Header Ads



இந்தியாவுக்கு ஓடுகிறார் விக்கி - ஆன்மீகப் பயணமாம்

முல்லைத்தீவில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்கும், அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கும், வடக்கு மாகாணசபையில் முடிவு செய்யப்பட்டிருந்த போதும், இன்றைய போராட்டங்களில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை.

20 நாட்கள் ஆன்மீகப் பயணம் ஒன்றை மேற்கொண்டு, முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

இதனால் அவர் இன்று முல்லைத்தீவில் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிரான – போராட்டங்கள் மற்றும் ஆய்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.

அடுத்த கட்டம் குறித்து ஆலோசனை?

இன்று இந்தியா செல்லும் முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் போது, அங்குள்ள தலைவர்கள் சிலரைச் சந்தித்துப் பேசவிருப்பதாகவும், புதுடெல்லியுடன் பேசும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் இன்னும், ஐந்து மாதங்களில் முடிவடையவுள்ள நிலையில், முதலமைச்சரின் அடுத்த கட்ட நகர்வுகளைத் தீர்மானிக்கும் பயணமாக இது இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

பதில் முதல்வர் சர்வேஸ்வரன்

முதலமைச்சர் வெளிநாடு செல்லும் நி்லையில், வடக்கு மாகாணசபையின் பதில் முதலமைச்சராக கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் நாளை காலை பதவியேற்கவுள்ளார்.

1 comment:

  1. சிங்கள குடியேற்றங்களை தவிர மிக முக்கியமாக நிறுத்தப்பட வேண்டியது முஸ்லிம் குடியேற்றங்கள்

    ReplyDelete

Powered by Blogger.