Header Ads



இந்த முஸ்லிம் பாடசாலையை, கவனிப்பது யார்..?


-JM- Hafeez-

கட்டுகஸ்தோட்டை  கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை,  பானகமுவ முஸ்லிம் வித்தியலாயம் பலவேறு குறைபாடுகளுடன் காணப்படுவதாகவும் கட்டிடங்கள் உடைந்த நலையில் கானப்படுவதாக வும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சுமார் 150 க்கும் மேட்பட்ட மாணவர்கள் ஒன்பதாம் ஆண்டு வரை கல்வி பயின்று வந்த இப் பாடசாலையில் தற்போது ஐந்தாம் ஆண்டு வரை மட்டும் வகுப்புகள் நடைபெறுவதாகவும்தெர்ரிவித்தனர். இதனால்  மாணவர் எண்ணிக்க சுமார்  70  வரை குறைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடசாலைக்கு சொந்தமான கட்டிடங்கள் பல உடைந்து ஆபத்தான நிலையில் கானப்படுவதாகவும் இதுதொடர்பில் 2017 ம் ஆண்டு தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து அதன் பின் அவர்கள் அதற்கு  உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவித்தும் இது வரை  எவ்வித  அபிவிருத்தியும்   இடம்பெற வில்லை என்றும் பாடசாலையின் அபிவிருத்திப் பணியில் ஈடுபட்டு வரும் ஜே.சஹாப்தீன் என்றபெற்றார் தெரிவித்தார்.

இப் பாடசாலையில்  கல்வி கற்கும் மாணவர்கள் எண்ணிக்கையை  அதிகரிப்பதற்கும் பாடசாலயின்பௌதீக வளங்ளைப் பாதுகாத்துக்கொள்ளவும்  பலவேறு அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும்  என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தான் பல முறை இதுதொடர்பில்  சம்பந்தப்பட்ட  அதிகாரிகளை  சந்தித்து பேசி உள்ளதாகவும்  இது வரை   சாதகமான பதில் எதுவும்  கிடைக்க வில்லை  என்றும் அவர்மேலும்தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவளகம், மத்திய மாகாண சபை போன்றவற்றிலிருந்து சமபந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்களின் பிரதிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. 





No comments

Powered by Blogger.