Header Ads



இலக்கியம் உடலுக்கு சோறு போடாது, ஆனால் இதயத்துக்கு உணவளிக்கும் - MM. மொஹமட்

-எம்.ஜே.எம். தாஜுதீன்-

கம்பஹ மாவட்டத்தில் வாழும் எழுத்து ஆர்வளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள்  அனைவரையும் ஒன்றிணைத்து கம்பஹ மாவட்ட எழுத்து இயக்கம் நேற்று (14.04.20018) கம்மல்துறையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

பலகத்துறை கலை இலக்கிய வட்டம் இதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டது. 

பலகத்துறை தக்கியா வீதியில் உள்ள  திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ.எம். நிலாம் தலைமை வகித்தார். கவிஞர் கி;ண்ணியா அமீரலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வுக்கு விசேட அதிதியாகக் கலந்துகொண்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) அஷ்ஷேக் எம்.எம். மொஹமட் (நளீமி) அவர்கள் உரையாற்றுகையில்,

மங்கி மறைந்துகொண்டிருக்கும் இலக்கிய உணர்வுகள் புடம் போடப்பட வேண்டும். அதற்காக இப்படியான அமைப்புக்கள் நாடு முழுவதிலும் உருவாக்கப்படவேண்டும்.

இலக்கியம் உடலுக்கு சோறு போடாது. ஆனால் இதயத்துக்கு உணவளிக்கும். வேற்றுமையில் ஒற்றுமை காண இலக்கியம் சிறந்த ஊடகமாகும். எனவே இலக்கியம் எப்போதும் ஒற்றுமையை வளரக்கப் பாடுபடவேண்டும். ஒருபோதும் துவேசங்களை வளர்க்கக்கூடாது எனத் தெரிவித்தார். 
கம்பஹ மாவட்ட எழுத்து இயக்கத்தின் ஆலோசகர்களாக  மேலதிக தேர்தல் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) அஷ்ஷேக் எம்.எம். மொஹமட் (நளீமி), கொழும்பு ஸாஹிராக் கல்லூரி தமிழ்ப் பிரிவு முன்னாள் அதிபர் என்.எம்.எம். றெஸீன், சிரேஷ்ட இலக்கியவாதி மு. பசீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.ஏ.எம். நிலாம் இந்த அமைப்பின் தலைவராக ஏகமனதாகத் தெரிவானார். உதவித் தலைவராக ஓய்வு பெற்ற ஆசிரியர் யூ.எம். பகுர்தீன் நியமிக்கப்பட்டார்.

செயலாளராக ஆசிரியரும், கவிஞருமான போருதொட்ட ரிஸ்மி தெரிவானார்.

பொருளாளராக கவிஞர் கம்மல்துறை எம். ரிஸ்வான், உதவிப் பொருளாளராக இளம் ஊடகவியலாளர் அனஸ் அப்பாஸ் ஆகியோர் நியமிக்கப்பட்னர்.

ஊடக இணைப்பாளர்களாக ஊடகவியலாளர் காதிர்கான் மௌலவி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தேவகுவ நிஜாமுதீன் ஆகியோர் தெரிவாகினர். 
இந்த நிகழ்வில் கவிஞர் கி;ண்ணியா அமீரலி, கம்மல்துறை இக்பால், ஹலீமா  ரபீயுதீன், கிச்சிலான் அமதுர்ரஹீம், கவிஞர் நஹ்தாஸ்  ஆகியோர் கவிதைகள் வாசித்தனர்.




No comments

Powered by Blogger.