Header Ads



"அறிஞர் சித்தி லெப்பை, அடையாளம் இல்லாமல்...."


"வாழுகின்ற மக்களுக்கு, வாழ்ந்த வரலாறுகளே பாதுகாப்பு"

ஒரு சமூகமோ, நாடோ, அல்லது உலகமோ, தனது வரலாற்றையும், புராதனங்களையும்  பாதுகாப்பதன் மூலமே, தமது எதிர்காலத்தை வளப்படுத்திக்  கொள்ள முடியும்  என்பதற்கு இப்பதிவு சிறந்த உதாரணமாகும். 

KANDY - PERADENIYA Road ல் இருந்து  Hattambe  குணரட்ண பன்சலவுக்கு அருகில் கட்டுகஸ்தோட்டைக்கு செல்லும் இயற்கை அழகோடு உள்ள  பாதையில் 1KM தூரம் சென்றதும் காட்சி அளிக்கும் ரம்மியமான பூந்தோட்ட கல்லறை  உலக வரலாற்றுடன் தொடர்பு பட்டதாகும், 

SECOND WORLD WAR (1939-1945) வரை இடம்பெற்ற போது , அச்சு நாடுகளான, ஜேர்மன், இத்தாலி கூட்டணி,  மற்றும் நேச நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் கூட்டணி என்பன போரில் ஈடுபட்டிருந்தன, இப்போரில் 10 கோடி வீரர்கள் பங்கு பற்றி இருந்தனர். 

இலங்கையில் COLOMBO, TRINCO, GALLE, போன்ற இடங்களில் உலகின் பல நாடுகளிலும் இருந்தும், படைகளும், வல்லுனர்களும், உதவியாளர்களும் குவிக்கப்பட்டனர்.

அவ்வாறு பணியாற்றிய காலங்களில் யுத்தத்தாலும், ஏனைய  காரணங்களாலும் உயிர் நீத்த  203 வீர்ர்களின் கல்லறைகள் இங்கு காணப்படுகின்றன. தமது கட்டளைக்கு ஏற்ப பணியாற்றி சேவை புரிந்து உயிர் நீத்த வீரர்களைக் கௌரவப்படுத்தும் நோக்கிலும் ,எதிர்கால தலைமுறையினர் இது பற்றிய வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், இந்த இடம் "பொதுநலவாய  யுத்த கல்லறைகள் ஆணைக் குழுவினால் நிர்மாணிக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

சுற்றுலா நோக்கிலும், இதனைப் பார்வையிடவும், தம் மூதாதையினரின் சமாதிகளைத் தரிசிக்கவும் அன்றாடம், பல வெளிநாட்டவர்கள் இங்கு வருகை தருகின்றனர். இதில் பிரித்தானியர், கனடியர், இந்தியர், இலங்கை, கிழக்கு ஆபிரிக்கர், பிரான்ஸ், இத்தாலி , போன்ற பல நாட்டவர்களின் அடக்கத்தலங்கள் பராமரிக்கப்படுகின்றன. இது போன்ற இடங்கள் கொழும்பு ஜாவத்தை பள்ளிவாசலிலும், திருகோணமலையிலும் உண்டு. 

இதில் மொத்தம் 12 முஸ்லிம் அடக்கத்தலங்கள் உள்ளன. இவர்கள் இவ் 'இலங்கையைப்' பாதுகாக்க தம் உயிர் நீத்த எம் சர்வதேச சகோதரர்கள் .  இதில் ஆபிரிக்கர்கள் 5 பேரினதும், இந்திய முஸ்லிம்கள் 7 பேரினதும் கபுறுகள் பெயர், தொழில், வயது போன்ற சகல் விபரங்களுடனும்,  பராமரிக்கப்படுகின்றன. உலக மரபுரிமையான இக்கபுறுகளையும் பார்வையிட பல நாட்டில் இருந்தும் இவர்களது சந்த்தியினர் வந்து மரியாதை செலுத்தி விட்டுச் செல்கின்றனர். 

தாம் வாழும் காலங்களில் உலக சேவை புரிந்தவர்களை, அவர்களின் வரலாறுகளை ( கடந்த 80 வருடம்) பாதுகாக்க பொது நலவாய அமையம் மேற்கொண்டுள்ள கரிசனையானது, உலகம் ,மரபுகளையும், சமுகப் பணி புரிந்தவர்களையும் எவ்வாறு கண்ணியப்படுத்த வேண்டும் என்பதற்கான சிறந்த உதாரணமாகும், 

இது ஏறத்தாள 80 வருட வரலாறு மட்டுமல்ல , உலக யுத்தத்திலும் ஈடுபட்டவர்களாகும்,   தனது நாட்டில் இல்லாத ஒரு இடத்தினை இவ்வாறு அக்கறையுடன் பாதுகாப்பது பாராட்டுக்குரியது..

ஆனால் நமது ஊர்களிலும், கிராமங்களிலும் உலகின் பலவேறு பகுதிகளில் இருந்து வந்து ,தமது சொந்த சேவையின் மூலம், பல்லாயிரக்கணக்கான மக்களை  நேர்வழிப்படுத்தி, காடுகளாக கிடந்த பிரதேசங்களை பொற் களனிகளாகவும், பள்ளிவாசல்களாகவும் மாற்றித் தந்த சமயப்பெரியார்களையும்,

சமூகக்டமை புரிந்து , கல்வி, பொருளாதாரம் போன்றவற்றில் புரட்சியை உண்டுபண்ணியவர்களையும்   முஸ்லிம் சமூகம் எந்தளவு? கண்ணியப்படுத்துகின்றது அவர்களது இடங்களை எந்தளவு பாதுகாக்கின்றனர்  என எண்ணும்போது கவலையாக உள்ளது. 

இதே கண்டியில்.  (குறித்த கல்லறையில் இருந்து கிட்டத்தட்ட 5KM).  

தூரத்தில் பிறந்து ,வளர்ந்து முழு இலங்கைக்கும்  சகல துறைகளிலும், பணி புரிந்த 180 வருட வரலாற்றைக் கொண்ட , அறிஞர் சித்தி லெப்பையின் அடக்கஸ்தலமும், அவர் வாழ்ந்த வீடும் எதுவித பாராமரிப்புமற்று,  அடையாளமில்லாமல் செய்யப்பட்டிருப்பதுவும் கவலையான விடயங்களே!  

ஒரு சமூகம் வாழ வேண்டுமாயின் அச்சமூகம் அதன் முன்னோரைக் கண்ணியப் படுத்த வேண்டும், ஒரு மையவாடியை எவ்வாறு பராமரிக்க வேண்டும் ,   என்பதையும்,  நாம் வெளிநாட்டவர்களிடம்  இருந்துதான் கற்க வேண்டி உள்ளது...  ஆனாலும் "பெரியோரைக் கண்ணியப் படுத்தாதவன்...... என்னைச் சார்ந்தவன் அல்ல "....என்பதும் நபி அவர்களின் கூற்றே' இனியாவது சிந்திப்போமாக..... எமது வரலாறுகளையும், வாழ்விடங்களையும் பாதுகாப்போமாக..

.முபிஸால் அபூபக்கர்
முதுநிலை விரிவுரையாளர்
பேராதனைப்பல்கலைக்கழகம்

No comments

Powered by Blogger.