக் குரலும் கேட்டது. ஆம், எத்தாகலையின் உச்சியிலிருந்து ஒருவர் மரணத்தை நோக்கி உருண்டார். இதனால் சதிகாரர்களின் திட்டம் பலித்தது. அது ஒரு விபத்து எனக்காட்ட அவர்கள் எண்ணியபோதும் உண்மை வெளிப்பட்டது என்கிறார். அதன் பிறகு 14 ஆண்டுகளாக குருநாகலையைத் தலைநகராகக் கொண்டு எவராலும் ஆட்சியமைக்க முடியவில்லை. மக்கள், சதிகாரர்களை கொலை செய்தனர். 1342 ஆம் ஆண்டு நான்காம் புவனேகபாகு கம்பளையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி அமைத்தார்.
குராஷான் செய்யித் இஸ்மாயீல் வஸ்துஹிமிராஜகலே பண்டார பௌத்தர்களின் புனித தந்தத்தை வைத்திருந்திருக்கிறார். பெரஹர உட்பட பௌத்தர்களின் புனித வைபவங்களையும் சிறப்பாக நடத்தியிருக்கிறார். பிரித் வைபவங்களிலும் சமுகமளித்திருக்கின்றார்.  அவரை பௌத்தர்களின் புனித வரலாற்று நூலான மகாவம்சமே புகழ்ந்துரைக்கின்றது. அவரின் அருங்குணங்களைக் கண்டு சிங்கள மக்களே ஏற்றிப் போற்றியிருக்கிறார்கள். இவை ஆட்சியுரிமை வாரிசுகளுக்கும் இன, மத உணர்வாளர்களுக்கும் பெரும் சவால்களாகவே இருந்தன.

எனவே, உலகளாவிய ரீதியில் முஸ்லிம்களின் ஆதிக்கம் நிலவுவதையும் தொடராக ஏராளமான முஸ்லிம்கள் இலங்கைக்கு வருவதையும் முஸ்லிம் அல்லாத சில நாடுகள் வர்த்தக தொடர்புகளால் முஸ்லிம் நாடுகளானதையும் முன்வைத்து சதிகாரர்கள் புரட்சியை உருவாக்கிவிட்டனர்.

சிறிசேனவின் உரைக்கு பதிலளிக்கவேண்டாம் - ரணில் உத்தரவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றிய உரை குறித்து கருத்துக்கள் எதனையும் வெளியிட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கியதேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று காலை ஸ்ரீகோத்தாவில் இடம்பெற்ற ஐக்கியதேசிய கட்சியின் செயற்குழுவின் கூட்டத்தில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

சிறிசேனவின் கருத்திற்கு ஐக்கியதேசிய கட்சி உடனடியாக பதில் அளிக்கவேண்டும் என இளம் நாடாளுமன்ற விடுத்த வேண்டுகோளிற்கு பதில் அளிக்கையிலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கருத்திற்கு பதில் அளிப்பது குறித்து கவனம் செலுத்துவதற்கு பதில் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமுயலவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சல்­மாவைப் பெற்­றெ­டுத்த 21 மணி­நே­ரத்தில், பட்­ட­ம­ளிப்பில் கலந்­து­கொண்ட ஸெய்னப்


தனது இரண்­டா­வது பெண் குழந்­தையைப் பிர­ச­வித்­தி­ருந்த 26 வயது ஸெய்னப் அப்­துல்லாஹ் என்ற அமெ­ரிக்­காவின் மின்­னஸ் ­பொலிஸ் பிர­தே­சத்தைச் சேர்ந்த இளம் தாயொ­ருவர் 21 மணி­நே­ரத்தில் பட்­ட­ம­ளிப்பு விழாவில் கலந்­து­கொண்­டுள்ளார்.

இரவு 8.00மணிக்கு தனது இரண்­டா­வது பெண் குழந்­தை­யான சல்­மாவைப் பெற்­றெ­டுத்த அவர் மறுநாள் மாலை விசேட கல்­வித்­து­றையில் முது­மானி டிப்­ளோமா பட்­டத்­தினை பெற்­றுக்­கொண்டார்.

