Header Ads



ஐ.தே.க. தவிசாளர் கபீர், பிரதித் தலைவர் சஜீத், தேசிய அமைப்பாளர் நவீன், பொருளாளர் ஹர்ச, உப தலைவர் ரவி


ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.

அதன்படி , கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் , தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதித் தலைவராக சஜுத் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , ரவி கருணாநாயக்க உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் , கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

மற்றைய பதவிகள் நாளைய தினம் அறிவிக்கப்படும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை இன்று மாலை அலரிமாளிகையில் கூடியது.

இதன்போதே , இந்த பதவிகளுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எட்டப்பட்டுள்ள இறுதி தீர்மானம் நாளை காலை கட்சியின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

2 comments:

  1. Changing pillows will not solve the problem.

    ReplyDelete
  2. மக்கள் எதிர் பார்த்தது தலைமை துவ மாற்றத்தை; மாற வேண்டியதே அது , அதற்கு பல காரணம்.

    # பலவீனமதலமைதான் , அடுக்கடுக்கான 19 தோல்வி
    # UNP யால் ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்த முடியாமல் போனது
    # தலைவருக்கே ஜனாதிபதியாக வர முடியுமா ? [ பாம்பறியும் பாம்பின் கால் ] என்ற அவ நம்பிக்கை
    # பொய் சொல்லி மக்களை ஏமாற்றி பிரதமரானது , திருடனை பிடிப்பதாக சொன்னது , -மோசடி செய்தவர்களின் சொத்துக்களை நாட்டுடைமையாக்குவது - இது போன்ற நிறைய பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியது .
    # மத்திய வங்கி விவகாரம்
    # முஸ்லிம் வாக்குகளை கணிசமாக பெற்றும் ,கண்டி தாக்குதலில் , பின்னர் அணைத்து முஸ்லிகளின் அவ நம்பிக்கையும் , வெறுப்பையும் , பெற்றுக்கொண்ட பின்பும் தலைவராக நீடிப்பது , போன்றைவைகள் .

    ரணிலின் தலைமைத்துவ கட்சிக்கு ,முஸ்லீம் கள் ,இனியும் ஆதரிப்பார்களா என்பது சந்தேகமே ? முஸ்லிம்கள் என்றும் UNP கட்சியோடு , அதை தக்கவைக்க வேண்டுமானால் தலைமைதான் மாறவேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.