Header Ads



மஹிந்த அணியில் சிலர், இத்தாலிக்கு பறந்தனர் - சந்தேகம் கிளப்பும் JVP

கூட்டு எதிரணியினர் பலர் இத்தாலி சென்றுள்ளதாகவும் இதன் பின்னணியில் ஏதோ இருப்பதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியினரால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கக்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில், 

பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் பலர் இன்று இத்தாலி சென்றுள்ளனர். 

இதன் பின்னணி என்ன ? இது நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கான ஒரு உத்தியாக இருக்கலாம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  நாட்டிற்கும் மக்களிற்கும் துரோகமிழைத்து விட்டார். மிகப்பெரும் துரோகி சிறிசேனாவே. மக்களின் எதிர்பார்ப்பிற்கு எதிராக செயற்பட்டுள்ளார்.

நம்பிக்கையில்லாப்பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே அதனை ஆதரிப்பது என எமது கட்சி தீர்மானித்துவிட்டது. 

ஜனாதிபதி மீதும் பிரதமர் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதன் காரணமாகவே  தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.