எனது குடும்­பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்­டத்தை எட்­டிய முத­லா­வது அங்­கத்­தவர் நான் என்­பதால் தனக்கு பட்­டத்­தினை பெற்­றுக்­கொள்­வது முக்­கி­ய­மாக இருந்­தது என ஸெய்னப் அப்­துல்லாஹ் தெரி­வித்தார்.

சென் தோமஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தில் இரண்டு வரு­டங்கள் தனது பட்­டப்­ப­டிப்பைத் தொடர்ந்தார்.  2006 ஆம் ஆண்டு சிரி­யா­வி­லி­ருந்து இடம்­பெ­யர்ந்து அமெ­ரிக்­காவில் குடி­யே­றிய அவர் தற்­போது தனது சொந்த பகல்­நேர பரா­ம­ரிப்பு நிலை­யத்­தினை நடத்தி வரு­கின்றார். இந்த இலக்கை அடை­வ­தற்­காக இரவு நேரத்­தி­லேயே தான் பாடங்­களைப் படித்­த­தாக ஸெய்னப் தெரி­வித்தார்.

குழந்­தையைப் பிர­ச­வித்த மறு­நாளே பட்­ட­ம­ளிப்பு விழாவில் கலந்து கொள்­வது பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மான செயல் என தான் கரு­தி­ய­போ­திலும் ஸெய்ன­பிற்கு பட்­டத்­தினை நேர­டி­யாகப் பெற்­றுக்­கொள்­வ­தி­லேயே ஆர்வம் இருந்­தது என ஸெய்னபின் தாயார் 50 வய­தான அனாப் யுகுப் தெரி­வித்தார்.

பட்­ட­ம­ளிப்பு விழாவில் கலந்­து­கொள்ளும் தனது திட்­டத்தைத் தெரி­வித்­ததும் தனது நண்­பிகள், குடும்­பத்­தினர் மற்றும் வைத்­தி­யர்கள் கூட அதிர்ச்­சி­ய­டைந்­த­தாக ஸெய்னப் தெரி­வித்தார்.

 இந் நிகழ்வில் நான் நேர­டி­யாகக் கலந்­து­கொள்ள வேண்டும் என விரும்­பி­ய­தற்­கான காரணம் எனது குடும்­பத்தில் மூன்றாம் நிலை கல்வி மட்­டத்தை எட்­டிய முத­லா­வது அங்­கத்­தவர் நான் என்­ப­த­னா­லாகும். அதுதான் நான் செல்ல வேண்டும் என தீர்­மா­னித்­த­தற்­கான காரணம் என அவர் தெரி­வித்தார்.

என்னை நானே பாராட்டிக் கொள்ள விரும்­பினேன், ஏனென்றால், இந்த இலக்கை அடை­வ­தற்கு கடு­மை­யாக உழைத்­துள்ளேன். உரிய நேரத்தில் எனது ஒப்­ப­டை­களைக் கைய­ளிக்க வேண்டும் என்­ப­தற்­காக நள்­ளி­ரவு தாண்­டியும் அந்த வேலை­களைச் செய்­துள்ளேன். இரவு நேரக் குளி­ரிலும் கல்­லூ­ரி­யி­லிருந்து பய­ணித்­தி­ருக்­கிறேன். அதற்­காக என்னை நானே பாராட்­டிக்­கொள்ள விரும்­பினேன்.

எனது வகுப்பு நண்­பர்கள் விழாவில் என்­னுடன் கலந்­து­கொண்ட எனது மகள் சல்­மாவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர். எனது மகளைப் பார்த்த எனது வகுப்புத் தோழர்கள் குழந்தை அழ­காக இருப்ப­தாகக் கூறி­ய­தோடு எனது சாய­லிலே சல்மா இருப்­ப­தா­கவும் தெரி­வித்­த­தாக மகிழ்ச்சி பொங்க தெரி­வித்தார் ஸெய்னப்.

