Header Ads



கட்டுரையாளர்களும், சமூகப்பற்றும் - ஒரு வினா

-Zainulabtheen Siththy Humaiza-

இலங்கையிலும் சரி, சர்வதேச அளவிலும் சரி தற்காலத்தில் நடைபெற்றுவரும் கசப்பான சம்பவங்கள், வன்முறைகள், ஈனத்தனமான செயல்கள், மனிதன் மிருக நிலையைவிடக் கீழிறங்கி நிகழ்த்தும் சம்பவங்கள் மனதில் பல அவஸ்தைகளையும், அழுத்தங்களையும் உண்டுபண்ணும் தருணங்களில் என்ன செய்யலாம், எவ்வாறு சீர்திருத்த நிலையை ஏற்படுத்தலாம், எவ்வாறு இந்த கொடூர மனநிலை, செயல்களிலிருந்து மனிதர்களைப்பிரித்தெடுப்பது, அதற்கான செயற்றிட்டம்தான் என்னவென்பதை ஒற்றையாக நின்று சிந்திக்கையில் கடைசி வாய்ப்பாகத்தென்படுவது பேனாமுனை மட்டுமே.

ஆக்ரோசமான, இழிவான செயல்களை வெறுக்கும் மனோநிலை ஏற்படுத்தும் சீர்திருத்த எண்ண அலைகளை வெளிப்படுத்த அல்லது குறித்த செயற்பாடுகள் மீதான எதிர்ப்பை, வெறுப்பைக்காட்ட பேனாமுனையைப்பற்றியெடுத்து கட்டுரையாகக்கொட்டி நிமிர்கையில் ஏதோ என்னால் முடிந்தது என்கின்ற சிறிதொரு நிம்மதி பிறக்கின்றது.

இவ்வாறுதான் அண்மையில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட கலவர நிலைமை குறித்து கட்டுரை எமுதிவிட்டு நிமிர்கையில்,  என்னைத் துளைத்தன பல்லாயிரம் கேள்விகள்.

உலகளாவியரீதியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வெறுக்கத்தக்க செயல்கள் ஒருபுறமிருக்க இவைபற்றிப் பிரஸ்தாபிக்கும் கட்டுரையாளர்களது சமூக உணர்வு, அந்த உணர்வுகளுடனான முன்னோக்கு செயல்கள் குறித்து பல வினாக்கள்...

வாசிப்பின்மீதான ஆர்வம், வாசிப்புப்பழக்கம் தற்காலத்தில் அரிதாகிவருவதாக ஆய்வுகள் வெளிப்படுத்ததுகின்ற அதேவேளை எழுத்தாளர்கள், கட்டுரையாக்கங்கள் பெருகியே வருகின்றன. இது சமூக வலைத்தளங்களின் சாதனையாகக்கூட அமையலாம். இது ஆரோக்கியமான செயற்பாடே ஆனால் இங்கு கேள்வி என்னவென்றால் படைப்பாளர்கள் மற்றும் அவர்களின் படைப்பாளர்களின் சமூக முன்னோக்கு செயல்கள்தான் என்னவென்பதே. அவர்களது நோக்கங்கள் பலதரப்பட்டவையாக இருப்பதைக்காணலம்.

புல்கலைக்கழக மாணவர்களை நோக்குகையில் அவர்கள் நூலகங்களைப் பயன்படுத்துவது மிக அரிது. ஆனால் அவர்களின் மிகப்பெரிய படைப்பாக ஆய்வுகள் வெளிவருகின்றன. இவர்களின் நோக்கம் வெறும் பட்டச்சாண்றிதழ் என்பதாகவே நான் காண்கின்றேன். அதேவேளை விரிவுரையாளர்களைப் பார்ப்போமேயானால் அவர்களும்கூட பெரும்பாலான ஆய்வுகளை ஆய்வரங்குகள், மற்றும் சஞ்சிகைகளில் (துழரசயெட) வெளியிடுகின்றனர். இவற்றின் நோக்கங்கள்கூட அவர்களின் முன்னேற்ற (Pசழபசநளள)நிலையை வெளிப்படுத்துவதுதான என்ற வினா எழுகின்றது. சமூக வலைத்தளங்களில் எழுதுவோhர் 'ஊருக்குத்தான் உபதேசம், உனக்கில்லை' என்பதுபோல உணரவைக்கின்றது.

இவை என்னுடைய மிகக்கவலையிலான நோக்காகும். யாரையும் குறை கூறுவதற்கான நோக்கமல்லாமல் மாறாக மாற்றுவழியை நாம் சிந்திக்கவேண்டியிருக்கின்றது. அடிப்படையான அம்சங்களான மனோநிலை, நடத்தைகள், எண்ணங்களில் மாற்றங்களைக் கொண்டுவரவேண்டிய அவசியமிருக்கின்றது. பேனாமுனை மற்றும் சமூக வலைத்தளங்கள் எதையும் சாதிக்கவில்லை எனக்கூறவில்லை. அவை மிக சக்திவாய்ந்தவை, ஆழ்ந்த பாய்ச்சல்கொண்டவை என்பது மிக திண்ணம். ஆனால் சிந்திக்கவேண்டியவர்கள் கட்டுரையாளர்களும் வாசகர்களும். சமூக உணர்வின் பாய்ச்சலில் ஆக்கங்கள் பிறக்கின்ற அதேவேளை உள்ளார்ந்தரீதியான மாற்றங்களை நமக்குள்ளே நாம் ஏற்படுத்தவேண்டிய அவசியமிருக்கின்றது. ஒன்றைப்பற்றி நாம் எழுதுகிறோம், வாசிப்பவரகள் அதற்கு ஒரு கருத்தை வெளியிட்டுவிட்டுபோகின்றார்கள் என்பதோடு அல்லாமல் எம் சிந்தனையில், நடத்தையில், எமது குடும்பத்தவர்களில், அவர்களுக்கு புகட்டும் அறிவில் மாற்றங்களைக்கொண்டுவரவேண்டும்.

உதாரணமாக பார்க்கப்போனால் ஒரு இடத்தில் ஒரு வன்முறை, அனீதி இடம்பெற்றுள்ளதென்றால் அதனை எதிர்த்து நாம் அதிகமாகவே எழுதுகிறோம், வாசகர்கள் பகிருகிறார்கள் (ளூயசநஇ டுமைந) ஆனால் சில நாட்களில் அதே தவறு நம் இடத்தில் நிகழுமாயின் எழுத்துக்களில் என்ன பிரயோசனம். புhலியல் துஷ்பிரயோக சம்பவம் பிரபல்யமாகும்போது அதனையிட்டு எதிர்கருத்துக்களை வெளியிடுபவன் பஸ்ஸில் செல்லும் போது ஒரு பெண்ணை சீண்டிப்பார்க்க நினைப்பானாயின் அவனது கூற்றின் அர்த்தமதான்; என்ன???

அனைவரும் சிந்தித்து நமக்குள் நம் மனப்பான்மையில் மாற்றங்களைக் கொண்டுவருவோம். அதுவே சீர்திருத்தத்தின் தொடக்கம்


No comments

Powered by Blogger.