Header Ads



ஆற்றல்மிகு போர் வீரனை இழந்த, முஸ்லிம் சமூகம்

றியாஸின் மரணச் செய்தி கேட்டு உறைந்து போனேன். 

அவர் என்னோடு கடந்த 2005ஆம் ஆண்டு தொடக்கம் பழக்கமானவர். 

13 வருட நட்பு. உடன் பிறவா சகோதரர். 

காத்தான்குடி மற்றும் ஏனைய முஸ்லிம் ஊர்களின் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டிருந்தவர். 
சிங்கபுர இராணுவப் பயிற்சி முகாமில் எனக்கு கீழ் கடமையாற்றிவர். 

இலங்கை இராணுவப் புலனாய்வுத் துறையில் திறமையாக செயலாற்றியவர். 

கிழக்கு மாகாண இறுதி யுத்தத்தின் போது பல வெற்றிகரமான நடவடிக்கைகளில் தானாக முன் வந்து பங்கெடுத்தவர். 

தொப்பிகல தாக்குதலின் போது எனது அணியில் இருந்தவர். வெலிகந்தையிலிருந்து ஊடறுத்துச் செல்லும் அணியில் இருந்தவர். 

எதிரிகளின் பல தாக்குதலை முறியடிக்கக் கூடிய பெறுமதியான தகவல்களை வழங்கியவர். 

இரவு பகல் பாராது, இந்த சமூகத்திற்காக உழைத்தவர். 

இராணுவ ரோந்து நடவடிக்கைகளின் போது எப்போதும் என் பின்னாலேயே விரும்பி வருபவர். 

என்றும் நானா என்று மரியாதையுடன் அழைப்பவர். பல தடவைகளில் நான் கடினமாக நடந்து கொண்டாலும் மரியாதையை மீறாதவர். 

அமைதியாக பண்பாகவும் அன்பாகவும் பேசக் கூடியவர். 

காத்தான்குடிக்குச் செல்லும் போதெல்லாம் அவரது வீட்டு கட்டாயம் வந்து போக வேண்டுமென உத்தரவு போடுபவர். 

இறுதியாக 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்தபோது பழைய ஞாபகங்களை மீட்டி அவ்வாறே எப்போதும் இருக்க வேண்டுமென எதிர்பார்த்தவர். 

இராணுவப் புலனாய்வுத்துறையினர் இழந்த முக்கிய நபர்களில் ஒருவர். 

இன்னும் நிறையவே அவரது திறமைகள் இருக்கின்றது. ஆனாலும் இந்தப் பொதுத்தளத்தில் அவை சொல்ல முடியாதவை.

அவருக்காக துவாச் செய்தவனாக…

-ஆதம் றிஸ்வின்-

2

சகோதரர் ரியாஸின் மரணச் செய்தி கேள்வியுற்று ஒருகணம் நிலை குழைத்து நின்றேன் நாம் எல்லோருமே கழாகதிர் மீது நம்பிக்கை கொண்டவர்கள். அல்லாஹ் உங்கள் ஆன்மாவாய் பொருந்திக் கொள்ளட்டும். என் வாழ்வில் நான் எளிதில் மறந்துவிட முடியாதவர். என் இக்கட்டான சூழ்நிலைகளில் எண்தோளோடு நின்று உழைத்தவர் அவரின் போர்குணங்களை சொல்லிவிடுவதட்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. எல்லாவற்றுக்கும் அல்லாஹ் கூலியை தருவான் என்பீர்கள்.

இன்னும் கஷ்டமாகத்தான் இருக்கிறது என்று நகைச்சுவையாக கூறுவார் நிச்சயமாக அதட்கான கூலியை உங்களுக்கு தருவான் அவரின் வீரத்திட்கு சான்றாக ஒன்றை நானும் அவரும் அடிக்கடி பேசிக் கொள்வோம்.

கொக்கட்டிச் சோலை பிரதேசத்தை விடுவிக்கும் போரை ஆரம்பித்திருந்திருத்த நேரம் வவுணதீவு பிரதேசத்தில் இருந்து புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கை விசேட இராணுவப் பிரிவினர் உடைத்துக் கொண்டு உள் நுழைய முனைந்த நேரம் அது, தப்பிச்ச செல்லும் புலிகள் மீது தாக்குதலை மேற்கொள்வதட்காக நாங்கள் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மறைந்திருக்கும் நேரம் மட்டக்களப்பு இராணுவ முகாமில் இருந்து சரமாரியாக ஆட்லறி தாக்குதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரம் அது எங்கள் அருகில் விழும் சத்தம் அதிர்ந்தது எங்களோடு கூட இருந்த சிங்கள சகோதரர் பயந்து விட்டார் . இதற்குமேல் என்னால் இங்கு இருக்க முடியாது என்னை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு விட்டு விடுங்கள் என அழுதே விட்டார், அவரை அழைத்துக் கொண்டு தனியாக விட்டுவிட்டு வந்தார்.

அவரின் மறுமை வாழ்வை சிறப்பானதாக்குவானாக

Mohamed fais

No comments

Powered by Blogger.