என்னை நினைத்தும், எனது அடைவு குறித்தும் நான் பெரு­மைப்­ப­டு­கின்றேன், சென் தோமஸ் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஆத­ர­வின்றி என்னால் இதனைச் செய்­தி­ருக்க முடி­யாது எனவும் அவர் தெரி­வித்தார்.

தனது மக­ளுடன் நேரத்தைச் செல­விட சில மாதங்கள் ஓய்­வெ­டுத்­துக்­கொள்ள உத்­தே­சித்­துள்ள ஸெய்னப் தனது கலா­நிதிப் பட்­டத்­திற்­கான கற்­கை­நெ­யினை தொடரத் திட்­ட­மிட்­டுள்ளார்.
-Vidivelli

கோத்தபாயவுக்கு அஞ்சுகிறாரா மகிந்த..?

ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ச வரும் பட்சத்தில் தான் அதிகாரத்திற்கு வருவது பாதிக்கும் என மகிந்த ராஜபக்ச கடும் யோசனையில் இருப்பதாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பு அரசியல் தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடரப்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,

பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை கவரக்கூடிய கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தவேண்டும் என்ற நிலைப்பாடும் மகிந்த அணிக்குள் காணப்படுகின்றது.

ஆனால், கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தால் அது மீண்டும் அதிகாரத்திற்கு வரும் மகிந்த ராஜபக்சவின் எதிர்பார்ப்பை பாதிக்கும் என்பதால் மகிந்த ராஜபக்சவும் அவரது நண்பர்களும் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதை எதிர்க்கின்றனர்.

மீண்டும் மகிந்த ராஜபக்ச அதிகாரத்திற்கு வருவதற்கு அவசியமான அரசமைப்பு மாற்றங்களை மேற்கொள்ள கூடிய ஒருவரையே அவர் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த விரும்புகின்றார்.

இந்நிலையில் அதிகார ஆசை இல்லாதவராகவும், மகிந்த ராஜபக்சவினால் இலகுவாக கையாளப்படக்கூடியவராக உள்ள அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்சவை நிறுத்தவேண்டும் என மகிந்த அணியை சேர்ந்த சிலர் விரும்புகின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சவை சித்தரிக்கும் முயற்சிகள் இடம்பெற்றாலும் தான் அதிகாரத்திற்கு வருவதை இது பாதிக்கும் என்பதால் மகிந்த ராஜபக்ச இதனை எதிர்க்கின்றார், இதன் காரணமாக மகிந்த அணிக்குள் பாரிய குழப்பநிலை காணப்படுகின்றது என்றும் விக்கிரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

இதுவொருபுறமிருக்க, ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் தனக்கு வழிவிடக்கூடிய ஒருவரை நிறுத்தவேண்டிய தேவை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஏற்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய உரை (வீடியோ)


மைத்திரிபாலவின் சர்ச்சைக்குரிய உரை (வீடியோ)


பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, கால் ஆடியாது - ஹோமாகமயில் அபூர்வம்

ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அபூர்வ சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

கடந்த வாரத்தில் மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் வயிற்று வலி காரணமாக, ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் போது மருத்துவர்கள் குறித்த பெண்ணை பரிசோதனை செய்ததுடன் தாதியொருவர் ஊசி ஒன்றை ஏற்றியுள்ளார்.

அதன் பின்னர் குறித்த பெண் மூர்ச்சையாகியுள்ளார் இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவர்கள் பெண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வைத்தியசாலையில் இருந்த பெண்ணின் உறவினர்கள், ஏனைய உறவினர்களுக்கும் மரணம் பற்றி அறிவித்துள்ளனர்.

பொதுவாக உயிரிழந்த பின்னர் ஒரு மணித்தியாலம் வரையில் நோயாளியின் சடலம் வைத்தியசாலையின் நோயாளர் வார்ட் அறையில் வைக்கப்படுவது வழமையானதாகும்.

இவ்வாறு குறித்த பெண்ணின் சடலத்தையும் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் பிரேத அறைக்கு எடுத்துச் சென்ற போது, செல்லும் வழியில் குறித்த சடலத்தின் கால் ஒன்று அசைவதனை பெண்ணின் உறவினர் ஒருவர் கண்டுள்ளார்.

