Header Ads



சம்பந்தனின் இரட்டை வேடமே, அரசாங்கத்தின் சிதைவுக்கு பிரதான காரணம் - கபே

எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் இரட்டை வேடமே தேசி அரசாங்கத்தில் தற்போது சிதைவினை ஏற்படுத்தியுள்ளது என குற்றம்சாட்டிய கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி  தென்னகோன் தற்போதைய அரசியல் பிரமுகர்கள் தேவையானபோது அரசாங்கமாகவும் தேவைகள் முடிவடைந்தவுடன் அரசாங்கத்தின் எதிர்த்தரப்பாகவும் செயற்பட்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டார். 

நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய நிலை மற்றும் கூட்டு எதிர்கட்சியினரின் நிலை தொடர்பில் விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், 

தேசிய அரசாங்கம் ஆட்சியை நிலைநிறுத்தி தற்போது 4 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சி அமைத்த காலத்திலிருந்து கடும் விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. 

இந்த விமர்சனங்களை தாண்டி நல்லாட்சி அரசாங்கத்தின்  தற்போது ஆட்சி சிதைவடைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஒருபோதும் எதிர்க்கட்சி பதவியினை வகித்ததில்லை. தனக்கு தேவையான சந்தர்ப்பங்களில் அரசாங்கத்துடனும் தேவைகள் நிறைவேறியதன் பின்னர் எதிர்க்கட்சியாகவும் செயற்ப்பட்டு வருகின்றார். இது எதிர்க்கட்சி தலைமை பதவிக்கு பொருத்தமான பண்பல்ல.

இந்த அரசாங்கத்தின் ஆட்சித்தலைமைத்துவத்தின் பிரதான கட்சி,  ஐக்கிய தேசியக் கட்சியாக கணப்படுவதோடு பெரும்பான்மை விருப்பை வென்ற கட்சியாகவும் காணப்படுகின்றது. இதேவேளை ஸ்ரீ லங்கா சதந்திர கட்சிக்கும் ஆட்சி பொறுப்புகள் சமமாக வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் ஆதரவு அளித்திருந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்ததன் பின்னர் அமைச்சு பொறுப்புக்களை துறப்பதாக அறிவித்தனர். அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்துக்கு எதிராக  சூழ்ச்சிகளை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறானவொரு நிலை ஊருவாவதற்கு அரசியல் முக்கியஸ்தர்களின் இரட்டை வேடங்களே காரணமாகும். இதேவேளை தனது பிழைகளை கருத்தில் கொள்ளாமல் நாட்டின் தலைவர் ஜனாதிபதியை குற்றம்சாட்டும் நிலைகளும் உருவாகியுள்ளன. அரசியல்வாதிகள் இரு பக்கமும் செயற்பட நினைக்கும் போது பொறுப்புள்ள அரசங்கத்தினை உருவாக்குவது சிரமமாவதோடு  அரசாங்கத்தின் உறுதித்தன்மையும் சிதைவடையும். 

இரா. சம்பந்தன் தனது தனிப்பட்ட தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றாரே தவிர வட மாகாண மக்களின் பிரச்சினைகளுக்காகவோ அல்லது மக்களின் ஏனைய பிரச்சினைகளுக்காகவோ அரசாங்கத்திடம் கைகோர்க்க வில்லை எனறார். 

3 comments:

  1. சரியான கண்டு பிடிப்பு இப்போதுதான் வருகிறது.உண்மைதான் எதிக்கட்சி தலைவர் ஆளுங்கட்சிக்கும் தனது ஆதரவை கொடுப்பதும் சில விடயங்களில் எதிர்த்து பேச வேண்டிய இட்சத்தில் மௌனமாக இருப்பதும் இவரின் வேலை நடக்கிறது.வடகிழக்கு பிரச்சினைக்கு மட்டும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார்.தென் மாகாணத்தில் எந்த விடயத்திலும் எதிர்க்கட்சி தலைவர் வாய் திறப்பதில்லை

    ReplyDelete
  2. ஐந்தும்-பத்துக்கும் அலைகிறவர்கள் எல்லாம் இப்போ சம்பந்தனில் பிழைகாண வந்துவிட்டார்கள்.
    காலம் அப்படி.

    ReplyDelete
  3. சம்பந்தன் ஐயா எதில் பிழை விட்டார் கபே நடு நிலை நிறுவனமா ? இனவாத நிறுவனமா?

    ReplyDelete

Powered by Blogger.