April 21, 2018

அரசு எம்மை ஏமாற்றி விட்டது - பேராசிரியர் நுஹ்மான்

(JM.Hafeez)

தமிழ் தேசிய வாதம் உருவாக பௌத்த தேசியவாதம் ஒரு காரணியான இருந்துள்ளதுடன்  தென்பகுதியில் சமஷ்டி என்பது நாட்டைப்பிரித்தல் என்ற சொல் மயக்க கண்ணோட்டத்தில் நோக்கப்படுகிறது என பேராசிரியர் எம்.ஏ. நுஹ்மான் தெரிவித்தார்.(21.4.2108)

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் த. ராமகிருஷ்ணன் எழுதிய 'ஓர் இனப்பிரச்சினையும் ஒப்பந்தமும்' என்ற நூலின் அறிமுக விழா கண்டி டெவோன் ரெஸ்ட்  ல் கடந்த சனிக்கிழமை இடம் பெற்றது. கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஆதரவில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்துறை ஓய்வு நிலைப் பேராசிரியர் கலாநிதி எம்.ஏ. நுஹ்மான் பிரதம அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது-

1930ல் இருந்து கோல்புறூக் கெமரன் பிரபு, அதன் பின் சோல்பரி பிரபு என வந்து இன்று வரை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு பல்வேறு மாற்றுவழிகள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் அதில் எதிலுமே வழங்கப்படாத மாகாண சபை முறைமை என்ற அதிகாரப் பரவலாக்கம் ஜே.ஆர்.ஜயவர்தனா - ரஜீவ்காந்தி  ஒப்பந்த்தத்தின் விளைவாக வந்த மாகாண சபைகள் முறையில் உள்ளதாக நாம் அறிய முடிகிறது. 

ஆனால் இத்தீர்வை முற்று முழுதாக அமுல் படுத்துவதில் பல்வேறு தடைகளை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் காண முடிந்தது. சந்திரிகா அம்மையார் முன்வைத்த திட்டம் சுட்டெறிக்கப்பட்டது. இந்திய - இலங்கை ஒப்பந்த்ததிற்கு ஆர்.பிரேமதாச கடும் எதிர்ப்பு வெளியிட்டார். ஜே.வி.பி.தொடர்ந்து எதிர்த்தது. எனவே இரு தரப்பு ஒப்புதலை காண முடியாதுள்ளது. கணவன் மனைவியின்  ஒப்புதல் இன்றி மேற்கொண்ட ஒரு பலாத்கார திருமணமாகவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நோக்க வேண்டியுள்ளது. 

ஏனெனில் அதிகாரப் பகிர்வு என்று வரும் போது பேரின பௌத்தவாதம் அதற்கு தடையாக உள்ளது. தமிழ் அமைப்புக்கள் தமக்கு சமஷ்டி முறையிலான தீர்வையே வேண்டி நிற்க, தென்பகுதியில் சமஷ்டி என்பது நாட்டைப்பிரித்தல் என்ற கண்ணோட்டத்தில் நோக்கப்படுகிறது. இங்கு சொல் மயக்கத்தில் மாயாஜாலம் காட்டப்படுகிறது. கடந்த 30 வருடங்களாக மாகாண சபை முறை அமுலில் உள்ளது. மாகாண அரசு என்பது சமஷ்டி அரசாகும். மாகாண சமஷ்டி அரசே மாகாண சபையாக உள்ளது.  சர்வதேச ரீதியில் பிளவு படாத அனைத்து ராஜ்யங்களும் சமஷ்டி மூலமே இணைந்துள்ளன. நாம் கடந்த 30 ஆண்டுகளாக எமது நாட்டை சமஷ்டி முறையில் ஆண்டு கொண்டு சமஷ்டி தர முடியாது என்று ஒரு தரப்பு கூறும் போது, சமஷ்டியே வேண்டும் என்று  மற்றொறு குழு கோசம் எழுப்புகிறது. இது ஒரு  வேடிக்கையாக உள்ளன. 