பிரேத அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டாம் என கோரியுள்ளனர். அதன் பின்னர் குறித்த பெண்ணை உறவினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும், பெண்ணின் உடல் நிலை மோசமாகவே காணப்படுகின்றது என தெரிவிக்கப்படுகிறது. வைத்தியர்கள் மற்றும் தாதியரின் பொறுப்பற்ற செயல் குறித்து உறவினர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

குற்றவாளிக் கூண்டில் பிக்குகள் ஏறுவதை, தடுத்துசிறுத்திய இளஞ்செழியன்

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் ஏறிய இரண்டு பௌத்த துறவிகளை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த இரண்டு பௌத்த துறவிகளுக்கும் எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, வழக்கிற்காக நீதிமன்றுக்கு இன்றைய தினம் அழைக்கப்பட்டிருந்தனர்.

தொடர்ந்து, குற்றவாளிகளான பௌத்த துறவிகள் அவர்களின் வழக்கு விசாரணைக்கு வரும் தருணத்தில் குற்றவாளிக் கூண்டியில் ஏறியுள்ளனர், எனினும் அவ்விருவரையும் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

சர்வமதத்தினையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத்தலைவர்கள் யாராகவிருந்தாலும், அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது சாலச் சிறந்ததும் அல்ல, அது மரபும் அல்ல என்ற அடிப்படையில் நீதிபதி அவர்களை குற்றவாளிக் கூண்டில் இருந்து இறங்கச் செய்துள்ளார்.

எனினும், இவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் முறையாக நடைபெறும் எனவும், அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் நீதிமன்றத்தினால் முறையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்த ரி.பி.ஜாயா

இலங்கையின் தேசிய வீரரும், கல்விமானும், சிறந்த இராஜதந்திரியும், முன்னாள் அமைச்சருமான கலாநிதி ரி. பி. ஜாயாவின் 58 வது நினைவுதினம் இன்று (31.05.2018) ஆகும்.

இலங்கையின் சுதந்திரப் போராட்ட முன்னோடிகளில் ஒருவராகவும், இந்நாட்டின் தேசிய வீரர்களில் ஒருவராகவும் மாத்திரமல்லாமல் இருபதாம் நூற்றாண்டில் இந்நாட்டு முஸ்லிம்களின் சமூக, கல்வி மறுமலர்ச்சிக்கு அயராது உழைத்து அடித்தளமிட்டவர்களில் ஒருவராகவும் திகழ்பவர் மறைந்த ரி.பி.ஜாயா ஆவார்.

இவர் இந்நாட்டு முஸ்லிம்களில் மலாயர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் கூட முழு முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாத்திரமல்லாமல் நாட்டில் வாழும் சகல இன மக்களதும் மேம்பாட்டுக்காகவும் உழைத்தார். அதேநேரம் இந்த நாடு பல்லின மக்கள் வாழும் தேசம் என்பதை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர் மறந்து செயற்படவில்லை. அவர் இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சகவாழ்வு மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணம் மிக்கவராக விளங்குகின்றார்.
துவான் புகார்தீன் ஜாயா 1890 ஜனவரி முதலாம் திகதி கண்டி மாவட்டத்திலுள்ள கலகெதரவில் பிறந்தார். பொலிஸ் சார்ஜன்ட் காசிம் ஜாயா மற்றும் நோனா காசிம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த இவர் சிறுபராயத்தில் இருந்த போது, இவரது தந்தைக்கு குருநாகலுக்கு இடமாற்றம் கிடைத்தது. அதனால் ஜாயாவின் தந்தை தம் குடும்பம் சகிதம் குருநாகலுக்கு சென்று வசித்தார். இவ்வாறான சூழலில் ஜாயா ஆரம்பக் கல்விக்காக குருநாகல் அங்கிலிக்கன் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். அவரது பெற்றோர் ஜாயாவுக்கு சிறுபராயத்திலேயே அல் குர்ஆனியக் கல்வியை அளிக்கத் தவறவில்லை. குருநாகலில் வாழ்ந்த உமர் லெப்பை ஆலிமிடம் சிறுவன் ஜாயா சேர்க்கப்பட்டான். ஜாயாவும் குர்ஆனை அதிக ஆர்வத்தோடு கற்றார்.

