Header Ads



மனோ கணேசன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்கள் - ஜனநாயக இளைஞர் இணையம் போர்க்கொடி

மனோ கணேசன் தலைமையிலான ஒருமித்த முற்போக்கு கூட்டணியின்  இளைஞர் அமைப்பான ஜனநாயக இளைஞர் இணையம் கட்சிக்கும் தமக்கும் இடையிலான கொள்கை முரண்பாடு காரணமாகவும்  மக்களுக்கான எவ்வித சேவையையும் பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்ற ஏமாற்றத்துடனும் ஒருமித்த முற்போக்கு கூட்டணியுடனான சகல அரசியல் செயற்பாடுகளிலிருந்தும் இன்றுடன் விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது.

ஜனநாயக இளைஞர் இணையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், 

"அரசியல் கைதிகள் தொடர்பாகவும், காணாமல் போனவர்கள் சம்பந்தமாகவும் குரல் கொடுப்பதன் மூலம் தன்னை அரசியல் தலைமையாக நிலை நிறுத்திக்கொண்ட மனோ கணேசன் 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் தோல்வியை தொடர்ந்து எவ்வித செயற்பாடுகளும் இன்றி இருந்த காலகட்டத்தில் அவரை பலப்படுத்தும் நோக்கில் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி சுயமாக கட்சியோடு இணைந்துக் கொண்டவர்கள் நாம்,

அன்றுமுதல் இன்றுவரை எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி "தொண்டர்சேவை" அடிப்படையிலேயே எங்களுடைய சொந்த பணத்தை பயன்படுத்தி இவருடனான அரசியல் பயணத்தை தொடர்ந்து வந்துள்ளோம்.

கட்சியின் செயற்பாடுகளில் எம்மை இணைத்துக்கொண்டு பயணிக்க தொடங்கிய சில நாட்களில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தலைமைக்கு எதிரான பல காரணங்களை முன்வைத்து வெளியேறத்தொடங்கினர்.

அவர்கள் முன்வைத்த காரணங்கள் சில நியாயப்பூர்வமானதாக இருந்தபோதும் மனோவை பலவீனப்படுத்த கூடாதென்றும், காலவோட்டத்தில்  தவறுகளை திருத்திக்கொண்டு ஆரோக்கியமான பயணத்தினை மேற்கொள்ளமுடியும் என்ற எமது தோழர்கள் கொண்டிருந்த நம்பிக்கையினாலேயே இவருடனான எமது பயணத்தினை தொடர்ந்து வந்தோம்.

எவ்வித ஜனநாயக பண்பும் பேணப்படாது தன்னிச்சையான செயற்பாடுகளால் கட்சிக்குள் முரண்பாடுகளும், விரிசல்களும் ஏற்பட்ட சகல நேரங்களிலும் தலைமையிடம் நியாயத்தன்மையை வலியுறுத்திவந்தோம், கட்சியின் உண்மையான தொண்டர்கள் ஓரங்கட்டப்பட்டு கட்சியோடு எவ்வித சம்பந்தமும் இல்லாதவர்களின் ஆலோசனையோடு எடுத்த பாதகமான முடிவுகளை எதிர்த்து வந்துள்ளோம்.

எனினும் சிறிதளவில் இருந்து வந்த இவரது அசாதாரண செயற்பாடுகள் அமைச்சு பொறுப்பை பெற்றுக்கொண்டதின் பின்னர் கட்சி உறுப்பினர்களை உதாசீனப்படுத்தலும் எந்த கோரிக்கைக்கும், ஆலோசனைக்கும் செவிசாய்க்காதத் தன்மையும் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது.

உதாரணமாக அமைச்சுப்பொறுப்பை ஏற்றபின் கட்சியின் மத்தியக்குழு கூட்டத்தை கூட்டிய இவர் " இது எனது அமைச்சு எனக்கு தேவையானவாறே நடாத்தி செல்வேன் , நியமனங்களும் என்விருப்பபடியே நடக்கும் இதில் யாரும் தலையிடக்கூடாது என தெரிவித்தார். " ஜனநாயக விழுமியங்கள் சம்பந்தமாக பிறருக்கு பாடமெடுக்க முட்படும் இவர் எவ்வித ஜனநாயக பண்பற்ற சர்வாதிகார போக்கிலேயே கட்சியினை நாடாத்திச்செல்கின்றார்.

கட்சியின் உள்ளக முரண்பாடுகளை தவிர்த்து அனைவரையும் இணைத்துக்கொண்டு வலுவான பயணத்தை மேற்கொள்ள நாம் கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைந்தன நாளுக்கு நாள் எமக்கிடையான விரிசல் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது செயட்பாட்டாளர்களின் குரலுக்கு செவிசாய்ப்பதைவிடவும் ஊடக அறிக்கை தயார் செய்வதும் முகநூலில் பதிவுகள் இடுவதையுமே தனது அரசியல் பணியாக கருதுகின்றார்.

அண்மையில் நடை பெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கு 113 வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிட்டும் ஆயிரக்கணக்கான செயட்பாட்டாளர்களின் உதவியுடனும் ஊடக உதவியுடனும் ஒருமித்த முற்போக்கு கூட்டணி சுமார் 27,000 வாக்குகளை பெற்றுக்கொண்டது.

