April 15, 2018

இனவாதமும், இனவாத அரசியலும்..!!

-யு.எச். ஹைதர் அலி-

இலங்கையின் பிரபல தலபாட நிறுவனமாகிய டொன் கரோலிஸ் என்பவரின் புதல்வாரன டொன் டேவிட் கிலார்க் தனது வியாபார நலனுக்காக போர்திய அனகாரிக்க தர்மபால என்கின்ற பெயரையும் அனகாரிக்கவையும் நாம் நன்கறிவோம். அனகாரிக்க தர்மபாலவுக்கும் முஸ்லிம்களுக்குமிடையேயான முரண்பாடு வர்த்தகரீதியான போட்டியே, அதனை நாம் இனவாத மாக பார்க்க முடியாது, பெரும்பான்மை சிங்கள மக்கள் கூட தர்மபாளவின் கருததுக்களை ஏற்றுக் கொள்ளவில்லை. மக்கள் அதனை நிராகரித்தனர். ஆரம்ப காலத்தில் தோன்றிய ஜாதிக விமுக்தி பெரமுன, சிங்ஹல மஹஜன பக்ஷய போன்ற இனவாதத்தைத் துண்டும் கட்சிகளையும் மக்கள் நிராகரிக்கவே செய்தனர். இதில் இருந்து ஓரு உண்மை எமக்கு புலப்படுகிறது பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இனவாதத்தை விரும்புபவர்கள் அல்ல என்று.

தேசியவாதம் என்பது வேறு, இனவாதம் என்பது வேறு, தேசியவாதத்தை இனவாதமாகப் பார்க்கக் கூடாது. ஆசிய நாடுகளில் இனவாதமும் சாதி வேறுபாடுகளும் தேசியவாதத்தைப் படாத பாடுபடுத்தியுள்ளன. இன்று எமது இலங்கை வாழ் முஸ்லீம்கள் தேசியவாதத்தை இனவாதமாக பார்க்க முற்படுகின்றனர்.

சிங்கள இனவாதக் கட்சிகள் செயலிழந்து போகும் தறுனத்தில் 1977ம் ஆண்டு J.R. ஜயவர்தன என்கின்ற வேட்டியனிந்த முதலாலித்துவ வாதியின் ஆசீர்வாதத்தோடு திட்டமிட்டு தனது சொந்த அரசியல் நலனுக்காக இந்த நாட்டில் சிறுபான்மை கற்சிகள் இன றீதியாக உருவாக்கப்பட்டன. முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாலர் காங்ரஸ் போன்றவை.

பிற்காலத்தில் இக் கற்சிகள் அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்திகளாவும் மாறின, இவையெல்லாம் சிங்களவர் மத்தியில் பீதியையும் பொறாமையையும் தோற்றுவித்தது. இதனாலேயே சிஹல உறுமய, சிங்ஹலே மாகா சம்மத பூமி புத்ர, RAVANA BALAYA , BBS, BJP போன்ற கடசிகள் காளான்களைப் போல தோன்றி இனவாதத்தைக் கக்கி மக்களைத் தூண்டின.

அது இயல்பானதே. முஸ்லிம் தலைவர்கள் என்று கூறிக்கொண்டவர்களின் வீராப்புகள், முன்யோசனையற்ற பிரகடனங்கள் அரசியல் முதிர்ச்சியின்மை போன்றவை அவற்றுக்கு மேலும் எண்ணையூற்றின. முஸ்லிம் காங்ரஸ் தொடக்கம் BBS வரை அனைத்து கட்சிகளும் இந்த இன வாதத்தை மையமாக வைத்துத்தான் தங்களது அரசியல் மேடைகளை அலங்கரிக்கவும் தொடங்கின. முஸ்லிம் அரசியல் வாதிகள் கூட தங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன வாத கருத்துக்களால் முஸ்லிம் சமூகத்தை தூண்டி வாக்குப் பெற முயற்சிப்பததையும் நாம் அறிவோம்.

கசப்பான மற்றும் சில உண்மைகளையும் நாம் இங்கு பேசித்தான் ஆக வேண்டும்.

இன்று அரசியல்தொடக்கம் பாதால உலகம் வரை முஸ்லீம்கள் செயற்படுகின்றார்கள்.

ஆரம்ப காலகட்டங்களில் இந்த நாட்டில் வியாபாரிகளாக அறிமுகமாகிய முஸ்லீம்கள் வர்தக வானிப துறைகளில் பெயர் பதித்து சிறந்து விளங்கினார்கள் முஸ்லிம் வியாபாரிகள் என்றால் நன் மதிப்பும் மரியாதையும் இருந்தது.