இச்சந்தர்ப்பத்தில் ஜாயாவின் தந்தை கொழும்புக்கு இடமாற்றப்பட்டார். இச்சமயம் ஜாயா கண்டி சென் போல்ஸ் வித்தியாலயத்தில் கற்றுக் கொண்டிருந்தார். ஜாயாவின் குடும்பமே கொழும்புக்கு இடம்பெயர்ந்தது. இவ்வேளையில் ஜாயாவுக்கு விஷேட கல்வி புலமைப் பரிசில் கிடைத்தது. அதற்கேற்ப அவர் 1904 இல் கொழும்பு முகத்துவாரம் சென் தோமஸ் கல்லூரியில் இணைந்தார். ஜாயா சிறுபராயத்திலேயே கல்வியில் அதி திறமையை வெளிப்படுத்தியதன் விளைவாக அவருக்கு மூன்றாம், ஆறாம் வகுப்புக்களில் இரட்டை வகுப்பேற்றமும் கிடைக்கப் பெற்றது.
இவ்வாறான நிலையில் 1906 இல் கேம்பிரிட்ஜ் கனிஷ்ட பரீட்சையில் தோற்றி தெரிவான இவர், கணித பாடத்திற்கான ஜே.ஏ.சி. மெண்டிஸ் புலமைப் பரிசிலைப் வென்றார். அதனைத் தொடர்ந்து 1909 இல் பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தியடைந்தார்.

ஆசிரியத் தொழிலில் பிரவேசம்:

ரி.பி. ஜாயா 1910 ஜனவரி மாதம் கண்டி தர்மராஜ கல்லூரியில் உதவியாசிரியராக இணைந்தார். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த ஜாயாவுக்கு சொற்ப காலத்தில் அதாவது அதே வருடம் மே மாதம் மொரட்டுவ பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு இடமாற்றம் கிடைத்தது. அங்கு சுமார் ஏழு வருடங்கள் ஆசிரியராகக் கடமையாற்றிய ஜாயா, 1917 இல் கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஜாயா ஆசிரியர் தொழிலில் இணைந்ததோடு கல்வி கற்பதை நிறுத்தி வி-டவில்லை.தொடர்ந்தும் உயர் கல்வியை மேற்கொண்டார்.ஆங்கிலம், லத்தீன், கிரேக்கம், வரலாறு மற்றும் கணிதப் பாடங்களுக்கான இடைநிலைப் பரீட்சையில் சித்தி பெற்று லண்டன் கலைப்பட்டதாரியானார் ஜாயா. அத்தோடு சட்டக் கல்லூரியில் இணைந்தும் கற்றார்.
இக்காலப் பகுதியில்தான் அதாவது 1921 இல்இவர் கொழும்பு ஸாஹிறாக் கல்லூரியின் அதிபராகப் பதவியேற்றார். அன்று தொடக்கம் சுமார் 27 வருடங்கள் அங்கு அதிபராகக் கடமையாற்றிய இவர், ஸாஹிறாவை சகல துறைகளிலும் முன்னேற்றுவதற்காக இரவுபகல் பாராது அயராது உழைத்தார். இவர் இக்கல்லூரியின் அதிபராகப் பதவியேற்கும் போது ஸாஹிறாவின் மாணவர் எண்ணிக்கை ஐம்பதாகவே காணப்பட்டது. அந்தளவுக்கு கொழும்பு மக்கள் கல்வியில் பின்னடைந்து காணப்பட்டனர்.கல்வியின் முக்கியத்துவத்தை மக்களுக்கு எடுத்துக் கூறி ஜாயா முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் பயனாக கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை சொற்ப காலத்தில் சுமார் ஆயிரம் வரை உயர்ந்தது. அத்தோடு அவர் நின்று விடவில்லை. கல்வியின் முக்கியத்துவத்தை நாட்டின் ஏனைய பிரதேச முஸ்லிம்களுக்கும் எடுத்துக்கூறவும் அவர்கள் மத்தியில் கல்வியின் மீதான ஆர்வத்தையும் ஏற்படுத்தவும் அவர் தவறவில்லை.

