Header Ads



SLFP வாக்களிக்காது, பிரதமராக ரணில் நீடிப்பார், முக்கிய பங்குவகித்த முஸ்லிம் அமைச்சர்


-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-

இன்று (4) புதன்கிழமை சற்றுநேரத்திற்கு முன்,   ஜனாதிபதியின் வீட்டில் நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையில் வாக்களிப்பில் கலந்து கொள்வதில்லை என  சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதில் பங்கேற்ற சுதந்திரக் கட்சியின் மூத்த அமைச்சர் பௌசி நம்பிக்கையில்லாப் பிரேணை தோல்வியடையும் வாய்ப்பு இருப்பதால், சுதந்திரக் கட்சி இதில் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து நீடித்து வாதப் பிரதிவாதங்களுக்கு மத்தியில்  ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையின் போது வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை என  சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதன்மூலம் மகிந்த தரப்பு கொண்டுவந்த ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணை தோல்வியடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

1 comment:

  1. Two face party.all of you must driven out from govt.your party only only supporting mahinda group.
    This is the reason for unstable govt

    ReplyDelete

Powered by Blogger.