இதன் காரணமாக தமக்கான ஒரு தீர்வை பெறும் வகையில் தமிழ் சமூகம் போராட்டங்களை நடத்தின, அது ஆயுதப் போராட்டங்களாகவும் மாறின. முதலாவது ஈழப்போர் இரண்டாவது ஈழப்போர் என்றெல்லாம் நாம் பெயர் வைத்தாலும் அவ்வப் போது யுத்தம் மூலம் தீர்வு எய்தப்பட உள்ள நேரங்களில் இந்தியா தலையிட்டு பிரச்சினைகளை தற்காலிகமாக நிறுத்திய சூழ் நிலகளும் உண்டு. அதாவது 2009 ல் ஏற்பட்ட நிலைமை அதற்கு முன்பும் ஏற்பட வாய்ப்பக்கள் இருந்தன. யுத்த முடிவின் பின் ஏற்பட்ட சாதகமான நிலையையும் நாம் பயன் படத்தத் தவறிவிட்டோம். அல்லது அரசுகள் அதனை தர மறுத்து விட்டன. எனவே சாதாரணமாக பௌத்த வாதத்தின் தோற்றமே தமிழ் தேசிய வாதம் தோற்றம் பெறக் காரணமாக இருந்திருக்கலாம்.

1948 முதல் நாட்டின் இனப் பிரச்சினைக்கு தீர்வை வழங்க்க கூடிய பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவை அனைத்தையும் நாம் தவற விட்டவர்களாகவே உள்ளோம். அவ்வாறான சந்தர்பங்களில் மிக முக்கிய சந்தர்ப்பம்தான் கடந்த 2015ம் அண்டு இடம் பெற்ற ஆட்சி மாற்றமாகும். நல்லாட்சி என்ற வகையில் சகல இனக்குழுக்களும் அதிகாரத்தை வழங்கி ஒரு தீர்வைப் பெற முயற்சித்தன. அதிலும் எமது அரசயந்திரம் எம்மை ஏமாற்றி விட்டது. இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றப் படுவது மட்டுமல்லாது மீண்டும் எமக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாழும் நிலையும் மாறி மாறி ஏற்பட்டு வருகிறது என்றார்.

 இவ்வைபவத்தில் உரையாற்றி பேராதனைப் பல்கலைக்கழக அரசறியிவல் துறை விரிவுரையாளர் கலாநிதி ஆர் ரமேஷ் தெரிவித்ததாவது-

மாகாண சபைகள் இலங்கை இனப் பிரச்சினைக்கு பாரியதொரு பங்களிப்பை செய்யவில்லை என்றுதான் கூறவேண்டும். ஏனெனில் மாகாண சபைக்கு ஒதுக்கப்பட்டு வரும் நிதியில் 80 சதவீதம் ஊழியர் சம்பளம் போக்குவரத்து போன்ற நிர்வாகச் செலவுகளுக்கே செலவிடப்பட்டு வருகின்றன. மிகுதி 20 வீதம் மட்டுமே அபிவிருத்திக்குப் பயன் படுத்தப்பட்டு வருகிறது. அதே நேரம் மாகாண சபைகளுக்கான சட்டவரைபுகள் நடைமுறையில் இல்லை. அதே நேரம் மாகாண சபை முறை வெற்றி அளித்தால் மத்திய அரசுக்கான கௌரவம் குறைந்து விடும் என்ற ஒருவகை சுய கௌரவப் போக்கு காரணமாக மத்திய அரசு மாகாண சபையை உயிர்துடிப்புள்ள ஒன்றாக மாற்ற முயற்சிப்பதில்லை.உதாசீணப் போக்குடன் காணப்படுகிறது. இப்படியாக காரணிகளால் மாகாண சபை ஒரு வெள்ளையானையாக சித்தரிக்கப்படுகிறது. 

இதனை விட ஆளுநர், மாகாண சபை, அமைச்சர்கள் என்ற இழுபறி நிலையும் மாகாண சபை முறையில் வெற்றிக்கு தடையாக உள்ளது என்றார். 

சமூக அபிவிருத்தித்தி நிறுவகத்தின் நிறைவேற்று அதிகாரி பெ.முத்துலிங்கம் தெரிவித்தாவது-

நாட்டின் இனப் பிரச்சினை பற்றி இன்னும் பேசப்பட வேண்டும். அது முற்றுப் பெறவில்லை. அதன் தொடர்ச்சியே 13 ம் திருத்தமும் அதற்கு மேலாக ஏதும் வழங்குதல் போன்ற அனைத்து செயற்பாடுகளும் இதனையே அடிப்படையாகக் கொண்டு நடந்தேறுவதாகக் குறிப்பிட்டார்.  

நூலாசிரியர் ராமகிருஷணன் தமதுரையில் தனது அனுபவத்தையும், ஏனைய சில தகவல்களையும்அ வைத்து தொகுக்கப்பட்ட தனது கருத்தாக இப்புத்தகம் உள்ளதாகக் குறிப்பிட்டார். 


1 கருத்துரைகள்:

Very good sir, we need more intellectual personalities like you to bridge these two communities together.
Thanking you on behalf of all tamil community

Post a Comment