இதன் விளைவாக கொழும்பில் மாத்திரம் காணப்பட்ட ஸாஹிறாக் கல்லூரி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் ஆரம்பிக்கப்படும் நிலைமையை சொற்ப காலத்தில் ஏற்படுத்தினார்.

அரசியல் பிரவேசம்:
இதேகாலப்பகுதியில் டொனமூர் அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட அரச பேரவைக்கான தேர்தல் 1931 இல் நடைபெற்றது. அத்தேர்தலில் இவர் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் இதேதொகுதியில் இந்நாட்டின் தொழிற்சங்கத் தலைவராக விளங்கிய ஏ. ஈ. குணசிங்க போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1936 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் போட்டியிட்டும் ஜாயா தோல்வியுற்றார்.

ஆனாலும் அவர் நியமன உறுப்பினராக அரச பேரவைக்கு தெரிவானார். இப்பேரவையில் இவர் கல்வி நிறைவேற்றுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இப்பதவிக் காலத்தில் அரச பேரவையில் தன் சக உறுப்பினராக இருந்த சேர் ராசிக் பரீத்துடன் இணைந்து முஸ்லிம் பிரதேசங்களின் கல்வி மேம்பாட்டின் நிமித்தம் பாடசாலைகளை அமைத்தார். குறிப்பாக புத்தளம், தர்காநகர், கம்பளை, மாத்தளை, கொழும்பு – வேகந்த ஆகிய இடங்களில் ஸாஹிராக் கல்லூரிகளை ஆரம்பித்தார். இது முஸ்லிம்கள் கல்வியின் மீது கவனம் செலுத்தும் நிலைமையை ஏற்படுத்தியது. அதேநேரம் ஆசிரியர்களுக்கான ஒய்வூதியத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவரும் இவரேயாவார்.

தேசப்பற்றின் வெளிப்பாடு:
நாட்டில் சகவாழ்வு, நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை என்பவற்றிலும் இவர் அதிக அக்கறை செலுத்தினார். இந்தவகையில் 1944 ஆம் ஆண்டில் இலங்கைக்கான சுதந்திரம் தொடர்பான யோசனை அரச பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டது. அச்சமயம் கலாநிதி ஜாயா முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதியாக இருந்தார். அப்போது அவர் பிரதிநிதிகள் சபையில் ஆற்றிய உரை இந்நாட்டு வரலாற்றில் அழியாத் தடம்பதித்துள்ளது.

அந்த உரையில் ஜாயா, “முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகளும் துயரங்களும் உள்ளன. ஆனால் அவற்றை முன்வைப்பதற்கான தருணம் இதுவல்ல. ஏனைய எல்லாவற்றையும் விட தாய்நாட்டின் சுதந்திரமே முதன்மையானது. நாம் சுதந்திரத்திற்குப் பின்னர் எங்களது மூத்த சகோதரர்களான சிங்கள மக்களோடு அவற்றைக் கலந்துரையாடித் தீர்த்துக் கொள்ள முடியும். நாடு பூராவும் சென்று எல்லா முஸ்லிம் அமைப்புக்களுடனும் முஸ்லிம் முக்கியஸ்தர்களோடும் கலந்துரையாடினேன். பிரதிநிதிகள் சபையின் ஏனைய சகோதர உறுப்பினர்களோடும் கலந்துரையாடி முழுமையான உடன்பாட்டுடன் தான் இதனை இங்கு மொழிகின்றேன்.

