Header Ads



பைசர் முஸ்தபாவுடன், சந்திப்பை JMC - I புறக்கணிப்பு

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக, சிங்கள பேரினவாத சக்திகளால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல்களை நாம் அனைவரும் அறிவோம்.

சர்வதேச ரீதியாக புலம் பெயர்ந்து வாழும் எமது உறவுகள், இந்த இனவாத தாக்குதலை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதையும் நாம் நன்கு அறிவோம்.

இந்த தருணத்தில் நமது முஸ்லிம்களையும், சர்வதேசத்திடம் காட்டிக்கொடுத்து இலங்கை அரசுக்கும் பேரினவாதிகளுக்கும் துணைபோன அமைச்சர் பைசர் முஸ்தபா முழு முஸ்லிம் சமூகத்துக்கும் செய்த துரோகத்தை நாம் யாவரும் நன்கு அறிவோம்.

இன்று இந்த அமைச்சர் பைசர் முஸ்தபா, தனது உத்தியோபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் வருகை தந்து இருக்கிறார்.

இவர் இன்று இலங்கை தூதுவராலயத்தின் ஊடாக பெரிஸில் உள்ள முஸ்லிம் அமைப்புகளையும், சில தனி நபர்களையும் தொடர்பு கொண்டு நாளை பெரிஸ் வாழ் முஸ்லிம்களை சந்திக்க விரும்புவதாக வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிரார்.

அந்த வகையில் பிரான்ஸைத் தலைமையமாக கொண்டு இயங்கிவரும் யாழ் சர்வதேச முஸ்லிம் அமைப்பான (JMC-I ) அதிருப்தியை தெரிவித்து சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என தீர்மானம் எடுத்துள்ளனர்.

(JMC-I )

6 comments:

  1. JMC-1, பைசர் முஸ்தபா ஜெனிவாவில் முஸ்லிம்களை எந்த வகையில் காட்டிக் கொடுத்தார் என்பதை முதலில் தெரிவித்து விட்டு உங்கள் புறக்கணிப்பை அறிவிப்பது தான் ஒரு சிறந்தது என்று நம்புகிறோம். அவர் அரசாங்க தரப்பாக ஜெனிவா சென்றது தவரானால் பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை முஸ்லீம் எம்பி மாரும் ( அரசாங்க தரப்பில் தான் இருக்கிறார்கள். நன்றாக பட்டம் பதவிகளை அனுபவித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் ) முஸ்லிம்களை காட்டிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று அர்த்தப்படும். நாம் அப்படி இல்லை என்றே கருதுகிறோம். உங்களுக்கு (JMC-1) எந்தளவுக்கு முஸ்லீம் சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறோதோ அந்தளவுக்கு பைசர் முஸ்தபாவுக்கும் முஸ்லீம் சமூகத்தின் மீது அக்கறை உண்டு என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். அவர் அரசியலுக்கு பிழைப்பு நடத்த வரவில்லை (தற்போது முஸ்லீம் தலைவர்கள் என்று கூறுபவர்கள் போல்). அரசியலில் அவருக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் வித்தியாசமான அபிப்பிராயமும், அணுகு முறைகளும் இருக்கலாம். பைசர் முஸ்தபா மிகவும் கெளரவமான இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு நல்லது செய்வதட்கு ஆர்வம் உள்ள அரசியல் வாதியாகவே இன்னும் அவரை பார்க்கிறோம். தயவு செய்து அவரை நீங்கள் சந்தித்து, கலந்துரையாடல் மூலம் நீங்களோ அல்லது பைசர் முஸ்தபாவோ திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்பது எமது தாழ்மையான கருத்தாகும். நமது ஒற்றுமையும் சகோரத்துவமுமே முஸ்லீம் சமூகத்துக்கு நன்மை பயக்கும் என்பது எல்லோரும் அறிந்த விடயமே.

    ReplyDelete
  2. நல்ல முடிவு,இப்படியான துரோகளுக்கு இப்படித்தான் சமூகம் சார்ந்த பதில்களை கொடுத்து புறக்கணிக்க வேன்டும்.

    ReplyDelete
  3. Kuruvi, let us know what good he has done to Muslims in this country? We know he too has been enjoying his privileges as a Minister like others.

    ReplyDelete
  4. Bro. Ghouse, Please read my post carefully once again. I didn't say anything he done good or bad. My comment have small message for all Muslims. Thanks for reading brother.

    ReplyDelete
  5. இலங்கை முஸ்லிம்கள் 1. தமது சிதறிய புவியியல் இருப்பின் துண்டிப்பின் பின்னடைவுகளை தொடற்ச்சியான முஸ்லிம் மற்றும் ஏனைய இனங்களுடனான பல்முகப்பட்ட அமைப்பு அமைப்புசாரா ஐக்கியமுன்னணி நடவடிக்கைகள் மூலமும்
    2. தகவல் தொடர்பு புரட்சியின் வரப்பிரசாதங்களை
    உயர்ந்த பட்ச்ச இணைப்புக்கு பயன்படுத்துவதம் மூலமும் மட்டுமே வெற்றிபெற முடியும். அதனால் புவியியல் பிழவை அரசியல் ரீதியாகவும் மேலும் மேலும் அகட்டும்
    தூய்மைவாத அணுகுமுறைகளைக் கைவிட வேண்டும். கூடியவரைக்கும் எல்லோரையும் சந்தித்து ஆக்கபூர்வமாகவும் துணிச்சலுடனும் விவாதித்து பேசி அரசியலை முன்நகர்த்திச் செல்கிற வல்லமையை வளர்ப்பது காலத்தின் அவசியம். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

    ReplyDelete

Powered by Blogger.