Header Ads



'மன்னித்துவிடு எங்களை' - அசிஃபா நம் குழந்தை (Venkat Raman)


எட்டு வயதுகூட நிரம்பாத சிறு குழந்தை அசிஃபா. ஒரு நாள் காணாமல் போகிறாள். புலன்விசாரணை செய்ய ஒரு போலிசை நியமிக்கிறார்கள்.

அந்த போலிஸும் தேடுகிறான்.

ஒரு கோவிலில் 5 பேர் அந்த சிறு குழந்தையை கூட்டாக வன்கொடுமைக்குள்ளாக்கிக்கொண்டிருக்கிறார்கள், என்பது தெரிய வருகிறது.

இன்னும் சிறிது நேரத்தில் கொல்லவும் திட்டமிட்டிருக்கிறார்கள், என்று தெரியவருகிறது.

அந்த புலன்விசாரணையாளன் அங்கே செல்கிறான்.

அசீபாவை  பார்க்கிறான்..

அவளைக் கொல்வதற்கு முன், தானும் வன்கொடுமைக்குள்ளாக்க விரும்புவதாக சொல்கிறான்.

மறுபடியும் சில நாட்கள் தொடர்ந்து அச்சிறு குழந்தையை பாலாத்காரம் செய்கிறார்கள் .

நடைபிணமாகிவிட்ட அவளை பின்பு ஈவிரக்கமின்றி கொன்றுவிடுகிறார்கள்.

குற்றவாளிகளுக்காதரவாய் தேசிய கொடி ஏந்தி ஒரு கூட்டம் ஊர்வலம் போகிறது...

அதற்கு ஒரு பாஜக மந்திரி ஆதரவும் கொடுக்கிறான்.

நினைவில் நிறுத்தி யோசித்துப்பார்க்கிறேன்.

அசிஃபா...

என் மகனை விட இரண்டு வயது இளையவள்...

'மன்னித்துவிடு எங்களை' என்று சொல்லக்கூட மனமின்றி மனம் வெறுமையாய்  அலைவுறுகிறது

கண்களில் நீர் தேங்கி நிற்கிறது

அசிஃபா நம் குழந்தை...

Venkat Raman


1 comment:

  1. அல்லாஹ்வின் பிடி மிகவும் கடினமானது

    ReplyDelete

Powered by Blogger.