இந்த இக்கட்டான நிலையில் முஸ்லிம்கள் சார்பாக எந்தவொரு நிபந்தனையையும் நாம் முன்வைக்கவில்லை. தாய்நாட்டின் சுதந்திரம் தொடர்பான போராட்டத்தில் முன்னணியில் நிற்க வேண்டியது முஸ்லிம்களின் முக்கிய பொறுப்பாகும். அதற்காக எவ்வளவு தூரம் பயணிக்கவும் முஸ்லிம்கள் தயார். எல்லா பலன்களையும், எல்லா பயன்களையும், எல்லா அதிஷ்ட நிலைகளையும் தாய் நாட்டின் சுதந்திரத்திற்காக அரப்பணிக்கவும் அவர்கள் தயாராக உள்ளனர்” என்று உரக்கச் சொன்னார்.

இச்சமயம் சபையில் இருந்த பிரதிநிதிகள் ஜாயாவின் நிலைப்பாட்டைப் பெரிதும் வரவேற்றனர். குறிப்பாக எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்கா, 'ஜாயாவின் நிலைப்பாடானது எமது சுதந்திரப்போராட்டத்தையும் தேசிய ஒற்றுமையையும் யதார்த்த நிலைக்கு மாற்றத் துணைபுரிந்துள்ளது' என்றார்.
இதேவேளை சோல்பரி யாப்பின் கீழ் பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவென தேசியக் கட்சியின் தேவை 1946களில் உணரப்பட்டது. இவ்வாறான பின்னணியில் 1946 செப்டம்பர் 06 ஆம் திகதி அன்றைய முக்கிய அரசியல் அமைப்புக்களாக விளங்கிய தேசிய காங்கிரஸ், சிங்கள மகா சபை, அகில இலங்கை முஸ்லிம் லீக், சோனக சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளும் தமிழ் மற்றும் பறங்கிய சமூகங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் அல்பிரட் கிரசென்ட் பாம் கோட்டில் ஒன்று கூடினர். அச்சமயம் எல்லா அமைப்புக்களையும் ஒன்றிணைத்து ஒரு தேசியக் கட்சி அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையை எஸ். நடசேன் முன்வைத்தார். அந்த யோசனையை கலாநிதி ஜாயா வழிமொழிந்தார். அதனடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி உருவானது.

முதலாவது தொழில் அமைச்சர்:

இவ்வாறு சகவாழ்வுடன் கூடிய தேசிய சிந்தனையில் செயற்பட்ட கலாநிதி ஜாயா 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்டு இரண்டாவது உறுப்பினராகத் தெரிவானார். அதனூடாக சுதந்திர இலங்கையின் 14 பேர் கொண்ட முதலாவது அமைச்சரவையில் சமூக சேவைகள் மற்றும் தொழில் அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டார். 1950 ஆம் ஆண்டில் தமது அமைச்சு பதவியையும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜிநாமா செய்து விட்டு பாகிஸ்தானுக்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்றார். இவரே பாகிஸ்தானுக்கான இலங்கையின் முதலாவது உயர்ஸ்தானிகராவார்.

சாதாரண ஆசிரியராகப் பொதுவாழ்வை ஆரம்பித்த ஜாயா ஒரு கல்வியியலாளராகவும், அரசியல்வாதியாகவும், இராஜதந்திரியாகவும் மாத்திரமல்லாமல் முஸ்லிம் சமூகத் தலைவராகவும் இருந்து நாட்டுக்கு அளப்பறிய சேவையாற்றி வந்தார். இவ்வாறான நிலையில் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக மக்கா சென்றிருந்த கலாநிதி ஜாயா, 1960 மே 31 ஆம் திகதி மதீனாவில் காலமானார். அன்னாரின் ஜனாஸாஅங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.

