Header Ads



மன்னார் பிரதேச சபையை, கைப்பற்றிது மயில் - SLMC யும் உதவியது

மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முதன்முறையாகக் கைப்பற்றியது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்று தலைவராகத்  தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளைப்பெற்றுக்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முஜாஹிருக்கு ஆதரவாக டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் ஒரு உறுப்பினரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஒரு உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த இஸ்ஸதீனும், சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர். இந்த பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் 7 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். 

மன்னார் பிரதேச சபையின் உப தவிசாளராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்ஸதீன் 11 வாக்குகளைப் பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்சீன்; 9 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

மன்னார் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள்  காங்கிரஸ் முதன் முதலாக கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

1 comment:

  1. மன்னார் நகர சபை போல் தமிழர் விடுதலை கூட்டணியும் ஈ பி டி பி யும் நடுநிலை வகித்திருந்தால் கூட தமிக் தேசிய கூட்டமைப்பு அங்கே வெற்றி பெற்றிருக்கும். கேவலம் அரசியலுக்காக இனத்தையே காட்டிக்கொடுத்த துரோகிகள் கூட்டம். இப்பொழுது பிரதேச சபையையே தாரை வார்த்து கொடுத்துளீர்கள். அமெரிக்கா எவ்வாறு ஈராக் சமூகத்தை கருவறுக்க ஐஸ் ஐஸ் ஐ உருவாக்கினார்களோ அதேவாறு எங்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட நயவஞ்சகன் தான் இந்த டக்ளஸ்

    ReplyDelete

Powered by Blogger.