Header Ads



டுபாயில் பணிபுரிய, நற்சான்றிதழ் அவசியமில்லை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, இலங்கை பிரஜைகள் நற்சான்றிதழை சமர்ப்பிக்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ஐக்கிய அரபு இராச்சியத்தின் வௌிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு தொடர்பான அமைச்சினூடாக டுபாயிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் விசாவை பெற்றுக் கொள்ளும் போது, நற்சான்றிதழை சமரப்பிக்கும் நடைமுறை, மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பிரஜைகள் உள்ளிட்ட வௌிநாட்டு பிரஜைகள், தொழில் நிமித்தம் விசாவிற்கு விண்ணப்பிக்கும் போது, நற்சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அந்நாட்டின் அமைச்சினால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

எனினும் இந்த தீர்மானத்தினால் அந்நாட்டிலுள்ள பல தூதரகங்கள் பல்வேறு சிக்கலை எதிர்நோக்கியதாக அந்நாட்டின் ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது குறித்து இலங்கை பிரஜைகளுக்கு தௌிவுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கொன்சியூலர் நாயகம் சரித் யத்தல்கொட தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.