Header Ads



அக்கரைப்பற்று மாநகர, பிரதேச சபைகளின் கவனத்திற்கு...!!


அக்கரைப்பற்று மாநகர மற்றும் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் அன்றாடம் சில்லரையாக சேகரிக்கப்படும் மடுவத்தை சந்தை மற்றும் வீட்டுக்கழிவுகள் அனைத்தும் மொத்தமாக கொண்டு சேர்க்கப்படும் இடம்தான் அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட ஆலிம்நகர் கிராமமாகும்.

இக்குப்பை மேடு மக்கள் குடியிருப்புக்களில் இருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவிலையே அமைந்துள்ளது.

கடந்த பத்து வருடங்களாக மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சேகரிக்கப்படும் அனைத்துவிதமான கழிவுகளும் அங்குதான் சங்கமிக்கின்றன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இக்குப்பை மேட்டில் ஏற்ப்பட்ட பாரிய தீயை அனைக்க தீயனைப்பு பிரிவினர் ஒருநாள் முழுவதும் போராடினர் ஆனால் முழுமையாக அனைக்க முடியவில்லை இன்றும் புகைந்துகொண்டே இருக்கின்றது அந்த புகை அக்கிராமத்தையே ஆக்கிரமத்துக்கொண்டது மட்டுமல்லாமல் துர்நாற்றமும் வீசுவதால் அப்பிரதேசத்தில் வசிக்கும் தாய்மார்கள் குழந்தைகள் வயோதிபர்கள் கற்பினிதாய்மார்கள் என அனைவரும் பெரும் அசௌகரியத்துக்கு முகம்கொடுத்துள்ளனர் இதனால் தொற்று நோய்கள் ஏற்ப்படலாம் எனும் அச்சமும் அவர்களை தொற்றிகொண்டுள்ளது.

அப்பிரதேசத்தில் பாரிய சுகாதார சீர்கேடுகள் ஏற்ப்பட்டுள்ளது

அதுமாத்திரமன்றி இப்பிரதேசத்தில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கமும் தொல்லையும் அதிகரித்து மக்களை அச்சுறுத்தலாக இருப்பது மாத்திரமன்றி கால்நடைகளுக்கும் தீங்குவிளைவித்து நஷ்டத்தை மக்களுக்கு ஏற்படுத்துகின்றது இத்தனைக்கும் இப்பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் அன்றாடம் கூலிவேலை செய்து தன்வயிற்றை காப்பாற்றும் மக்கள் என்பது குறிப்பிடதக்கது.

அதுமாத்திரமன்றி அக்குப்பை மேட்டில் தன் இரையை தேடிக்கொள்ளும் காகக்கூடடங்கள் தங்கள் தங்குமிடங்களாக அக்கிரமத்தை ஆக்கிரமித்துள்ளதால் மக்களின் உடமைகளுக்கும் சேதத்தை ஏற்படுத்துகின்றது.

எனவே அக்கரைப்பற்று இருசபைகளிலும் ஆட்சி அதிகாரங்களில் உள்ளவர்கள் இம்மக்கள் அன்றுபோல் இன்றும் நிம்மதுயாக வாழ வழியமைத்து கொடுக்கவேண்டியது உங்கள் கடமையல்லவா?

இவ்விடத்தில் குப்பைகள் சேகரிப்பதை உடன் நிறுத்தவேண்டும் என்பதே அப்பிரதேச மக்களின் கோரிக்கையாகவுள்ளது அதற்காக போராடவும் தயாராகவும் உள்ளனர்

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாநகர ஆனையாளர் சபை முதல்வர் பிரதிமுதல்வர் மற்றும் பிரதேச சபை செயளாளர் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்கள் இப்பிரச்சினையை உடன் கவனத்தில் எடுக்கவேண்டும்.

இம்முறை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இரண்டு உருப்பினர்கள் இக்கிராமத்திலிருந்து தெரிவாகியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Sufiyan A Moh Ramees

No comments

Powered by Blogger.