இணையமும் பல தொகுதிகளில் போட்டியிட்டு சுமார் 7,000 வாக்குகளை பெற்றுக்கொடுத்தது ஒரு கட்சி தலைவராக இந்த வெற்றிக்கு வழிவகுத்தவர்களை பாராட்டுவதைவிடுத்து ,பாமன்கடை வட்டாரத்தை வெற்றிக்கொண்ட திரு . பாஸ்கரா உட்பட யாரும் 100 வாக்குகளைக்கூட பெற தகுதியற்றவர்கள் என்றும் 27,000 வாக்குகளும் தனது சொந்த வாக்கு என்றும் கோசமிட்டு சமூக ஊடகங்களில் செய்தி வெளியிடுகின்றார்

இது பாராளுமன்ற , மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட கட்சியின் ஒட்டு மொத்த செயட்பாட்டாளர்களையும் சிறுமைப்படுத்தும், பலவீனப்படுத்தும் அவமானகரமான செயட்பாடாகும் இதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

முரண்பாடுகளுக்கான முக்கிய காரணங்கள்

• கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக கொழும்பு மக்களுக்கு எந்தவித சேவைகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை இவர்கள்       சார்பாக  பாராளுமன்றில் குரல் எழுப்புவதுவுமில்லை

• பின்தங்கிய நிலையிலுள்ள எமது மக்களுக்கு எவ்வித பிரயோசனமற்ற அமைச்சு வழங்கப்பட்டபோது அதை மறுக்கும்படி நாம்     கோரியதோடு அபிவிருத்தி செயட்பாடுகளை முன்னெடுக்க கூடிய விடயங்களை கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும வலியுறுத்தினோம் மனோ கணேசன் அதனை மறுத்ததோடு மக்கள் சேவையன்றி அமைச்சரவை அமைச்சு அந்தஸத்தை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு செயற்பட்டமை.

• அமைச்சராவதற்கு முன்னர் காணாமல் போனவர்கள் அரசியல் கைதிகள் சம்பந்தமாக கண்ணீர் வடித்தவர் அரசாங்கத்தில் பங்காளியானதன் பின்னர் இவர்கள் பற்றி எவ்வித செயட்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்பதோடு தாம் இவர்கள் சம்பந்தமாக பேசினால் சிங்கள மக்கள் தன்னை இனவாதியாக அடையாளப்படுத்துவார் என விளக்கமளித்தார்

• சிறைக்கைதிகளை பார்வையிட அழைத்தபோது மறுப்பு தெரிவித்தமை.

• கிளிநொச்சியில் 300 நாட்களை கடந்து நடைபெறும் காணாமல் போனவர்களின் போராட்டத்திற்கு அவர் ஒரு நாள் கூட செல்லவில்லை  அதில் பங்குகொள்வதற்கான அனுமதியும் எமக்கு மறுக்கப்பட்டது.

• அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தலைநகரில் ஆர்ப்பாட்டங்களை நடத்த முனைத்தபோது அதனை தடுத்து நிந்தித்தமை.

• அமைச்சில் மக்களுக்கு சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு இணைப்பு செயலாளர்களோ , ஊடக செயலாளரோ இல்லை இதுசம்பந்தமாக வினவுகின்ற போது இது அவசியமற்றதென மறுத்திருந்தார் .

• கேப்பாபிளவு மக்களின் காணி பிரச்சினை சம்பந்தமாக எவ்வித தலையீட்டையும் செய்திருக்கவில்லை அத்தோடு எமது பங்களிப்பும்  மறுக்கப்பட்டது

• தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு தலைவராக மூன்று மொழிகளும் தெரிந்த தமிழர் ஒருவரை நியமனம் செய்ய கோரிக்கை விடுத்த போதும் தமிழ் மொழியே அறியாத ஒருவர் நியமனம் செய்யப்பட்டார்.

• கட்சியில் முறையான கூட்டங்கள் நடத்தப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்படுவதில்லை மாறாக முடிவுகளை அறிவிக்கும் கூட்டங்களாகவே அவை அமைத்திருக்கும்.

• கட்சி உறுப்பினர்களுக்கோ ஆதரவாளர்களுக்கோ தலைநகர் மக்களுக்கோ எவ்வித வேலைவாய்ப்புகளும் பெற்றுக்கொடுக்கவில்லை.என குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. தன் சமுதாயத்திடம் உண்மையாக நடந்துகொள்ள முடியாதவன் முஸ்லிம்களை அடிப்படைவாதியென்றான். தன் கட்சி ஆதரவாளர்களிடம் ஜனநாயகத்தை கடைபிடிக்காதவன் முஸ்லிம்களை ஜனநாயக விரோதிகளென்று மறைமுகமாக கூறினான். கடந்த முறை ரோசியின் வெற்றியை கொள்ளையடித்ததை போல் இம்முறையும் முடியாது என்பதை அறிந்தே இனவாத அரசியலை கையிலெடுத்திருக்கிறான்

    ReplyDelete
  2. எவன் ஒருவன் முஸ்லிம்களை இழிவு படுத்த வேண்டும் என்று மனதில் ஒன்றும் வாயில் ஒன்றும் சொல்கின்றானோ அவனுக்கு அல்லாஹ் கேவலத்தை ஏற்படுத்துவான்.அதன் ஓர் அம்சம்தான் இவரின் தண்டவாளம் கிழிய ஆரம்பித்து இருக்கிறது.

    ReplyDelete
  3. மனோ கணேசனுக்கு இது வேண்டியதுதான் . முஸ்லிம்கள் எப்போதுமே தங்களுக்கு சார்பாக எதாவது பேசினால் அது எவராக இருந்தாலும் அவர்களை பாராட்டியும் அதை தவிர்த்து எதிராக பேசினால் , தங்களுடைய சில்லறைத்தனத்தை காட்டாமலும் விட மாட்டார்கள் .

    ReplyDelete

Powered by Blogger.