Header Ads



ஜனாதிபதி மைத்திரி, போக்கிடம் இல்லாமல் இருக்கிறார் - நாமல்

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்சியையும் இழந்து போக்கிடம் இல்லாமல் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தங்காலை கால்டன் இல்லத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்ற பிரதேச சபைகளுக்கு வீதியை நிர்மாணிக்க நிதி வழங்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் கூறுகின்றார்.

இந்த அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் வீதிகளை நிர்மாணிக்கவில்லை. வீதியை அல்ல குறைந்தது ஒரு கால்வாயை கூட நிர்மாணிக்கவில்லை.

பொதுஜன பெரமுன வெற்றி பெற்ற பிரதேச சபைகளுக்கு நிதி தர மாட்டோம் எனக் கூறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது.

ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றிய இவர்களால் தமது அமைச்சு பதவியை கூட காப்பாற்றிக்கொள்ள முடியாத நிலைமையில் தற்போது நாட்டின் அபிவிருத்தி பற்றி பேசுகின்றனர் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. இந்த உலகில் இவன் போன்ற காவாளிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். இத்தகைய காவாளிகளின் கருத்துக்களுக்கு இங்கு முக்கியத்துவம் கொடுப்பது இந்த இணையத்தளத்தின் துய்மையான நோக்கத்துக்கு இயைபாக இருக்கின்றாதா என்பதைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  2. this dogs are barking because M3 still not realized what is executive power and how to use it to instruct the officers to take action against this criminals to put them in dogs cage.

    ReplyDelete

Powered by Blogger.