Header Ads



ஈழம் எப்போதும், நடக்க போகும் விடயமல்ல - ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவிப்பு

நான் லண்டனுக்கு விஜயம் செய்யும் போது விடுதலைப் புலிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்டியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி. இவர்கள் கோரும் ஈழம் எப்போதும் நடக்க போகும் விடயமல்ல என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையை பிளவுப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு எந்த விதத்திலும் தனது உறுதுணை கிடைக்காது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துக்கொள்ள லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி பீ.பீ.சி சிங்கள சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என கூறியுள்ள ஜனாதிபதி நாட்டில் எவ்வித இரகசிய முகாம்களும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது அரசாங்கத்தின் கீழ் எவ்விதமான இரகசிய முகாம்கள் இலங்கையில் இல்லை. சிறை முகாம்கள், இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸாருக்கு சொந்தமான இடங்கள் என எந்த இடத்திலும் எவரும் இரகசியமாக தடுத்து வைக்கப்படவில்லை.

நான் லண்டனுக்கு விஜயம் செய்யும் போது விடுதலைப் புலிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இப்டியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி. இவர்கள் கோரும் ஈழம் எப்போதும் நடக்க போகும் விடயமல்ல.

போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு படையினர் கையகப்படுத்திய வடபகுதி மக்களுக்கு சொந்தமான காணிகளில் 80 வீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

தமிழ், சிங்கள புத்தாண்டு பரிசாக 560 ஏக்கர் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டது. இது குறித்து எவரும் பேசுவதில்லை. அப்படி இருக்கும் நிலையில் இன்னும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் அதனை வியாபாரமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.

காணி, காணாமல் போனவர்கள் மட்டுமல்லாது அரசியல் கைதிகள் தொடர்பில் வடக்கில் நடக்கும் ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் அரசசார்பற்ற அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள். இவை சாதாரண மக்களை தவறாக வழிநடத்தும் வேலை.

நாட்டை பிரிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நான் எந்த வகையிலும் உறுதுணை வழங்க மாட்டேன். அப்படியான நபர்களுடன் எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் நடத்த போவதில்லை எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. எங்களிடம் இருந்து பறித்தவற்றை மீண்டும் தருவது புத்தாண்டு பரிசு. ஆஹா பிரமாதம். நீங்க நடத்துங்கோ

    ReplyDelete
  2. தமிழ் மக்கள் அனைவரும் எப்போதோ ஈழம் என்ற சனியனை மறந்து விட்டார்கள்.

    இதெல்லாம் ஒரு செய்தி என்று - Jaffna News பிரசுரிக்குது.???

    ReplyDelete
  3. Jaffna news என்பது பொது news தளம் இவர்கள் இலங்கை செய்தி எதுவாக இருந்தாலும்
    பதிவிடுவது வழமை நீங்கள் அவர்கலை குறை கூர்வதில் அர்த்தம் இல்லை

    ReplyDelete

Powered by Blogger.