காலப்போக்கில் முஸ்லிம்களது நடத்தையில் பாரிய மாற்றங்கள் அதாவது, விரைவாக பணத்தைக் குவிக்கும் ஆசையில் சமூக விரோத செயல்களில் ஈடுபடத் தொடங்கினர், இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய நிதி மோசடி செயல்களில் எமது முஸ்லிம்கள் சமபந்தப்பட்டிருக்கிறார்கள், இந்த நாட்டில் இடம் பெற்ற மிகப் பெரிய கொலைச்சம்பவத்தில்; முஸ்லிமகளுக்கும் தொடர்பு இருக்கின்றது, மற்றும் கள்ளக் கடத்தல், பாதாள உலகத் தொடர்பு, பாதாள உலகின் முக்கிய நபர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள் போதைவஸ்த்து வியாபாரம் போன்றவற்றில் கூடிய ஈடுபாடு….

முஸ்லிம் அரசியல் வாதிகளுக்கு கௌரவமும் அந்தஸ்தும் முஸ்லிம்கள் மத்தியிலும் அன்னிய சமூகங்கள் மத்தியில் இருந்தன.

ஆனால் இன்று அரசியல் அதிகாரமும் செல்வமும் செல்வாக்கும் ஒன்றுசேர அவர்களது நடத்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அரசியலைக் கொண்டு நடத்த குண்டர் படைகள், தனது அரசியல் நலன்களுக்காக தனது சமூகத்தையே ஏலம் போடும் அரசியல் கோமாளிகள், இவர்களை எமது சமூகத்தின் தலைமைகலாக ஏண்ணும் காலமெல்லாம் நாம் இந்த நாட்டில் அரசியல் அநாதைகலாக்கப்படுவோம், இது மட்டுமல்லாது ஏனைய சமூகங்கள் எம்மை எதிரியாகவே பார்க்க முற்படும்.

முஸ்லிம்களின் நடத்தையிலும் பழக்கவழக்கங்களிலும் மாற்றம் ஏற்படாத வரையில் இந்த சமூகம் தலை நிமிர்ந்து வாழ முடியாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை;.

மக்களை இனவாதிகளாக பிரதேசவாதிகளாக நடத்துவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் முதலில் நிறுத்தவேண்டும்;. மக்களை சுயமாக சிந்தித்து செயல்பட வைக்கவேண்டும் அதற்கு அவர்கள் கல்வியில் கரிசனை காட்ட வேண்டும். மற்றவர்கள் கருத்துகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் மார்க்க நெறி முறைகளை சரியான முறையில் பின்பற்றும் சமூகமாக நமது சமூகம் மாற்றம் பெற வேண்டும். அவையெல்லாம் எம்மிடம் இருந்த காலத்தில் நாங்கள் மதிக்கப்பட்டோம் அவற்றைக் கைவிட்டதனால் நாங்கள் மிதிக்கப்படுகிறோம் அவ்வளவுதான்!

4 கருத்துரைகள்:

Mr Hyder Ali What you have said perfectly absolute correct. Most of our people realise it . Becsuse of our racial parties if openly say for minister post or national chit allocation they have divided our community and created misconceptions among other community
We can't see coexistence peaceful life specially other than north east . Those we were living peacefully . We two third of Muslims live with Singhalese brothers . They are not communal . Present unrest misconceptions created by our so called leaders.
These problems addressed by our politicians Jammiyathul ulema our educated leaders immediately. Otherwise we Muslims specially living among Singhalese brothers face difficult situations in schooling jobs in businesses almost in day to day life
I can remember about two three decades before in Singhalese majority areas head of local government were Muslims . Singhalese people not communal minded
As Mr Hyder Ali think we have to bear there are lots of reasons which contributed present unrest .Difficulties Muslims face .
This is not religious problem . We have to change ourselves . This is NOT MUSLIM COUNTRY ss many of us think.
Our leaders should look into this and take some immediate concrete action without any delay
There will be good suggestions and real facts in the article being published in Daily News by Pro Nuhman

இலங்கை அரசியலின் பரிணாம வளர்ச்சியில் இன்று பண்பாடுகளில் முதிர்ச்சி பெற்ற கட்சியினர் JVPயினரே ஆகும்.

ஊழலுக்கும் அராஜகங்களுக்கும் எதிராகவும்,  அனைத்து இலங்கையர்களினதும் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் இன ஐக்கியத்துக்கும் ஆதரவாகவும் பரந்த நோக்கோடு சுயநலமற்று உழைப்பதில்  அவர்களுக்கு நிகர் அவர்களே.

முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்  கொண்டிருக்காவிட்டாலும் இஸ்லாமிய நீதங்களுக்கு நெருக்கமாக அரசியல் செய்பவர்கள் அவர்களே

முன்னைய அரசாங்கம் மட்டுமில்லை இனவாதம் தற்போதய அரசும் தான் இந்த பிரசுரத்தில் முக்கிய நபரின் புகைப்படமில்லை அது தான் ரணில் என்ற நாயும் அவன் தான் கண்டி திகன கலவரத்தை திட்டம்போட்டு செய்தான் முதலாவது நம்பிக்கையில்லாத பிரேரணையில் இருந்து தப்புவதுக்காக.

யூ எச் ஹைதர் அலி அவர்களே, முன்னுக்கு பின் முரணான விடயங்களும், பிழையான வரலாறுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, நீங்களாகவே இனவாதம் என்றும் தேசிய வாதம் என்றும் தீர்மானித்து சில அறிவுரைகளையும் கூறியுள்ளீர்கள். சில விடயங்களை உங்களுக்கும் வாசகர்களினதும் சிந்தனைக்கு விடுகிறோம்.
** அநாகரிக தர்மபால ஏன் சிங்களவர்களும் வியாபாரத்தில் முன்னேற வேண்டும் என்று கூறாமல்( அநாகரிக்காவின் நிறைய விடயங்கள் முஸ்லிகளுக்கு எதிரானது என்பது வேறு விடயம் - 1915 சிங்கள முஸ்லீம் கலவரம் ) முஸ்லிம்களுக்கு போட்டியான வியாபாரத்தை ஊக்கு வித்தார். இங்கேயே ஒரு இனம் குறி வைக்கப்படுவது இனவாதம் இல்லையா?
** முஸ்லிம்கள் தேசிய வாதத்தை இனவாதமாக பார்க்கிறார்கள் என்ற விடயத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதோடு, தலைவர் அஷ்ரப் அவர்கள் மிகவும் தூர நோக்குடன் தேசிய ஐக்கிய முன்னணி - NUA என்ற கட்சியையும் உருவாக்கினார்கள் ( முஸ்லீம் காங்கிரஸ் என்பது காலத்தின் தேவையாக இருந்தது. தமிழர் போராட்டமும் பேரினவாத அரசியல் தலைவர்களும் ஜே ஆர் உட்பட ) இஸ்லாம் அல்லாஹ்வை தவிர அனைத்து கடவுள்களையும் நிராகரிக்கிறது. அதே நேரம் மாற்று இனத்தவருடனும், மாற்று மதத்தை வழிபாடுபவர்களையும் நீதமாக நடத்துமாறே கூறுகிறது. அதை இலங்கை முஸ்லிம்கள் மிகப்பெரும்பான்மையானவர்கள் கடைப்பிடித்தே நடக்கிறார்கள்.
** சிறு பான்மை காட்சிகள் ஜே ஆரின் ஆசீர்வாதத்தோடு உருவாக்கப்பட்டது என்பது மிகப்பெரும் காமெடி. " தமிழர் போராட்டம்" "சர்வகட்சி மாநாடு" "எம் சி எம் கலீல் - முஸ்லிம்கள் விழித்தெழும் காலம் வந்து விட்டது என்ற அறிக்கை' " முஸ்லீம் கவுன்சில் - தலைவர் பதுர்தீன் மஹ்மூத், செயலாளர் எம் எச் எம் அஷ்ரப்" " இலங்கை தொழிலார் காங்கிரஸ் - தோற்றம் 1939 - உருவாக்கியவர் தொண்டமான்"
** ஒரு சில தனி நபர்களின் சட்டவிரோத செயல்களை முஸ்லிம்கள் என்று கூறுவதை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். சட்டம் ஓழுங்கு அரசாங்கத்தின் கையில் உள்ளது. இந்த நாட்டில் சிங்கள போலிஷ், பாதுகாப்பு படையே உள்ளது.
** தற்போதைய முஸ்லீம் கட்சிகளின் அரசியல் வாதிகள் சுயநல அரசியல் வியாபாரிகள் என்பதில் மாற்று கருத்து கிடையாது. அவர்களுக்கு உண்மையான அரசியல்( தேசிய ரிதீயான கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், அரசியல் சித்தாந்தம்..etc.) அறிவு போதுமானதாக இல்லை என்பது ஏற்றுக்கொள்ளப்படவேண்டியது என்பதை தெரிவிப்பதோடு. முஸ்லிம்களுக்கு ஏட்பட்டுள்ள தற்போதைய பிரச்சினைக்கு முழுப் பொறுப்பும் ஹக்கீமையும், றிசாத்தையுமே சாரும்.

Post a Comment