"ஜனாதிபதி ஆகுவதே, சம்பிக்கவின் கனவு"

சம்பிக்க ரணவக்கவின் கனவு 2025ல் ஜனாதிபதி ஆகுவதே என பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

சமூக மற்றும் அமைதிக்கான நிலையத்தில் நேற்று இடம்பெற்ற பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி பதவிக்கு வரும் வரை ஜனாதிபதி முறையை தான் மாற்றுவதாக கூறும் அனைவரும் பதவிக்கு வந்ததன் பின்னர் இரண்டாவது தடவையாகவும் தான் ஜனாதிபதியாக என ஆசைப்படுகின்றனர்.அதனால் அவர்களால் இந்த விடயம் மேற்கொள்ளப்படுவதில்லை. சம்பிக்க ரணவக்க போன்றோர் ஜனாதிபதி முறைமையை மாற்றுவதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.2025ல் இந்த நாட்டு ஜனாதிபதி ஆவதற்கு தன்னால் முடியும் என சம்பிக்க ரணவக்க நினைத்துக் கொண்டிருக்கிறார் என பிரஜைகளின் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் காமினி வியங்கொட தெரிவித்துள்ளார்.

8 மாத குழந்தையை, 8 பேர் கொண்ட குழு கடத்தியது

வீட்டுக்குள் பலவந்தமாக நுழைந்த எட்டுப்பேர் அடங்கிய இனந்தெரியாத குழுவொன்று, வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 மாதங்களேயான குழந்தையை கடத்திச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் வவுனியா, குட்ஷெட் வீதியில், முதலாவது குறுக்கு வீதியிலுள்ள வீடொன்றிலேயே இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வானில் வந்தவர்களே குழந்தையை கடத்திக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர் என, பெற்றோர் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசுதரன் வானிஷன் என்றக் குழந்தையையே, இனந்தெரியாத நபர்கள் கடத்திச்சென்றுள்ளனர் என்றும் தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

May 30, 2018

வாழ்க்கை இடிந்து போகும் போதெல்லாம்...

வாழ்க்கை
இடிந்து போகும்போதெல்லாம்
எந்த இடத்திலும்
ஒரு தாய்
அதனைக் கட்டியெழுப்பி விடுகிறாள்.


உலகின் மிகப்பெரிய, இப்தார் நிகழ்வு


அல்-ஹரம் மதீனா இதற்க்கு சாட்சிம் அளிக்கிறது. தினமும் ஏறத்தாள மூன்று இலட்சம் நோன்பாளிகள் அமர வசதி செய்யப்படுகிறது.

இஃப்தாரில் நுகரப்படும் 1,30,000 லிட்டர் ஜம் ஜம் தண்ணீர், 50,000 லிட்டர் அரபிக் காபி, 3.00,000 ரொட்டி சுருள்களும், 50,000 லிட்டர் தயிர், 50,000 லிட்டர் ஜூஸ் மற்றும் 40 டன் பேரிட்சை பழத்திற்கான ஆகுமான ஒரு நாளைய செலவு ஏறத்தாள இந்திய மதிப்பிற்கு ₹ 1,70,00,000. (1 மில்லியன் சவூதி ரியால்) இதன் பொறுப்புகளை பல கொடையாளர்கள் ஏற்றுக்- கொள்கின்றார்கள்.

இந்த நிகழ்வு 15 நிமிடங்களில் நடந்தேறியவுடன் மஸ்ஜித் (அல் ஹரம்) முழுவதும் சுவடுகள் தெரியாத வண்ணம் சுத்தத்துடன் அதனுடைய பழைய நிலைக்கு மாறிவிடும்.

-சுபஹானல்லா
-எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!

இந்துக்களும், முஸ்லிம்களும் இணைந்து நோன்பு திறக்கும் நிகழ்வு


மும்பையில் உள்ள மும்ரா பகுதியில் அமைந்துள்ளது புர்ஹான் பள்ளிவாசல். இந்து முஸ்லிம் ஒற்றுமையை பறை சாற்ற பள்ளிக்கு இந்துக்கள் அழைக்கப்பட்டு நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வைக்கப்பட்டனர்.

நிலேஷ் உப்ரிகார் என்ற இந்து கல்யாணிலிருந்து வந்துள்ளார். 'பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.' என்கிறார்.

நிரஜ் பட்டா கூறும் போது 'கல்லூரிகளில் இஸ்லாம் பற்றி படித்துள்ளேன். பல தரப்பட்ட மக்களை சந்தித்ததில் மகிழ்ச்சி' என்கிறார்.

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
29-05-2018

Newer Posts Older Posts Home